எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : வக்ப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க சென்னையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எஸ்.டி.பி.ஐ. கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான பாசிச எதிர்ப்பு தினத்தை (டிச.06) முன்னிட்டு, வக்ப் மற்றும் வழிபாட்டு உரிமையை காப்போம் என்கிற முழக்கத்துடன் தமிழகம் உள்பட நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சென்னை வடக்கு மண்டலம் சார்பாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் பூட்டோ மைதீன் தலைமையில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் செய்யது அஹமது வரவேற்புரையாற்ற, மத்திய சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது இஸ்மாயில் நன்றியுரையாற்றினார். வடசென்னை மேற்கு மாவட்ட தலைவர் சீனி முகம்மது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும், வடசென்னை கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஷாநவாஸ், சென்னை மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் முகைதீன் அன்சாரி, மத்திய சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் சலீம் ஜாபர் உள்ளிட்ட மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், விசிக துணைப் பொதுச்செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி உரை நிகழ்த்தினர். மேலும், மவுலவி அப்துல் கனி பாகவி, எஸ்டிடியூ சென்னை மண்டல தலைவர் முஸம்மில் பாஷா, விம் மாநில செயற்குழு உறுப்பினர் சமிமா ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேசுகையில், “1992 டிசம்பர் 6 அன்று அயோத்தியில் நிகழ்ந்த அந்த பாபரி மஸ்ஜித் தகர்ப்பு என்பது வெறும் கட்டிட இடிப்பு மட்டுமல்ல; அது இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவையே தாக்கிய பயங்கரவாதச் செயலாகும். இடிக்கப்பட்டது ஒரு பள்ளிவாசல் மட்டுமல்ல – மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் பாதுகாப்பு, வழிபாட்டு உரிமை, சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் ஆகிய அனைத்தும் ஒருசேரத் தரைமட்டமாக்கப்பட்டன. எனினும் அந்த அநீதிக்கு நீதி என்பது கிடைக்கவில்லை. மாறாக ஆதாரங்களை புறக்கணித்து பெரும்பான்மை மனச்சாட்சி அடிப்படையில் சட்டத்திற்கு எதிராக தீர்ப்பு எழுதப்பட்டது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் நீதித்துறை, சர்வதேச அளவில் கேலிக்குரியதாக மாறியது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சாதகமாக்கிகொண்ட மதவாத சக்திகள் இன்றைக்கு கியான்வாபி, மதுரா ஷாஹி ஈத்கா, டெல்லி ஜாமா மஸ்ஜித் எனப் பல நூற்றாண்டு பழமையான மஸ்ஜிதுகளை இலக்காக்கி அடுத்த கட்ட நடவடிக்கையைத் தொடங்கிவிட்டன. மறுபுறம் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ப் (திருத்த) மசோதா, முஸ்லிம் சமூகத்தின் பாரம்பரிய உரிமைகளையே பறிக்கும் முயற்சியாக, வக்ப் சொத்துகளை அரசு எளிதில் கைப்பற்றவும், அவற்றின் மீதான முஸ்லிம்களின் கட்டுப்பாட்டை அற்றுப்போகச் செய்யவும் சட்டம் இயற்றியுள்ளது.
மதச்சார்பின்மை எனும் அரசியலமைப்பு உத்தரவாதத்தை மெல்ல மெல்ல அரித்து இல்லாமலாக்கும் சதிச்செயல்கள் நடந்துகொண்டிருக்கின்றன. சிறுபான்மையினர் பாதுகாப்பு என்பது வெறும் சட்டப் பிரிவுகள் அல்ல – அது இந்தியத் தேசியத்தின் அடித்தளம். அதைத் தகர்த்தால் இந்தியா என்ற கட்டமைப்பே சிதறிவிடும். எனவே சட்டத்தின் நீதியும், அமைதி நல்லிணக்கம் நிலைபெறவும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறும் எந்த முயற்சியையும் எதிர்க்க வேண்டும், வக்ப் உரிமைகளைக் காக்க வேண்டும், மதச்சார்பின்மையை அரசியலமைப்பின் உயிர்நாடியாக மீட்டெடுக்க வேண்டும்.” என வலியுறுத்தினார். இந்த மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உள்பட பலர் கலந்துகொண்டு, வக்ப் மற்றும் வழிபாட்டு உரிமையை காக்க முழக்கமிட்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


