முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளகுதிர திரை விமர்சனம்

செவ்வாய்க்கிழமை, 2 டிசம்பர் 2025      சினிமா
Vellakuthira 2025-12-02

Source: provided

சாலை வசதியே இல்லாத உறவினர் வீட்டில் தங்கும் நாயகன் ஹரிஷ் ஓரி அங்கு கிடைக்கும் ஒருவித போதை பொருளை வைத்து பணம் சம்பாதிக்க முயற்சிக்கிறார். அதே நேரம் அந்த நிலத்தை அபகரிக்க துடிக்கும் ஊர் தலைவரின் திட்டத்தை முறியடிக்க ஓரியின் மனைவி அபிராமி போஸ். களம் இறங்குகிறார். இந்த கணவன்-மனைவியின் செயல்களால் அந்த மலை கிராம மக்களின் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டது என்பது தான் வெள்ளக்குதிர படம் சொல்ல வரும் கதை. கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் ஓரி, கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக அதே நேரம் நேர்த்தியான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அபிராமி போஸ், கிராமத்து பெண்ணாக வலம் வந்து கதைக்களத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். பரத் ஆசிகவனின் பின்னணி இசை அருமை. எந்தவித விளக்குகளையும் பயன்படுத்தாமல் காட்சிகளை தரமாக ஒளிப்பதிவு செய்திருக்கும் ராம் தேவைப் நிச்சயம் பாராட்டலாம். எழுதி இயக்கியிருக்கும் சரண்ராஜ் செந்தில்குமார், அடிப்படை வசதிகள் இல்லாத மலை கிராம மக்கள் பிரச்சனைகளை பற்றி மட்டும் பேசாமல், சொல்ல வந்த கருத்தை திறம்பட சொல்லி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். மொத்தத்தில் ‘வெள்ளகுதிர’ வெற்றிக் குதிரை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து