முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்து தோல்விக்கு நடுவர்களே காரணம்: நாசர் உசைன் கடும் சாடல்

செவ்வாய்க்கிழமை, 5 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Nasser-hussian

Source: provided

லண்டன்: இங்கிலாந்து தோல்விக்கு நடுவர்களே காரணம் என்று அந்த அணியின் முன்னாள் வீரர்  நாசர் உசைன்  கடும் சாடியுள்ளார்.

இந்தியா வெற்றி...

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. கடைசி நாளில் இந்தியாவின் வெற்றிக்கு 4 விக்கெடுகள் தேவையாக இருந்தது. ஆனால் யாருமே எதிர்பாராத வகையில், சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அபாரமாக செயல்பட்டு இந்தியாவுக்கு வெற்றியைத் தேடி தந்தனர். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதுவே முதல் முறையாகும்.

குற்றச்சாட்டு...

இந்நிலையில் போட்டி நான்காவது நாள் முடிந்து இருந்தால் இங்கிலாந்து வெற்றி பெற்றிருக்கும் எனவும் நடுவர்கள் தவறு செய்து விட்டதாகவும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் உசைன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:- திங்கட்கிழமை வேலை ரசிகர்கள் இந்த போட்டியை பார்க்க பெருமளவு பணத்தை செலவழித்து இருக்கிறார்கள். அவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் கூடியிருந்தது. அவர்களுக்கு ஆட்டத்தின் கிளைமாக்ஸ் 4-வது நாளிலே அரங்கேற அனுமதித்து இருக்க வேண்டும்.

ஏன் முடித்தார்கள்...

நான்காவது நாளில் இந்த போட்டி நடந்திருந்தால் ஒருவேளை இங்கிலாந்து அணி வெற்றிக்கு தேவையான 35 ரன்கள் அடித்திருக்கலாம். ஆட்டம் மேலும் 42 முதல் 43 நிமிடம் வரை நடத்தலாம் என்ற விதி இருந்த போதும். ஏன் அரை மணி நேரத்திற்கு முன்பே போட்டியை முடித்தார்கள் என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை.

நிச்சயம் அவமானம்...

நடுவர்கள் இரண்டு அணியிடமும் இது குறித்து கேட்டிருக்க வேண்டும். இரண்டு அணிகளில் யாராவது ஒருவர் கூட நாங்கள் நாளை விளையாடுகிறோம் என்று சொல்லி இருந்தால் பரவாயில்லை. நடுவர்களுக்கு கொஞ்சம் கூட அறிவு என்பதே கிடையாது. நேற்று ஆட்டம் நடைபெறாமல் இருந்தது நிச்சயம் அவமானம் தான். என்று நாசர் உசேன் கூறியிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து