முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இதுவரை வாங்காதவர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம்: அரசு

சனிக்கிழமை, 17 ஜனவரி 2026      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, பொங்கல் பரிசுத்தொகுப்பை இதுவரை வாங்காதவர்கள் திங்கட்கிழமை முதல் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.3 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கப்படும் எனவும், ரொக்கப்பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினால் 8-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக டோக்கன்கள் முறையாக வினியோகம் செய்யப்பட்டு அதன்படி பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது. இந்தநிலையில், பொங்கல் பண்டிகை முடிந்தபோதும் சுமார் 90 சதவீத ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசுத்தொகை ரூ.3 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது. 

எனவே, விடுபட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணமும் நாளை (திங்கட்கிழமை) முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்றும் விடுபட்டவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அடுத்த அறிவிப்பு வரும் வரை பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தொடரும் என்றும் ரேஷன்கடை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து