எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து ஆய்வு மேற்கொள்ள தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்களிடமிருந்து 28.11.2025 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தமிழ் சமூகத்தின் பெருமைமிகு வரலாற்றினை அனைவரும் அறிந்துகொள்ள தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தின் அரிய வரலாற்று ஆவணங்களை மாதம் ரூ.50,000 உதவித் தொகையுடன் ஆராய்ந்து ஆய்வு மேற்கொள்ள ஆராய்ச்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:- பழமைமிகு நமது தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தில் மூன்று நூற்றாண்டுகளுக்கு முந்தைய அரசுத் துறை ஆவணங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. “மெட்ராஸ் ரெக்கார்ட் ஆபீஸ்” என்ற பெயரில் அழைக்கப்பட்ட இக்காப்பகம் 1909 முதல் தற்போதுள்ள ஆவணக் காப்பகக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது.
1633ஆம் ஆண்டு முதலான புத்தகங்களும், 1670ஆம் ஆண்டு முதலான பழமையான ஆவணங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டின் வரலாற்றினை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் 1973ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு வரலாற்று ஆராய்ச்சி மன்றம் மாறிவரும் காலத்திற்கேற்ப மீளுருவாக்கம் செய்யப்படும் என்றும், ஆண்டுதோறும் 10 முதல் 15 ஆய்வுகள் வரை மேற்கொள்ளப்படும் என்ற முதலமைச்சர் ஆணைக்கிணங்க தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி தமிழ்நாடு வரலாற்று ஆராய்ச்சி மன்றம் மீளுருவாக்கம் செய்யப்பட்டும், 20 நபர்களுக்கு ஆராய்ச்சி உதவித் தொகை வழங்கப்பட்டு வரலாற்று ஆய்வுகள் மேற்கொள்ளவும் ஆணைகள் வெளியிடப்பட்டன. தமிழ்நாடு ஆவணக்காப்பகத்தின் அரிய ஆவணங்களை ஆராய்ந்து தமிழ்நாட்டின் பெருமைமிகு வரலாற்றினை வெளிகொண்டு வரும் வகையிலான ஆராய்ச்சியை ஓராண்டுக்கு மாதம் ரூ.50,000 ஆராய்ச்சி உதவித் தொகையுடன் மேற்கொள்வதற்கு முதுகலை பட்டதாரிகள் அல்லது தனிநபர் ஆராய்ச்சியாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் நேற்று (17.11.2025) முதல் பெறப்படும். இதற்கான விண்ணப்பப் படிவம், தகுதி மற்றும் பிற விவரங்கள் அனைத்தும் www.tamilnaduarchives.tn.gov.in என்கிற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள ஆராய்ச்சியாளர்கள் தங்களது விண்ணப்பங்களை இணையவழியில் மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் 28.11.2025 வரை விண்ணப்பித்து பயன்பெருமாறு கேட்டுக்கொள்கிறேன். விண்ணப்பங்கள் இணையவழி மட்டுமே பெறப்படும். இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
கூட்ட நெரிசல் ஏற்பட்டால் யார் பொறுப்பு? த.வெ.க. ஆனந்தை கடுமையாக எச்சரித்த புதுவை பெண் எஸ்.பி.
09 Dec 2025சென்னை, கூட்ட நெரிசல் ஏற்பட்டால் யார் பொறுப்பு? என்று த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்தை புதுச்சேரி பெண் எஸ்.பி. கடுமையாக எச்சரித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தி.மலையில் வரும் 14-ம் தேதி தி.மு.க. இளைஞரணி மாநாடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
09 Dec 2025சென்னை, திருவண்ணாமலையில் வரும் 14-ம் தேதி தி.மு.க. இளைஞரணி மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.
-
தாம்பரத்தில் அ.தி.மு.க. சார்பில் வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம்
09 Dec 2025சென்னை, தி.மு.க. அரசை கண்டித்து சென்னை தாம்பரத்தில் அ.தி.மு.க. சார்பில் வரும் 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
-
புதுச்சேரியில் புதிய அரசியல் அத்தியாயம் துவங்கியுள்ளது: த.வெ.க. தலைவர் விஜய் பதிவு
09 Dec 2025சென்னை, புதிய அரசியல் அத்தியாயத்தை தொடங்கி உள்ளதாக த.வெ.க. தலைவர் விஜய் பதிவு செய்துள்ளார்.
-
பீகார் மாநில தேர்தல் வெற்றி: தே.ஜ. கூட்டணி எம்.பி.க்கள் பிரதமர் மோடிக்கு பாராட்டு
09 Dec 2025டெல்லி, டெல்லியில் நடந்த தே.ஜ. கூட்டணி பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்துப் பாராட்டு தெரிவித்தனர்.
-
சென்னை கலைவாணர் அரங்கில் ஜன.16-ல் பன்னாட்டு புத்தகக் காட்சி அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்
09 Dec 2025சென்னை, சென்னை கலைவாணர் அரங்கில் பன்னாட்டு புத்தகக் காட்சி நடைபெறவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 09-12-2025
09 Dec 2025 -
ஆர்.எஸ்.எஸ். பற்றி பேச்சு: ராகுல் காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து பார்லி.யில் ஆளும் கட்சியினர் அமளி
09 Dec 2025டெல்லி, மக்களவையில் எஸ்.ஐ.ஆர். குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசத் தொடங்கிய நிலையில் அமளி ஏற்பட்டது.
-
புதுவை: விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த நபர்...!
09 Dec 2025புதுவை, புதுவையில் விஜய் கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் வந்த சிவகங்கையை சேர்ந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: கோவில் விவகாரங்களில் கோர்ட் தலையிடக்கூடாது தமிழக அரசு சார்பில் வாதம்
09 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் தொடர்பான விசாரணையின் போது கோவில் விவகாரங்களில் கோர்ட் தலையிடக்கூடாது என்று தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது.
-
திருப்பரங்குன்றம் விவகாரம்: கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தலைமை செயலாளர் ஆஜராக உத்தரவு
09 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தலைமை செயலாளர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
-
தமிழகம் மட்டுமல்லாமல், புதுச்சேரிக்கும் குரல் கொடுப்பேன்: பிரம்மாண்ட கூட்டத்தில் விஜய் பேச்சு
09 Dec 2025புதுச்சேரி, புதுவையை பார்த்து தமிழக முதல்வர் கற்றுக்கொள்ள வேண்டும், ஆனால் கற்றுக்கொள்ளாது என்று த.வெ.க. தலைவர் விஜய் பேசினார். மேலும் நல்ல பாதுகாப்பு கொடுத்துள்ளனர்.
-
இண்டிகோ விமான சேவைகளை 5 சதவீதம் வரை குறைக்க உத்தரவு
09 Dec 2025புதுடெல்லி, இண்டிகோ விமான சேவைகளை குறைக்க விமான போக்குவரத்து துறை அதிரடியாக உத்தவிட்டுள்ளது.
-
இண்டிகோ விமான சேவை பாதிப்பு: ஒரேநாளில் 450 விமானங்கள் ரத்து
09 Dec 2025டெல்லி, இண்டிகோ விமான சேவை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று ஒரேநாளில் 450 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 09-12-2025
09 Dec 2025 -
வட இந்திய சாலைகளுக்கு வ.உ.சி., பாரதி பெயர்கள் வைக்காதது ஏன்..? மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி
09 Dec 2025டெல்லி, வ.உ.சி., பாரதி பெயர்கள் வட இந்திய சாலையில் வைக்கப்பட்டிருக்கிறதா என்று திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார்.
-
ராஜஸ்தான் மாநில ஐகோர்ட்டிற்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
09 Dec 2025ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநில ஐகோர்ட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வருகிற ஜனவரி 15-ம் தேதிக்குள் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும்: அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவு
09 Dec 2025புதுடெல்லி, வருகிற ஜனவரி 15-ம் தேதிக்குள் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
-
மத்திய அரசு இணையதளத்தில் வக்பு சொத்துகள் பதிவேற்றம்
09 Dec 2025புதுடெல்லி, மத்திய அரசு இணையதளத்தில் 5.17 லட்சம் வக்பு சொத்துகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
-
புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டியது
09 Dec 2025சென்னை, புழல் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.
-
நீலகிரியில் குந்தா, பந்தலூர் 2 புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கம்
09 Dec 2025சென்னை, உதகமண்டலம் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து, குந்தா மற்றும் பந்தலூர் என 2 புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கப்பட்டுள்ளன.
-
பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லி பயணம்
09 Dec 2025சென்னை, தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுவதை தொடர்ந்து அண்ணாமலை டெல்லிக்கு புறப்பட்டார்.
-
சோனியா காந்தி பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
09 Dec 2025சென்னை, சோனியா காந்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு
09 Dec 2025திருவனந்தபுரம், கேரளாவில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தினர்.
-
புதின் இந்தியா வருகை எதிரொலி: இந்திய விவசாய பொருட்கள் மீது வரி விதிக்க அதிபர் ட்ரம்ப் திட்டம்
09 Dec 2025வாஷிங்டன், இந்திய விவசாய பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.


