எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை: தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளை வருவாய்த்துறை ஊழியர்கள் புறக்கணித்தனர். இதுதொடர்பாக பெரா என்ற வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு, பொதுத்தேர்தல் துறையின் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 4-ம் தேதியில் இருந்து எஸ்.ஐ.ஆர். என்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு ஆளும் கட்சியான தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. எஸ்.ஐ.ஆருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், அதிக பணி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளை வருவாய்த்துறை ஊழியர்கள் முழுமையாக புறக்கணித்துள்ளனர். இதுதொடர்பாக பெரா என்ற வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு, பொதுத்தேர்தல் துறையின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
எஸ்.ஐ.ஆர். பணியில் உள்ள வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கப்படவில்லை. இரவு நேரங்கள் மற்றும் அரசு விடுமுறை நாள்களிலும், தொடர்ச்சியாக பணிபுரிய வேண்டுமென மாவட்ட கலெக்டர்களால் கடுமையான பணி நெருக்கடி ஏற்படுத்தப்படுகிறது. அதை களைய வேண்டும். இதுதொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்து விரிவான முறையீடு அளிக்கப்பட்டது. ஆய்வுக் கூட்டங்கள் என்ற பெயரில் அலுவலர்ளை வாட்டி வதைக்கும் கலெக்டர்களின் தன்னிச்சையான மனிதாபிமானமற்ற செயல்பாடுகளை கைவிட அறிவுறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இந்த வாட்டி வதைப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்த பணியில் ஈடுபட்டுள்ள பல ஊழியர்களுக்கு உடல் நலம் மற்றும் மனநலம் சார்ந்த கடுமையான குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. எனவே கூட்டமைப்பின் அவசர மாநில உயர்மட்டக் குழு கூட்டம் 16-ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இத்திட்டப் பணிகளில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வலியுறுத்தி அனைத்து மாவட்ட கலெக்டர்களிடமும் கூட்டமைப்பின் சார்பில் பெருந்திரள் முறையீடு அளிக்கப்படும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை நேற்று முதல் எஸ்.ஐ.ஆர். தொடர்பான படிவங்கள் பெறுதல், இணையத்தில் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட வாக்காளர் பட்டியல் தொடர்புடைய அனைத்துப் பணிகளையும் முற்றாக புறக்கணிக்கப்படும்.
விண்ணப்பங்களை வாக்காளர்களுக்கு வழங்கி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெற்று தேர்தல் பிரிவில் ஒப்படைக்க 30 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளதால் அவசர கதியில் இப்பணியை முடிக்க கால நிர்ப்பந்தம் ஏற்படுத்தப்படுவதை கைவிட வேண்டும். 30 நாள்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் அவசர கதியில் இப்பணியை முடித்திடுமாறு மாவட்ட கலெக்டர்கள் கடுமையான நிர்ப்பந்தம் ஏற்படுத்துவதை கைவிட வேண்டும். தினமும் 3 வேளைகளில் நள்ளிரவு வரை கூகுள் மீட் என்ற ஆய்வுக்கூட்டம் நடத்தி அலுவலர்களை வாட்டி வதைப்பதை நிறுத்த வேண்டும். சனி, ஞாயிறு உள்ளிட்ட அரசு விடுமுறை தினங்கள் உள்பட அனைத்து நாட்களிலும் இப்பணிகளை மேற்கொள்ள கலெக்டர்கள் கட்டாயப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இப்பணிகளை செம்மையாகவும், பிழையின்றியும் மேற்கொள்ள கூடுதல் கால அவகாசம் மற்றும் புதிய பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். எஸ்.ஐ.ஆர். பணிகளில் இரவு-பகலாக ஈடுபட்டுள்ள அனைத்து அலுவலர்களுக்கும் ஒரு மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும். பணியில் உள்ள அனைத்து அலுவலர்களுக்கும் முறையான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும். இந்தப் பணிகளால் வருவாய்த்துறை அலுவலர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் உடல் நிலை, வயது, பணி மூப்பு ஆகிய எதையும் கருத்தில் கொள்ளாமல் எந்திரத்தனமாக நடத்திடும் செயல்பாடுகளால் அதிருப்தியுற்று, அலுவலர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கான மனநிலையை இத்திட்டம் ஏற்படுத்தியுள்ளது. எனவே அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்கி சுமூகமான சூழலை ஏற்படுத்தி தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம்: சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
11 Dec 2025சென்னை, தமிழகத்தில் விடுப்பட்ட மகளிருக்கு 2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை சென்னையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 11-12-2025
11 Dec 2025 -
தமிழ் கவிஞர் பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
11 Dec 2025சென்னை, தமிழ்ச் சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
செங்கோட்டையன் - நாஞ்சில் சம்பத் சந்திப்பு
11 Dec 2025சென்னை, சென்னையில் த.வெ.க.மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் செங்கோட்டையன் - நாஞ்சில் சம்பத் சந்தித்து பேசி கொண்டனர்.
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பான வழக்கில் ஜனவரி மாதம் இறுதியில் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
11 Dec 2025புதுடெல்லி, எஸ்.ஐ.ஆர் தொடர்பான வழக்கில் ஜனவரி மாதம் இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 11-12-2025
11 Dec 2025 -
கூட்டணி விவகாரத்தில் விஜய்க்கு முழு அதிகாரம்: த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள்
11 Dec 2025சென்னை, த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
திபெத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
11 Dec 2025பீஜிங், திபெத்தில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 4, 5 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் பிணையப் பத்திரங்கள் ஏலம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
11 Dec 2025சென்னை, ரூ.5000 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம் விடுவதா தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நாளை உண்ணாவிரதம்: நிபந்தனைகளுடன் ஐகோர்ட் கிளை அனுமதி
11 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் விவகாரத்தை தொடர்ந்து வருகிற 13-ம் தேதி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு மதுரை கிளை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்? பி.டி.செல்வகுமார் விளக்கம்
11 Dec 2025சென்னை, நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றியவர் பி.டி.செல்வக்குமார்.
-
தமிழ்நாட்டில் மக்களின் வாக்குரிமையை பறிக்க வாய்ப்பு உள்ளது: திருமாவளவன்
11 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் மக்களின் வாக்குரிமையை பறிக்கிற வாய்ப்பு உள்ளது நாடாளுமன்றத்தில் திருமாவளவன் தெரிவித்தார்.
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
11 Dec 2025சென்னை, திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் உக்ரைனில் விரைவில் தேர்தல் நடத்தப்படும்: அதிபர் ட்ரம்புக்கு ஜெலன்ஸ்கி பதிலடி
11 Dec 2025கீவ், உக்ரைனில் தேர்தலை நடத்தாமல் இருக்க போரை நடத்துகிறார் ஜெலன்ஸ்கி என்று அதிபர் ட்ரம்ப் கடுமையாக தாக்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தா
-
டிசம்பர் 14 முதல் பா.ம.க.வில் விருப்ப மனுக்கள் விநியோகம்: அன்புமணி அறிவிப்பு
11 Dec 2025சென்னை, வருகிற 14-ம் தேதி முதல் பா.ம.க.வில் விருப்ப மனுவை தாக்கல் செய்யலாம் என்று அன்புமணி தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 11-12-2025
11 Dec 2025 -
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ஐ.நா. ரூ.316 கோடி நிதியுதவி
11 Dec 2025கொழும்பு, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ.316 கோடி நிதியுதவி அளிக்க உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும் 1.50 லட்சம் ஈ.வி.எம். சரிபார்ப்பு பணி துவக்கம்
11 Dec 2025புதுடெல்லி, தமிழகத்தில் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்படும் 1.50 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பு பணி நேற்று முதல் தொடங்கியது.
-
சுப்ரியா சாகுவுக்கு ஐ.நா. விருது: தமிழ்நாடு பெருமை கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
11 Dec 2025சென்னை, சுப்ரியா சாகுவின் பணிகள் தொடர ஐ.நா. விருது பெரும் ஊக்கமாக அமையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை திரும்ப வழங்க 3 நாட்கள் கால அவகாசம்: வரும் 14-ம் தேதி வரை வழங்கலாம் - தேர்தல் ஆணையம்
11 Dec 2025சென்னை, தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை திரும்ப வழங்க காலஅவகாசத்தை நீட்டித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
டி-20 கிரிக்கெட் போட்டி: 100 விக்கெட்களை எடுத்து ஹர்திக் புதிய மைல்கல்
11 Dec 2025நியூ சண்டிகர், டி-20 கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட்களை எடுத்து ஹர்திக் பாண்ட்யா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
அபார வெற்றி...
-
வெண்கலம் வென்றது இந்தியா
11 Dec 2025சென்னை, 14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி தொடரில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை தட்டி சென்றது.
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிராக போராட பெண்களுக்கு மம்தா அழைப்பு
11 Dec 2025கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) குறித்து கடுமையாக விமர்சித்த திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான
-
கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: மக்களவையில் தி.மு.க. கோரிக்கை
11 Dec 2025புதுடெல்லி, கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மக்களவையில் தி.மு.க. எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை விடுத்தார்.
-
2026 சட்டப்பேரவை தேர்தல்: அ.தி.மு.க. சார்பில் போட்டியிட டிசம்பர் 15 முதல் விருப்ப மனு எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
11 Dec 2025சென்னை, 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வரும் 15-ம் தேதி முதல் விருப்ப மனு வினியோகப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.



