முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை திரு.வி.க. நகரில் 6.44 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பள்ளிக்கட்டிடம்: அமைச்சர் அடிக்கல்

சனிக்கிழமை, 19 ஜூலை 2025      தமிழகம்
Shekhar-Babu 2025-07-19

சென்னை, சென்னை திரு.வி.க.நகரில் ரூ.6.44 கோடியில் பள்ளிக் கட்டிடம்: அமைச்சர் சேகர்பாபு அடிக்கல் நாட்டினார்

சென்னை திரு.வி.க.நகரில், ரூ.11.77 கோடி மதிப்பீட்டில் இரண்டு நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையக் கட்டிடம், மற்றும் சென்னை உயர்நிலைப் பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் சேகர்பாபு நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-  இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு இன்று (நேற்று) ரூ.11.77 கோடி மதிப்பீட்டில் திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு 73 மற்றும் வார்டு 75-ல் இரண்டு நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையக் கட்டிடம், மற்றும் சென்னை உயர்நிலைப் பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் மற்றும் மாநகராட்சி மூலதன நிதி ஆகியவற்றின் கீழ் திரு.வி.க.நகர் மண்டலம், வார்டு-73, குக்ஸ் சாலை வாடியா நகர் பகுதியில் ரூ.3.05 கோடி மதிப்பீட்டிலும், வார்டு-75, நம்மாழ்வார் பேட்டை 2-வது தெரு பகுதியில் ரூ.2.28 கோடி மதிப்பீட்டிலும் என இரண்டு நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையக் கட்டிடத்திற்கான பணிகளை அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.  

இதனை தொடர்ந்து, வார்டு 73, புளியந்தோப்பு அம்மையம்மாள் தெரு பகுதியில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.6.44 கோடி மதிப்பீட்டில் சென்னை உயர்நிலைப் பள்ளிக்கான கட்டுமானப் பணிகளை அமைச்சர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இப்பள்ளிக் கட்டிடம் 17,569 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளத்துடன் கட்டிபட்டவுள்ளது. இதில் 19 வகுப்பறைகள், தலைமையாசிரியர் அறை, இரண்டு ஆசிரியர் அறை, மேடை மற்றும் கழிப்பறை வசதிகளுடன் கட்டிப்படவுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து