நகங்களின் மேல் சிறிது அளவு டூத்பேஸ்ட்டை தடவி காய விடுங்கள். பின் 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு பிறகு தேய்த்து எடுத்தால், நகங்களின் மீது உள்ள மருதாணி கறைகள் முழுமையாக நீங்கி விடும். ஒரு சிறிய கிண்ணத்தில் இரண்டு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் மற்றும் உப்பு கலந்து கொள்ளுங்கள். அவை இரண்டும் சமமான அளவில் எடுத்துக் கொள்ளுங்கள். அந்தக் கலவையை ஒரு பருத்தித் துணியால் எடுத்து உங்களின் நகங்களின் மீது தேய்த்தால் மருதாணி கறை போயே போச்... இட்ஸ் கான்.
![]() 12 hours 30 sec ago |
![]() 12 hours 2 min ago |
12 hours 4 min ago |
![]() 12 hours 6 min ago |
![]() 12 hours 7 min ago |
![]() 12 hours 8 min ago |
கடும் உழைப்புக்கு பிரபலமான நாடு ஜப்பான். உலகின் பழமையான தேசிய கீதத்தை கொண்ட நாடும் அதுதான். உலகிலேயே மிகச் சிறிய தேசிய கீதத்தை கொண்ட நாடும் ஜப்பான்தான். அதன் தேசிய கீதத்தில் இருப்பது ஐந்தே வரிகள், வெறும் 31 எழுத்துக்கள். 13 அடிகள் கொண்ட நம் தேசிய கீதத்தை 52 நொடிகளுக்குள் பாடி முடிக்க வேண்டும் என்பது மரபு.
மார்ட்டின் கார்னர் எனும் புகழ் பெற்ற அமெரிக்க அறிவியல் புனைகதை எழுத்தாளர் எழுதிய மிக சிறிய திகில் கதை "உலகின் கடைசி மனிதன் தனியாக அறையில் உட்கார்ந்து இருந்தான். கதவு தட்டப்பட்டது."
நாசா தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை பல்வேறு புதிய ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய் கிரக்ததில் கேட்கும் சத்தங்களை பதிவு செய்து அனுப்பியுள்ளது பெர்சவரன்ஸ் ரோவர். அதாவது நாசா அமைப்பு தினசரி பெர்சவரன்ஸ் ரோவர் மூலம் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் அதன்மூலம் வரும் தகவல்களை அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்து வருகிறது. ரோவர் பதிவு செய்த செவ்வாயின் சத்தத்தையும் SoundCloud தளத்தில் பதிவேற்றியுள்ளனர் பெர்சவரன்ஸ் ரோவரில் பொருத்தப்பட்ட சூப்பர்கேமில் இருக்கும் மைக்ரோபோன் மூலம் இந்த சத்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாசா வெளியிட்ட தகவலின்படி பெர்சவரன்ஸ் ரோவரில் இருக்கும் லேசர் கதிர் செவ்வாயில் ஒரு கல்லை தாக்கும் சத்தம் ரோவரின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிவந்த சத்தம் மூலம் அந்த கல் எவ்வளவு கடினத்தன்மையுடையதாக இருக்கும் என்பதைத் தீர்மானிக்க முடியும். குறிப்பாக பெர்சவரன்ஸ் ரோவரின் ஸ்பெக்ட்ரோமீட்டர் மற்றும் கேமராக்கள், அந்த கல் எதனால் ஆனது என்பதை ஆராய்ச்சி செய்ய உதவும் என்று கூறப்படுகிறது. அதேபோல் பெர்சவரன்ஸ் ரோவர் தனது பயணத்தின் முதல்கட்ட சோதனை ஓட்டத்தை நிறைவு செய்துள்ளதாக நாசா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
சீன தத்துவவாதியான டியன் சியு (Tien Lcheu) என்பவர் கி.மு. 2697-ஆம் ஆண்டில் கார்பன் நிறமி (Carbon Black) புகைக்கரி (பைன் மர துண்டுகளை) எரித்து கிடைக்கப்பெற்றது), இறைச்சி கொழுப்பு (விலங்குகளின் எலும்புகளிலிருந்து எடுக்கப்பட்ட Gelatin Bone Clue), ஆகியவற்றுடன் விளக்கு எண்ணெய்யையும் சேர்த்து ஆட்டு உரலில் இட்டு அரைத்து அடர் கருப்பு நிறத்தை உடைய எழுதுவதற்கான திரவத்தை தயாரித்தார். இது தான் உலகில் முதன் முதலில் எழுதுவதற்காக தயாரிக்கப்பட்ட மை ஆகும். உலகிலேயே முதன் முதலாக எழுதுவதற்காக தயாரிக்கப்பட்ட இந்த மை-க்கு அதை தயாரித்த டியன் சூட்டிய பெயர் என்னவென்று தெரியுமா 'இந்தியா இங்க்" (India Ink). சீனாவில் கண்டறியப்பட்ட மைக்கு ஏன் இந்தியா இங்க் என்று பெயரிட்டார் என்று கேட்கிறீர்களா... மை தயாரிக்க தேவைப்பட்ட முக்கிய மூலப்பொருளான கார்பன் நிறமி (Carbon Black) இந்தியாவில் இருந்துதான் சீனாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில்தான் டியன், தான் தயாரித்த உலகின் முதல் மைக்கு இந்தியா இங்க் என்று பெயரிட்டார்.
பீச்சுக்குப் போனால் மணலில் உட்கார்ந்து மணல் வீடு செய்வோம், மணலில் குழி பறித்து விளையாடுவோம் இல்லையா? இப்படி விளையாடும்போது கடற்கரையில் இவ்வளவு மணல் எப்படி வந்தது என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா.. கடற்கரையில் மணல் நிரம்பிக் கிடக்க அலைகளே காரணம். அலைகள் எப்போதும் கரையை ஓங்கி அறைந்த படி கரையில் உள்ள கற்களையெல்லம் அரித்துக் கொண்டே இருக்கின்றன. சிறு சிறு கற்களை ஒன்றோடு ஒன்று அலைகள் மோத வைக்கின்றன. இப்படிக் கற்கள் மோதிக்கொள்ளும் போது மாவரைக்கும் இயந்திரத்தில் அரைபடுவது போலக் கற்கள் அரைபட்டு கடல் மணல் உருவாகிறது.
சித்த மருத்துவ குறிப்புக்கள்
KFC Style பிரைடு சிக்கன்
2 days 18 hours ago |
சிக்கன் ரிம் ஜிம் கபாப்
6 days 12 hours ago |
பக்காலா மீன் வறுவல்
1 week 2 days ago |
பாசி பருப்பு பாயாசம்
1 week 5 days ago |
தந்தூரி சிக்கன்
2 weeks 2 days ago |
ஆப்பிள் அல்வா
2 weeks 5 days ago |