முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் சட்டசபையில் இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு உரை

ஞாயிற்றுக்கிழமை, 2 நவம்பர் 2025      இந்தியா
Murmu 2024-01-31

Source: provided

டெராடூன் : உத்தரகாண்ட் சட்டசபையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று சிறப்பு உரையாற்றுகிறார். 

ஜனாதிபதி திரெளபதி முர்மு 3 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று உத்தரகாண்ட் சென்றார். டெராடூன் விமான நிலையம் சென்ற ஜனாதிபதி திரெளபதி முர்முவை உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, கவர்னர் குர்மித் சிங் வரவேற்றனர். அதன்பினர் ஹரித்துவார் சென்ற திரெளபதி முர்மு அங்குள்ள பதஞ்சலி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.

இதனிடையே, பயணத்தின் 2வது நாளான இன்று உத்தரகாண்ட் சட்டசபையில் ஜனாதிபதி திரெளபதி முர்மு சிறப்பு உரையாற்றுகிறார். அதே நாளில், நைனிடால் ராஜ்பவனின் 125-வது ஆண்டு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதைத்தொடர்ந்து 4ம் தேதி நீம் கரோலி பாபா ஆசிரத்திற்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு செல்கிறார். பின்னர் நைனிடாலில் உள்ள குமான் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு ஜனாதிபதி டெல்லி திரும்புகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து