முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட விவகாரம்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் 2-வது நாளாக தொடர் அமளி : அவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 2 டிசம்பர் 2025      இந்தியா
Parliament-2024-11-27

Source: provided

புதுடெல்லி : எஸ்.ஐ.ஆர். உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் நேற்றும் எதிர்க்கட்சிகள் 2-வது நாளாக தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்றத்தில் நடப்பு ஆண்டின் கடைசி கூட்டத்தொடரான குளிர் கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 19-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடர் குறுகிய காலத்திற்குள் நிறைவடைந்து விடும். இதனை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். 

அப்போது அவர், இந்த குளிர் கால கூட்டத்தொடர் வழக்கம்போல் நடக்கும் ஒரு சடங்கு அல்ல. இளம் எம்.பி.க்கள் மற்றும் முதல்முறை எம்.பி.க்கள் அவையில் கூடுதலாக பேச முன்வர வேண்டும் என்றார். அவைக்குள்ளே அமளியில் ஈடுபட வேண்டாம். அமளியை வெளியே வைத்து கொள்ளுங்கள் என்றும் அப்போது அவர் கேட்டு கொண்டார்.

இந்த கூட்டத்தொடர் சுமுக முறையில் நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். எந்த விஷயம் பற்றியும் பாராளுமன்றத்தில் விவாதம் செய்யலாம். இந்தியா எப்போதும் ஜனநாயகத்தை போற்றும் நாடாக உள்ளது என்றும் பிரதமர் மோடி கூறினார்.

இந்த நிலையில், பாராளுமன்றத்தில் குளிர் கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் நடந்தது. மக்களவையை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையேற்று நடத்தினார். துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமையில் மாநிலங்களவை நடந்தது. அவர் துணை ஜனாதிபதியான பின்னர் கலந்து கொள்ளும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும்.

இந்த நிலையில், அவையில் எஸ்.ஐ.ஆர். பணிகள், டெல்லி காற்று மாசுபாடு, நெல் ஈரப்பதம், தமிழகத்திற்கான கல்வி நிதியை அதிகரித்து வழங்குவது, டெல்லி கார் குண்டுவெடிப்பு தாக்குதல் உள்ளிட்ட விவகாரங்களை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பின. இதுபற்றி விவாதம் நடத்த கோரிக்கை வைக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால், மக்களவை மதியம் 12 மணி வரை முதலில் ஒத்திவைக்கப்பட்டது. இதன்பின்னர் அவை 12 மணிக்கு மீண்டும் கூடியதும் எஸ்.ஐ.ஆர். பணிகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டன. இதனால், மக்களவை பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவை கூடியதும் தொடர் அமளியால், நாள் முழுவதற்கும் அவை ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்களவையும் அமளியால் பலமுறை ஒத்தி வைக்கப்பட்டு பின்னர் நாள் முழுமைக்கும் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், 2-வது நாளான நேற்றும் அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் எஸ்.ஐ.ஆர். விவகாரம் தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோஷங்களையும் எழுப்பினர். இந்நிலையில், மக்களவை 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இந்த தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. 

பின்னர் மீண்டும் கூடியதும் எதிர்க்கட்சியினரின் அமளியால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைகப்பட்டது. இதன்படி 2 மணிக்கு அவை கூடியதும், எஸ்.ஐ.ஆர் உள்பட பல்வேறு பிரச்சினைகளை மீண்டு் எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் கடும் அமளிக்கு இடையே மணிப்பூர் ஜிஎஸ்டி வரி மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே மசோதா நேற்று காலை மக்களவையில் நிறைவேறியது குறிப்பிடத்தக்கது. 

சபாநாயகர் பேச்சுவார்த்தை

தொடர் அமளியில் ஈடுபட்டு வரும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் மக்களவையை சுமூகமாக நடத்த ஆதரவு அளிக்குமாறு எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் சபா நாயகர் கோரிக்கை வைத்தார். அதேவேளை, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி குறித்து விவாதிக்க அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து