முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க.வில் இணைந்த முன்னாள் எம்.பி. மைத்ரேயனுக்கு கட்சிப்பதவி

வெள்ளிக்கிழமை, 14 நவம்பர் 2025      தமிழகம்
Maithreyan 2025-11-14

Source: provided

சென்னை: அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த மைத்ரேயனுக்கு தி.மு.க. கல்வியாளர் அணி துணைத் தலைவராக கட்சிப்பதவி வழங்கப்பட்டுள்ளது. 

சென்னையை சேர்ந்த பிரபல புற்றுநோய் சிகிச்சை நிபுணரான டாக்டர் வி.மைத்ரேயன் கடந்த 1991-ம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்தார். தொடர்ந்து 1999-ம் ஆண்டு வரை அக்கட்சியில் பயணித்தார். இதையடுத்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று மைத்ரேயன் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

2002-ம் ஆண்டு அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ச்சியாக 3 முறை எம்.பி.யாக இருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் உட்கட்சி மோதல் ஏற்பட்டது. ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்ததற்காக மைத்ரேயன் கட்சியில் இருந்து நீக்கிவைக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருந்து வந்தார்.

இதையடுத்து கடந்த 2023 ஆண்டு ஜூன் மாதம் 9-ம் தேதி டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் அருண்சிங், தேசிய செயலாளர் சி.டி.ரவி, செய்தித்தொடர்பாளர் ஜாபர் இஸ்லாம் ஆகியோர் முன்னிலையில் மைத்ரேயன் பா.ஜ.க.வில் இணைந்தார். அவருக்கு பா.ஜ.க. உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2024 ஆண்டு செப்டம்பர் மாதம் 12-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மைத்ரேயன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மைத்ரேயன் அ.தி.மு.க.வில் மீண்டும் தன்னை இணைத்துக்கொண்டார். அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மைத்ரேயன் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். பின்னர் மைத்ரேயனுக்கு தி.மு.க. உறுப்பினர் அட்டையை முதல்வர் வழங்கினார். அதனை தொடர்ந்து மைத்ரேயனுக்கு மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி அமைத்ததால் மைத்ரேயன் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்த மைத்ரேயனுக்கு தி.மு.க. கல்வியாளர் அணி துணைத் தலைவராக கட்சிப்பதவி வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மைத்ரேயனுக்கு தி.மு.க. நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 4 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 5 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 7 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 7 months ago
View all comments

வாசகர் கருத்து