முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் தொலைநோக்கு பார்வை தெளிவாக உள்ளது : மலேசியாவில் ராஜ்நாத் சிங் பேச்சு

சனிக்கிழமை, 1 நவம்பர் 2025      உலகம்
Rajnath-Singh 2023 04 02

Source: provided

கோலாலம்பூர் : இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை எப்போதும் தெளிவாக உள்ளது என்றும், அனைத்து வித அழுத்தங்களில் இருந்தும் இந்தோ - பசிபிக் விடுபட வேண்டும் என்பதே இந்தியாவின் கொள்கை என்று மலேசியாவில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சர்களுக்கான கூட்டத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் - இந்தியா பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றிய இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “ஆசியான் - இந்தியா பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம் கடந்த 2010-ல் ஹனேயில் தொடங்கப்பட்டபோது அது தனது தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்தியது. கடந்த 15 ஆண்டுகளாக இந்த மன்றம், உரையாடல்களுக்கான தளமாக இருப்பதற்கு அப்பால், நடைமுறை பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான ஒரு கட்டமைப்பாக மாறி உள்ளது.

இந்தியாவின் இந்தோ - பசிபிக் பாதுகாப்பு தொலைநோக்குப் பார்வை, பாதுகாப்பு ஒத்துழைப்பை பொருளாதார மேம்பாடு, தொழில்நுட்ப பகிர்வு, மனிதவள முன்னேற்றம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைக்கிறது. பாதுகாப்பு, வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு இடையேயான இந்த தொடர்புதான் இந்தியா - ஆசியான் கூட்டாண்மையின் உண்மையான ஆன்மா. இந்தியாவை பொறுத்தவரை, ஆசியான் - இந்தியா பாதுகாப்பு கூட்டாண்மை என்பது அதன் கிழக்கு நோக்கிய கொள்கை மற்றும் பரந்த இந்தோ - பசிபிக் பார்வையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். 2022ல் ஆசியான் - இந்தியா கூட்டாண்மை விரிவான மூலோபாய கூட்டாண்மையாக உயர்த்தப்பட்டபோது, அது அரசியல் முதிர்ச்சியின் அடையாளமாக மட்டுமின்றி, பிராந்திய முன்னுரிமைக்கான ஆழமான சான்றாகவும் இருந்தது.

இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை எப்போதும் தெளிவாக உள்ளது. திறந்த, உள்ளடக்கிய, விதிகளை அடிப்படையாகக் கொண்ட இந்தோ - பசிபிக் என்பதே அது. எதிர்கால பாதுகாப்பு ராணுவத்திறனை மட்டும் சார்ந்திருக்காது. பகிரப்பட்ட வளங்களை நிர்வகித்தல், டிஜிட்டல் உள்கட்டமைப்பின் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு கூட்டுப் பதில் அளித்தல் ஆகியவற்றையும் சார்ந்திருக்கும்.” எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து