முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. ஜூலை மாத விருது: சுப்மன் கில் பெயர் பரிந்துரை

புதன்கிழமை, 6 ஆகஸ்ட் 2025      விளையாட்டு
Subman-Gill-Virat-Kohli -20

Source: provided

துபாய்: ஐ.சி.சி.யின் ஜூலை மாத விருதுக்கு இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மூவர் பெயர்கள்...

இந்தியா - இங்கிலாந்து இடையேயான ‘ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி’ விறுவிறுப்பாக நடந்து முடிந்துவிட்டது. அதே வேளையில், தென்னாப்பிரிக்கா - ஜிம்பாப்வே இடையிலான டெஸ்ட் தொடரும் நடைபெற்றது. இந்த இரு தொடர்களிலும் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில், இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், தென்னாப்பிரிக்க அணி கேப்டன் வியான் முல்டர் உள்ளிட்ட மூன்று பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஷுப்மன் கில் (இந்தியா):

இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில், 754 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். மேலும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பர்மிங்ஹாமில் இரண்டு இன்னின்ஸ்கள் முறையே 269 மற்றும் 131 ரன்கள் குவித்தார். அதுமட்டுமின்றி மான்செஸ்டர் டெஸ்ட்டிலும் சதம் விளாசியிருந்தார்.

வியான் முல்டர் (தென்னாப்பிரிக்கா):

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக கேப்டனாக நியமிக்கப்பட்ட ஆல் ரவுண்டர் வியான் முல்டர், பந்துவீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசத்தினார். முதல் டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்ஸ்கள் முறையே 17 மற்றும் 147 ரன்கள் குவித்த வியான் முல்டர், 2 வது டெஸ்ட் போட்டியில் வியக்க வைக்கும் வகையில் 367 ரன்கள் குவித்தார். 400 ரன்கள் எடுத்து ஜாம்பவான் பிரையன் லாராவின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில், திடீரென டிக்ளேர் செய்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்திருந்தார். வியான் முல்டர் இந்தத் தொடரில் மொத்தமாக 531 ரன்களை, 265.60 சராசரியுடன் குவித்திருந்தார். அதுமட்டுமின்றி, 7 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.

பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து):

இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி தொடரில் தனித்துவமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பென் ஸ்டோக்ஸ், ஒரு சதம் உள்பட 304 ரன்களை குவித்திருந்தார். மேலும், 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். மேலும், மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் 141 ரன்கள் குவித்தது மட்டுமின்றி, 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 2 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 4 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 4 months ago
View all comments

வாசகர் கருத்து