முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜம்மு-காஷ்மீர் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளிலும் ஆளும் கட்சி தோல்வி

வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2025      இந்தியா
Umar-Abdullah 2024-10-13

Source: provided

டெல்லி : ஜம்மு - காஷ்மீர் இடைத்தேர்தலில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி இரு தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

நக்ரோட்டாவில், பா.ஜ.க.வின் தேவயானி ராணா 24,647 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பட்காமில், பிடிபியின் ஆகா சையது முனாசிர் மெஹ்தி 4,478 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதேசமயம், பா.ஜ.க. வேட்பாளர் ஆகா சையத் மொஹ்சின் 2,619 வாக்குகளுடன் ஆறாவது இடத்தைப் பிடித்தார். 2024 தேர்தலில் இரு தொகுதிகளில் வென்ற முதல்வர் ஒமர் அப்துல்லா, பட்காம் தொகுதியை ராஜிநாமா செய்த நிலையில், அந்த தொகுதியை பிடிபி கட்சி கைப்பற்றியுள்ளது.

1972 க்குப் பிறகு பட்காம் தொகுதியை தேசிய மாநாட்டுக் கட்சி முதல் முறையாக இழந்திருப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிதீஷ் கட்சி வேட்பாளர். முன்னதாக ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 2 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற நிலையில் நேற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து