எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தங்கம் விலை நேற்று காலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. அதன்படி நேற்று காலை கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,250-க்கும், சவரன் ரூ.98,000-க்கும் விற்பனையானது. நேற்று மாலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.98,960க்கு விற்பனையானது. ஒரே நாளில் தங்கம் விலை ரூ. 2,560 உயர்ந்தது நகை பிரியர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த அதே நேரத்தில், வெள்ளி விலையும் அசூர வேகத்தில் அதிகரித்தது. கடந்த அக்டோபர் மாதம் வரை ‘கிடுகிடு'வென உயர்ந்து வந்த தங்கம், வெள்ளி விலை கடந்த மாதம் சற்று குறைந்து இருந்தது. இந்த நிலையில் இம்மாதம் தொடக்கத்தில் இருந்து மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம், வெள்ளி விலை இருக்கிறது.
அந்த வகையில் தங்கம் விலை ரூ.96 ஆயிரத்துக்கு கீழ் குறையாமல் அப்படியே இருந்து வந்தது. வெள்ளி விலையும் உயர்ந்து வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.8-ம், கிலோவுக்கு ரூ.8 ஆயிரமும் அதிகரித்திருந்த சூழலில், நேற்று முன்தினமும் விலை உயர்ந்து விற்பனையானது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2 ஆயிரமும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இது, இதுவரை இல்லாத புதிய உச்சமாக பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு கடந்த அக்டோபர் மாதம் 15-ம் தேதி ஒரு கிராம் ரூ.207-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 7 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனதுதான் உச்சபட்சமாக இருந்தது. தற்போது அதனை தாண்டி, வரலாறு காணாத உச்சத்தை எட்டி இருந்தது. வெள்ளி ஆபரண உலோகமாக மட்டுமல்லாமல், தொழில்துறை தேவை சார்ந்த உலோகமாக அதிகம் பயன்படுத்தப்படுவதால் அதன் தேவை அதிகரித்து, விலையும் உயர்ந்து வருகிறது.
தங்கம் விலையை பொறுத்தவரையில், நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 50-க்கும், ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் தங்கம் விலை நேற்று காலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியது. அதன்படி கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,250-க்கும், சவரன் ரூ.98,000-க்கும் விற்பனையானது. நேற்று மாலை தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், நகைபிரியர்களுக்கு தங்கம் விலை சற்று அதிகரித்து அதிர்ச்சியை கொடுத்தது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.98,960க்கு விற்பனையானது. கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,370க்கு விற்பனையானது. நேற்று காலை ஆபரணத்தங்கத்தின் விலை சவரன் ரூ.1,600 உயர்ந்த நிலையில் மாலை ரூ.960 உயர்ந்து விற்பனையானது. ஒரே நாளில் ரூ. 2,560 உயர்ந்து விற்பனையானது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.216க்கு விற்பனையானது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,000 உயர்ந்து கிலோ ரூ.2.16 லட்சத்துக்கு விற்பனையானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
இன்று பொங்கல் பண்டிகை: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகை எல்லைகளைக் கடந்து உலகளவில் இதயங்களை ஒன்றிணைக்கிறது என்று கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –14-01-2026
14 Jan 2026 -
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகக் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை
14 Jan 2026சென்னை, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதைப் பயன்படுத்தி அதிகக் கட்டணம் வசூலித்த 30 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவ
-
கடந்த 2 நாட்களில் மட்டும் திபெத், மியான்மரில் தொடர் நிலநடுக்கம்
14 Jan 2026நைபிடா, மியான்மர் நாட்டில் நேற்று முற்பகல் 11.56 மணியளவில் மித அளவிலான நில உணரப்பட்டது. 10 கி.மீ.
-
திருப்பாவை சொற்பொழிவு நிறைவு திருப்பதியில் ஆண்டாள் திருக்கல்யாணம்
14 Jan 2026திருப்பதி, கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கிய திருப்பாவை சொற்பொழிவு நிகழ்ச்சிகள் மார்கழி கடைசி நாளான நேற்றுடன் நிறைவு பெற்றன.;
-
முதலீட்டை ஈர்க்க வெளிநாடு பயணம்: பஞ்சாப் முதல்வர் பகவந்துக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
14 Jan 2026சண்டிகர், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மானின் இஸ்ரேல் மற்றும் பிரிட்டன் பயணங்களுக்கு மத்திய அரசு அரசியல் அனுமதி மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் கல்யானைக்கு கரும்பளித்த லீலை.
- திருவள்ளூர் வீரராகவபெருமாள் விழா தொடக்கம்.
- ஶ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் திருப்பாவை சாற்று முறை.
-
இன்றைய நாள் எப்படி?
14 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
14 Jan 2026


