எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணை, தொல்லியல்துறை சார்ந்த 7 பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது.
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக்கோரி மதுரையை சேர்ந்த ராம ரவிக்குமார், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட பகுதியில் சிக்கந்தர் தர்கா உள்ளது. தீபத்தூணுக்கும், தர்காவுக்கும் குறைந்த இடைவெளி இருப்பதாகவும், அங்கு தீபம் ஏற்றும்பட்சத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், கடந்த மாதம் திருப்பரங்குன்றம் மலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர், கார்த்திகை தீப திருநாளன்று திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் நிர்வாகத்துக்கு கடந்த 1-ந்தேதி உத்தரவிட்டார். அந்த உத்தரவை பின்பற்றி கடந்த 3-ந் தேதி தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதனால் நீதிபதியின் தீர்ப்பை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுதாரர் ராம ரவிக்குமார் தாக்கல் செய்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை அவசர மனுவாக அதே நீதிபதி உடனடியாக விசாரித்தார். கடந்த 3-ந் தேதி மாலை 6.30 மணி அளவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ராம ரவிக்குமாரும் அவருடன் 10 பேரும் சென்று தீபம் ஏற்ற வேண்டும். இவர்களுக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்) வீரர்கள் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அதன்படி அவர்கள் அனைவரும் திருப்பரங்குன்றம் மலை அடிவாரத்துக்கு சென்றனர். அங்கு மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், இந்த பகுதியில் 144 தடையை அமல்படுத்தி மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டு இருப்பதால் மலை உச்சிக்கு சென்று தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனிடம் மறுநாள் (4-ந்தேதி) முறையிடப்பட்டது. அதன்பேரில் அந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, திருப்பரங்குன்றம் பகுதியில் அமலில் இருந்த 144 தடையை ரத்து செய்தார். ராம ரவிக்குமார் தரப்பினர் மீண்டும் மலை உச்சிக்கு சென்று தீபத்தூணில் இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும். இவர்களுக்கு மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் உரிய பாதுகாப்பை வழங்குவதுடன், தீபம் ஏற்றப்பட்டது குறித்து 5-ந்தேதி அவர் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையடுத்து ராம ரவிக்குமார் தரப்பினர் திருப்பரங்குன்றம் சென்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து தீபம் ஏற்ற அனுமதி மறுத்தனர். இதனால் 2-வது நாளும் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. பின்னர் 5-ந்தேதி விசாரிக்கப்பட்ட இந்த வழக்கின்போது, அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்று இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை 9-ந்தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், மலையில் தீபம் ஏற்ற சென்ற ராம ரவிக்குமார் தரப்பினருக்கு பாதுகாப்பு அளிக்கும்படி பிறப்பித்த உத்தரவை நிறைவேற்ற முடியாதது ஏன்? என்று மத்திய தொழில் பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.) கமாண்டன்ட்டிடம் அறிக்கை பெற்று மத்திய அரசு வக்கீல் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணை, தொல்லியல்துறை சார்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நேற்று காலை 8.45 மணிக்கு தொடங்கிய ஆய்வு 3 மணி நேரமாக நடந்தது. இந்த ஆய்வில் விசாரணைக்கு தேவையான தரவுகளும் சேகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தூணில் தீபம் ஏற்றக் கோரிய வழக்கின் மேல்முறையீடு நிலுவையில் இருக்கும் நிலையில், ஆய்வு நடத்தப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


