முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யுனிசெப் தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்

ஞாயிற்றுக்கிழமை, 16 நவம்பர் 2025      சினிமா
Keerthy 2024-12-04

Source: provided

சென்னை : தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் ஐக்கிய நாடுகள் சபையில் குழந்தைகள் நல நிதியமான யுனிசெப் உடைய இந்தியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்த கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ``குழந்தைகள் தான் நமது மிகப்பெரிய எதிர்க்கால நம்பிக்கை, அவர்கள் மீது அன்பு செலுத்தி சிறந்தவர்களாக உருவாக்குவதற்கு தேவையான அடித்தளத்தை மேம்படுத்த வேண்டியது நமது கடமை.யுனிசெப் இந்தியா அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் பெருமை அடைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

உலகின் 190 நாடுகளில் செயல்பட்டு வரும் யுனிசெப், சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி, பாதுகாப்பு உரிமைகள் குழந்தைகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய பணியாற்றி வருகிறது. இதற்கு முன்னரும் யுனிசெப் இந்தியாவின் தூதர்களாக பல திரைப் பிரபலங்கள் இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து