Idhayam Matrimony

ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பதில் பெருமை: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

திங்கட்கிழமை, 21 ஜூலை 2025      தமிழகம்
Sivashankar 2023-05-08

அரியலூர், கங்கைகொண்ட சோழபுரம் கோயில் எழுப்பிய ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பதில் பெருமை கொள்கிறோம் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஜூலை 23-ம் தேதி மாமன்னன் ராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை திருவிழா வெகு விமரிசையாக தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி, கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெறுவதை மாநில போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஆட்சியர் பொ.ரத்தினசாமி ஆகியோர் நேற்று (ஜூலை 21) பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியதாவது: ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஜூலை 23-ம் தேதி காலை மங்கள வாத்திய நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. விழாவில் நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுற்றுலாத் துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன், இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சிதம்பரம் மக்களவை உறுப்பினர் திருமாவளவன் மற்றும் நான் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளோம்.

மேலும், கலை பண்பாட்டுத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகளும், முனைவர் பர்வீன் சுல்தானா தலைமையில் சோழர்கள் புகழுக்கு பெரிதும் காரணம் - நிர்வாகத் திறனே! போர் வெற்றிகளை! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. மாலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் மாமன்னர் ராஜேந்திர சோழனின் வரலாற்று நாடகமும், நையாண்டி மேளம், கரகாட்டம், மயிலாட்டம், கிராமிய பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கலைஞர்கள் நடத்தவுள்ளனர்.

காட்டைத் திருத்தி நகர் புறங்கள் மற்றும் கிராமப் புறங்களை அமைத்து மக்கள் பயன்பெறும் வகையில் பொன்னேரி வெட்டி, பெருமை மிக்க கங்கைகொண்ட சோழபுரம் கோயில் எழுப்பிய மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பதில் பெருமை கொள்கிறோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து