Idhayam Matrimony

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: விஜய் தமிழக காவல்துறையினரின் கட்டாயத்தால்தான் வெளியேறினார் : சுப்ரீம் கோர்ட்டில் த.வெ.க. வாதம்

வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2025      இந்தியா
Vijay 2025-10-08

Source: provided

புதுடெல்லி : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் காவல்துறையினரின் கட்டாயத்தால் தான் விஜய் வெளியேறினார் என்று சுப்ரீம்கோர்ட்டில் த.வெ.க. தரப்பு வாதிட்டது.

கரூரில் கடந்த 27-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தை விசாரிக்க அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதன்படி இந்த குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த உத்தரவுக்கு எதிராக த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பில் வக்கீல் விஜய் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்நிலை யில் கரூர் கூட்ட நெரிசலில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு எதிரான மனுக்கள், சி.பி.ஐ. விசாரணை கோரிய மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தொடங்கியது. நீதிபதிகள் ஜே.கே.மஹேஸ்வரி, என்.வி.அஞ்சாரியா அமர்வு இந்த மனுக்களை விசாரித்து வருகிறது.

அப்போது விஜய் மீதான சென்னை ஐகோர்ட் கருத்துகளுக்கு எதிராக த.வெ.க. தரப்பு வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் வாதிடுகையில், “எங்கள் தரப்பின் விளக்கமே கேட்காமல் ஐகோர்ட் கருத்துகளை முன்வைத்துள்ளது. சம்பவம் நடைபெற்றதும் விஜய் தப்பித்து ஓடியதாக அரசு வழக்கறிஞர் கூறியது தவறானது. 

போலீஸ் அதிகாரிகளின் அறிவுறுத்தல் அடிப்படையில்தான் விஜய் அங்கிருந்து வெளியேறினார்; விஜய் அந்தப் பகுதியில் இருப்பது மேலும் சிக்கலுக்கு வழிவகுக்கும் என அதிகாரிகள் கூறினர். போலீசார் பாதுகாப்புடன் விஜய் அந்த இடத்தில் இருந்து வெளியேறினார். பாதிக்கப்பட்டவர்களை பார்க்க த.வெ.க. நிர்வாகிகளை போலீசார் அனுமதிக்கவில்லை.

கரூர் சம்பவத்தில் விசாரணை நடத்தப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. சுப்ரீம்கோர்ட்டே சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நடத்தட்டும். முன்னாள் நீதிபதி விசாரணையை மேற்பார்வையிடட்டும். தமிழ்நாடு காவல்துறையின் சிறப்பு விசாரணைக்குழுவை நாங்கள் ஏற்கவில்லை. கரூர் சம்பவத்தை விசாரிக்க தமிழ்நாடு போலீஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதனால் அந்த விசாரணை மீது நம்பிக்கை குறைவாகவே உள்ளது. அதற்காகத்தான் சுப்ரீம்கோர்ட் அமைக்கும் சிறப்பு விசாரணை குழுவை கேட்கிறோம்

கரூர் வழக்கில் த.வெ.க-வோ, விஜய்யோ எதிர்மனுதாரராக இல்லாத போது எதற்காக எங்களை பற்றி ஐகோர்ட் அவதூறு கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்?.. வழக்கிற்கு தொடர்பே இல்லாத வகையில் விஜய்யின் தலைமைப்பண்பு குறித்தெல்லாம் சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது” என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து