முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்ஸ்கான் நிறுவன முதலீடு விவகாரம்: தமிழக அரசுக்கு அ.தி.மு.க. கண்டனம்

புதன்கிழமை, 15 அக்டோபர் 2025      தமிழகம்
ADMK

Source: provided

சென்னை : தமிழ்நாட்டில் பாக்ஸ்கான் முதலீடு தொடர்பாக முதல்வருக்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க. தலைமை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பாக்ஸ்கான் நிறுவனம், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் சந்திப்பு நடத்தியதாகவும், 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாகவும் தி.மு.க. அரசு அறிவித்தது.  இந்நிலையில், பாக்ஸ்கான்  நிறுவனம், அத்தகைய முதலீடு குறித்த பேச்சுவார்த்தைகளை மறுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்க" என்ற ஸ்டாலினின் பொன்மொழியை, அவருக்கே நினைவுபடுத்த விழைகிறோம். ஏனெனில், பொருத்தமற்ற பொய்கள் இப்படி தான் சீக்கிரமே அம்பலப்பட்டுப் போகும். ஆண்டுதோறும் வெளிநாட்டு சுற்றுலா செல்லும் பொம்மை முதல்வர், அதனால் தமிழகத்திற்கு கிடைத்தது என்னவென்று கேட்டால், அதற்கு இவர்களின் பதில், "வெற்று பேப்பர்"! அது சரி, சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?

அம்பலப்பட்டுள்ள இந்த பொய் என்பது, பொய்களே உருவான இந்த விடியா ஆட்சி விரைவில் அம்பலப்பட்டு வீழப் போவதற்கு சாட்சி. கூகுள் நிறுவனம் கூட, பல்லாயிரம் கோடி மதிப்பிலான முதலீட்டை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அறிவித்துள்ளது. ஆட்சி என்றால் என்னவென்றே தெரியாத, முதல்-வரிடம் சிக்கித் தவிக்கும் தமிழகத்தை மீட்டு, மீண்டும் வளர்ச்சிப் பாதையில் வளமான தமிழ்நாட்டைக் கட்டமைக்க ஒரே வழி, 2026-ல் அதிமுக ஆட்சி அமைவதே. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து