Idhayam Matrimony

தமிழகம் வருகிறார் அமித்ஷா

வெள்ளிக்கிழமை, 12 டிசம்பர் 2025      தமிழகம்      அரசியல்
amitsha

சென்னை, வரும் 15-ம் தேதி (நாளை மறுநாள்) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி விவகாரம், தேர்தல் பணிகள் குறித்து பா.ஜ.க. மாநில நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த தேர்தலுக்கு ஒவ்வொரு கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. தற்போதைய நிலையில் நான்குமுனை போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தி.மு.க. தலைமையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டுகள் ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்று உள்ளன.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா உள்ளது. இது தவிர விஜய்யின், த.வெ.க. தலைமையில் ஒரு அணியும், நாம் தமிழர் கட்சி தனி அணியாகவும் போட்டியிட உள்ளன. பாட்டாளி மக்கள் கட்சியும், தே.மு.தி.க. மற்றும் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க.வும் தங்கள் நிலையை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த கூட்டணி நிலைப்பாடு மாறுதலுக்கு உட்பட்டது. எந்த கட்சி, யாருடன் கூட்டணி சேருவார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க முடியும்.

அ.தி.மு.க. தனது கூட்டணிக்குள் பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வை கொண்டு வர விருப்பப்படுகிறது. அதற்கான மறைமுக பேச்சுவார்த்தை நடக்கிறது. அதேவேளையில், இப்போது கூட்டணியில் உள்ள பா.ஜனதாவுக்கு எத்தனை சீட்டுகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் அந்த கட்சியினர் இடையே ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தேர்தல் நெருங்கும் நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா வருகிற 15-ம் தேதி தமிழகம் வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அமித்ஷா அங்கிருந்து வேலூருக்கு செல்கிறார். அங்கு நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறார். மேலும் கூட்டணி விவகாரம், தேர்தல் பணிகள் குறித்து பா.ஜ.க. மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையில் பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நாளை டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து