முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமித்ஷாவின் குஜராத் பயணம் ரத்து

புதன்கிழமை, 12 நவம்பர் 2025      இந்தியா
Amit-Shah  2024-03-10

Source: provided

புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் குஜராத் பயணம் ரத்து செய்யப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில், செங்கோட்டையின் அருகில் கடந்த நவ.10 ஆம் தேதி இரவு நடந்த கார் வெடிப்பு சம்பவத்தில் 12 பேர் பலியாகினர். மேலும், சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம், பயங்கரவாதிகளின் சதிச் செயலாக இருக்கக் கூடும் எனக் கருதப்படும் நிலையில், இதுவரை சந்தேகத்தின் அடிப்படையில் 8 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகின்றது.

இதையடுத்து, கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து அவரது தலைமையின் கீழ் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், நவ.13 ஆம் தேதி திட்டமிடப்பட்டிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் குஜராத் பயணம் ரத்து செய்யப்பட்டதாக, காந்தி நகர் மக்களவை உறுப்பினர் பிமல் ஜோஷி கூறியுள்ளார்.

இந்தப் பயணத்தில், அமைச்சர் அமித்ஷா அகமதாபாத் நகரத்தில் உணவுத் திருவிழா மற்றும் புத்தகத் திருவிழா உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளை துவங்கி வைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொறுப்பேற்று பதவி விலக வேண்டுமென, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து