முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலியில் சிக்கிய தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்

புதன்கிழமை, 12 நவம்பர் 2025      தமிழகம்
EPS 2023-02-23

Source: provided

சென்னை : மாலியில் சிக்கிய தமிழர்களை மீட்க தூதரகம் வாயிலாக முன்னெடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த மத்திய அரசுக்கு இ.பி.எஸ். எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;- மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள கோப்ரி நகரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தமிழகத்தைச் சேர்ந்த இசக்கி ராஜா, சுரேஷ், பொன்னுத்துரை, புதியவன், பேச்சிமுத்து ஆகிய ஐந்து பேரை, உள்நாட்டுப் பிரச்சனை காரணமாக ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

பயங்கரவாதிகள் பிடியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தோரை மீட்க அந்நாட்டு தூதரகம் வாயிலாக முன்னெடுப்புகளை துரிதப்படுத்துமாறு மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து