முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
நீர்யானை, Hippopotamus

நீர்யானை பன்றி வகையை சேர்ந்தது. ஆப்பிரிக்காவை பூர்விகமாக கொண்டதாகும். நீர்யானை சிந்தும் வியர்வை சிவப்பாக இருக்கும். நீர்யானை பிறந்ததும் ஒரு சுண்டெலியை விட சிறிதாக இருக்கும். நீருக்குள்ளேயே பிறக்கும் குட்டிகள் நீருக்கு அடியில் இருந்தபடியே தாயிடம் பாலருந்துகின்றன. பார்க்க சாதுவாக இருந்தாலும் நீர்யானை கொட்டாவி விட்டால் அது தன் எதிரியை கோபமுடன் தாக்க போகிறது என்று அர்த்தம்.

தமிழ் மொழி, Tamil language

இந்தியாவுக்கு வெளியே ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்ட ஒரே மொழி தமிழ். முதலில் அச்சில் ஏறிய இந்திய மொழி தமிழ். உலகில் அதிகம் பேரால் பேசப்படும் ஆங்கிலத்தில் 10 லட்சம் சொற்கள் உள்ளனவாம்.  தமிழில் 6 லட்சம் சொற்கள் உள்ளதாக நிகண்டுகள் கூறுகின்றன. தனது நிலத்துக்கு வெளியே கல்வெட்டுகள், தொல்படிமங்கள், சான்றாதரங்களை கொண்ட ஒரே மொழி தமிழ்.

காகித பாட்டில், Paper bottle

1907  ஓர் விஞ்ஞான அதிசயம் நடந்தது. அதுதான் லியோ பேக்லேண்ட் என்பவர் பாலிமர் பேக்லைட் எனப்படும் பிளாஸ்டிக்கை கண்டறிந்த ஆண்டு. அதன் பிறகு அணு ஆயுதத்தை விட உலகையே அச்சுறுத்தும் ஒரு நச்சாக மாறும் என அப்போது அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்றைக்கு உலகின் முக்கிய தேவை பிளாஸ்டிக்குக்கு ஒரு உடனடி மாற்று. இந்த சூழலில் நொய்டாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கண்டறிந்ததுதான் காகித பாட்டில். சுக்ஸி பாட்டில் மற்றும் மக்கும் கழிவுகளை கொண்டு இவற்றை 2 ஆண்டு ஆய்வுக்கு பின் வடிவமைத்துள்ளனர். எளிதில் மக்கக் கூடியதாகவும், கசிவுத்தன்மை அற்றதாகவும் இவை உள்ளதாக கூறப்படுகிறது. அப்பாடா எப்படியோ பிளாஸ்டிக்கிலிருந்து தப்பினால் போதும் என்கிறீர்களா.. அதுவும் சரிதான்.

kamba ramayanam, தமிழ் நூல்

மாவீரன் நெப்போலியன் ஏராளமான நூல்கள் அடங்கிய நூலகம் வைத்திருந்தார். அந்த நூலகத்தில் இடம் பெற்ற ஒரு தமிழ் நூல் கம்பராமாயணம்.

குட்டி மொழி, Little language

உலக மொழிகளிலே குறைந்த சொற்களை கொண்ட மொழி - டாகி. கயானா நாட்டின் ஒருசில பகுதிகளில் இது பேசபடுகிறது. இம்மொழியில் வெறும் 340 சொற்கள் மட்டுமே உள்ளன.

பனி, Snow

ஆர்க்டிக் பகுதியில் பனியில் உறைந்திருக்கும் 90 லட்சம் சதுர மைல் பரப்பளவு சுமார் 10 லட்சம் ஆண்டுகள் பழமையானவை. ஆர்க்டிக்கின் பெரும்பகுதி இன்னும் முழுமையாக அறியப்படவில்லை. புவி வேகமாக வெப்பமடைந்து ஆர்க்டிக் பனிப்படலம் உருகுவகுதால், அணுக்கழிவுகள், கண்டுபிடிக்கப்படாத வைரஸ்கள், ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு கட்டுப்படாத பாக்டீரியாக்கள் பரவலாம் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.