Idhayam Matrimony

டி.கே.சிவக்குமார் வீட்டில் சித்தராமையாவுக்கு விருந்து

செவ்வாய்க்கிழமை, 2 டிசம்பர் 2025      இந்தியா
Siddaramaiah-TK-Sivakumar-2

Source: provided

பெங்களூரு : கர்நாடக மாநில முதல்வர் பதவி விவகாரத்தில் பிரச்சனை நீடித்த நிலையில், துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் வீட்டில் முதல்வர் சித்தராமையாவுக்கு விருந்து அளிக்கப்பட்டது.

கர்நாடகத்தில் கடந்த 2023-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. முதல்வர்  பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி எழுந்த நிலையில் இறுதியில் சித்தராமையா முதல்வர் யாக நியமிக்கப்பட்டார். முதல்வர்  பதவியை 2 பேரும் ஆளுக்கு 2.5 ஆண்டுகள் வீதம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அப்போது ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி சித்தராமையா ஆட்சி அதிகாரத்தில் 2.5 ஆண்டுகள் நிறைவு செய்துவிட்டதால் முதல்வர்  பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்று துணை முதல்வர்  டி.கே.சிவக்குமார் திடீரென போர்க்கொடி தூக்கினார். இது கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியது. ஒரு வாரம் குழப்பம் நீடித்த நிலையில் காங்கிரஸ் மேலிட உத்தரவுப்படி சித்தராமையா வீட்டில் டி.கே.சிவக்குமார் சிற்றுண்டி கூட்டத்தில் கலந்துகொண்டார். தங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று 2 பேரும் விளக்கம் அளித்தனர். இதன்மூலம் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் தனது வீட்டிற்கு சிற்றுண்டி விருந்துக்கு வருமாறு முதல்வர்  சித்தராமையாவுக்கு டி.கே.சிவக்குமார் அழைப்பு விடுத்திருந்தநிலையில், நேற்று காலை, சித்தராமையா சதாசிவநகரில் உள்ள டி.கே.சிவக்குமாரின் வீட்டிற்கு வருகை தந்தார். அவரை சிவகுமார் மற்றும் அவரது சகோதரரும் முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யுமான டி.கே. சுரேஷ் வரவேற்றனர். 

இதுதொடர்பாக டி.கே.சிவக்குமார் தனது எக்ஸ் வலைதளத்தில், “காங்கிரஸ் தொலைநோக்குப் பார்வையின் கீழ் நல்லாட்சி மற்றும் நமது மாநிலத்தின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக, நேற்று எனது இல்லத்தில் முதல்வருக்கு காலை உணவு அளித்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து