முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

புதன்கிழமை, 6 ஆகஸ்ட் 2025      தமிழகம்
Stalint 2025-08-06

Source: provided

சென்னை: 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் வேலைவாய்ப்புத் துறைகள் மூலம் 2.65 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்கி உள்ளதாக தெரிவித்துள்ள அவர், 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் உதவிப் பொறியாளர்கள், நகரமைப்பு அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு பணி இடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 2,538 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரும் உச்சத்தை தொட்ட மகிழ்ச்சியான செய்தியை கூறுகிறேன். வளர்ச்சி விகிதம் 11.19 சதவீதம் என மத்திய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீடு கூறுகிறது. 14 ஆண்டுகளுக்கு முன் தி.மு.க. ஆட்சியில் இறுதியாக இரட்டை இலக்கம் 11.15 சதவீதமாக இருந்தது. சாதாரணமாக இது நடந்து விடவில்லை. நெருக்கடி, அவதூறுகளை கடந்து சாதித்திருக்கிறோம். இது எனக்கான தனிப்பட்ட வெற்றி மட்டுமில்லை. கூட்டாக பெற்ற வெற்றி.

திராவிட மாடல் ஆட்சிக்கான நற்சான்றிதழ் பத்திரம்தான் இந்த பொருளாதார வளர்ச்சி. இதோடு ஓய்ந்துவிடாமல் வளர்ச்சியை திராவிட மாடல் 2.0 ஆட்சியிலும் தொடருவோம். தேச முழுவதும் ஒரே பேச்சு என்றே இதை சொல்லலாம். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது. இரட்டை இலக்க வளர்ச்சியை தமிழகம் கண்டுள்ளது, தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகத்தின் பொருளாதாரம் அதிகரிக்கிறது.

கல்வி கொடுத்தால் மட்டும் போதாது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் நோக்கிலும் செயலாற்றுகிறோம். கடந்த 4 ஆண்டுகளில் டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட தேர்வாணையங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் 1.08 லட்சம் பேருக்கு பணி நியமனங்கள் வழங்கியுள்ளோம்.

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 3.28 லட்சம் பேருக்கும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறைகள் மூலம் 2.65 லட்சம் பேருக்கும் வேலைவாய்ப்பு வழங்கியுள்ளோம். திராவிட மாடல் அரசு என்பது இளைஞர்களுக்கானது. கல்லூரியில் படிக்கும் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும். இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து