முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலில் மூழ்கி உயிரிழந்த 4 பெண்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சனிக்கிழமை, 1 நவம்பர் 2025      தமிழகம்
CM-2 2025-10-28

Source: provided

சென்னை : பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக 4 பெண்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரண உதவி வழங்க உத்தரவிட்டார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பெத்திகுப்பம் கிராமத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த தேவகி, நம் பாளையத்தைச் சேர்ந்த பவானி, சின்ன கோபாலபுரம்-பெரிய கோபாலபுரத்தைச் சேர்ந்த ஷாலினி மற்றும் திருவல்லிகாலனியைச் சேர்ந்த காயத்ரி ஆகிய 4 பெண்களும் சென்னைக்கு அருகிலுள்ள எண்ணூர், பெரியகுப்பம் கடற்கரை பகுதியில் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மேற்படி நால்வரும் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த நால்வரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.3 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து