முக்கிய செய்திகள்
முத்துக்காளை என்று பேர் சொல்லி அழைத்தால் உடனே அருகில் வரும் | Kaalai Valarpu Interview |
1 day 4 hours ago
வீட்டின் வடக்கு,வடகிழக்கு திசை எவ்வாறு அமைந்து இருக்க வேண்டும் |North North East In Vastu
1 day 4 hours ago
வாடி வாசலில் தாவி குதிச்சு நல்லா விளையாடுவான்..! Kaalai Valarpu Interview |
2 days 5 hours ago
G.D Birla success story | 42 மில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரராக உயர்ந்த பிர்லா..!
3 days 2 hours ago
மாதவிடாய் தள்ளி போகிறதா? 4 எளிய மருத்துவ முறைகள்|Period Problem 4 Tips|P. புஷ்பமாரி சித்த மருத்துவர்
4 days 6 hours ago
வெள்ளரி 10 மருத்துவ குணங்கள்| Cucumber10 health benefits|ரவிச்சந்திரன் சித்த மருத்துவர்
4 days 22 hours ago
முட்டித் தள்ளிய காளைகள்!!! பாய்ந்து அடக்கிய வீரர்கள்!!! | அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2022
5 days 2 hours ago
வாடிக்கு வந்தா பாயும் | ஆனா வீட்டுல ரொம்ப சாது..!
5 days 2 hours ago
IT வேலையை விட்டுவிட்டு டிரக் ரெஸ்டாரெண்ட் நடத்தும் இளைஞர் | Awestruck Restaurant |
6 days 4 hours ago
Honey Chicken Recipe in Tamil |ஹனி சிக்கன்|How to make Honey Chicken in Tamil |Chicken Recipe
1 week 1 day ago
Pudukkottai Kalai | எதிரே வந்தால் ஆக்ரோஷமாக பாயும் காளை செவளை |Kaalai Valarpu Interview |
1 week 1 day ago
Avaniapuram Jallikattu 2022 | அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 2022
1 week 1 day ago
மதுரையை கலக்கும் மஞ்சப்பை பரோட்டா | Madurai Manchapai Parotta |Manchapai Parotta Review
1 week 3 days ago
பேருந்தை தள்ளிச் சென்ற யானை..!
1 week 3 days ago
Maya Angelou coin released | கருப்பின பெண் உருவம் பதித்த நாணயம் வெளியீடு..!
1 week 3 days ago
இந்திரா நூயி

குளிர்பான உலகில் கொடிகட்டி பறக்கும் பெப்சி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான இந்திரா நூயி, சுந்தர் பிச்சையைப் போலவே சென்னையைச் சேர்ந்தவர். கடந்த 1994ம் ஆண்டில் பெப்சி நிறுவனத்தில் இணைந்த நூயி, 2001-ம் ஆண்டு அந்த நிறுவனத்தின் சி.இ.ஒ-வாக உயர்ந்தார். வணிகரீதியிலான கொள்கைகளை வகுக்கும் 19 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றுள்ள ஒரே இந்திய-அமெரிக்கர்  இவர்.

பன்முகம் கொண்ட நாடு

உலக நாடுகள் இந்தியாவை பார்த்து வியக்க காரணங்கள் பல உள்ளன. யுனெஸ்கோ அறிவித்துள்ள பாரம்பரிய இடங்களில் இந்தியாவில் மட்டும் 32 உள்ளன. உலகின் உயரமான இடத்தில் (14,567 அடி உயரத்தில்) அமைந்திருக்கும் தபால் நிலையம் ஹிக்கிமில் (Hikkim)இருக்கிறது.  உலகிலேயே மக்கள் அதிகமாக கூடும் திருவிழா கும்பமேளா. கடந்த 2013-ம் ஆண்டு நடந்த கும்பமேளாவில் 55 நாட்களில் பத்து கோடி பேர் திரண்டனராம். உலகிலேயே அதிகமாக மழைப்பொழிவு பெறும் இடம் மேகாலயா. மாவ்சின்ராம் எனும் கிராமத்தில் ஒரு ஆண்டிற்கு 467 இன்ச் அளவு மழை பொழிகிறது. இங்கிருந்து பத்து மையில் தூரம் தொலைவில் உள்ள சிரபுஞ்சி 2-வது இடத்தில் இருக்கிறது. உலகிலேயே அதிகமாக ஆங்கிலம் பேசும் மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் நமது நாடு 2-ம் இடத்தில் உள்ளது.

மறைந்த கண்டம்..

மொரீஷியஸ் தீவுக்கடியில் கண்டம் மறைந்ததற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொரீஷியஸ் தீவு கடந்த 9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக தோன்றியிருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது மொரிஷீஸ் தீவில் சிர்கான்ஸ் எனப்படும் கனிம பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தது. 9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக தோன்றியதாக கூறப்படும் மொரீஷியஸ் தீவில், 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உள்ள கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொரீஷியஸ் தீவுக்கடியில் கண்டம் மறைந்ததற்கான தடயங்கள் தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தியாவசிய மினரல்

அமெரிக்கா, ஐரோப்பாவில் எட்டில் ஒரு பெண்ணுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுகிறதாம். இந்தியாவிலும் பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் அதிகரித்து வருகிறது. தைராயிடு, மார்பக புற்றுநோய் உண்டாக காரணியாக இருப்பது அயோடின் குறைபாடு. இது நமது உணவில் குறைவாக இருப்பதால், அல்லது நல்ல தரமாக இல்லாததால் தான் ஏற்படும் தாக்கம் தான் தைராயிடு மற்றும் மார்பக புற்றுநோய்!

L1-விசா

அமெரிக்காவில் தற்காலிகமாக பணிபுரிவோருக்கு வழங்கப்படுவது எச்1 பி விசா. இந்த விசா ஆய்வாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் அதிக எண்ணிக்கையில் எச்1பி விசாக்களை வழங்குகிறது. எச்1பி விசாக்களை வைத்திருப்போரின் குடும்பத்தினருக்கு வழங்கப்படுவதுதான் L1 விசா.

கடவுளின் அவதாரம்

உத்தரப்பிரதேசத்தில் ஹார்லிகுவின் பேபி சிண்ட்ரோம் எனும் மரபியல் நோய் பாதிப்பினால் பெண் குழந்தை ஒன்று ஏலியன் போல் பிறந்துள்ளது. அந்த குழந்தையின் கண்கள் பெரிதாகவும், சிதைக்கப்பட்ட முகம், மிக பெரிய தலை, தலையின் மேல் கட்டி போன்று காணப்படும் உருவத்தை கண்டு அப்பகுதி மக்கள் கடவுளின் அவதாரமாக குழந்தையை பார்கின்றனர்.

சங்கடத்தில் பேஸ்புக்

சட்டத்திற்கு எதிராக மற்றொரு நிறுவனத்தின் விஆர் (விர்சுவல் ரியாலிட்டி)எனப்படும் மெய் நிகர் தொழில்நுட்பத்தை ஃபேஸ்புக் நிறுவனம் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு 50 கோடி டாலர்கள் அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்த்ராக்ஸ் தீவு

வடக்கு ஸ்காட்லாந்தில் இருந்து 0.6 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது க்ரூய்நார்ட் தீவு. 2-ம் உலக போரின் போது பிரிட்டிஷ் இராணுவ ஆராய்ச்சியாளர்கள் இங்கு ஆந்த்ராக்ஸ் உள்ளிட்ட இரசாயன ஆயுதங்கள் பரிசோதனை செய்ததால் அந்த தீவு முற்றும் நாசமானது. இதனால் 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்று வரை மக்கள் அங்கு செல்ல அஞ்சுகிறார்கள்.

ஸ்டீவ் ஜாப்ஸ்

உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் தந்தை அப்துல்ஃபடாக் ஜான், சிரியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தவர். தொழில்நுட்பத் துறையில் முன்னோடியான ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லாமல் ஆப்பிள் நிறுவனம் உருவாகியிருக்க வாய்ப்பில்லை. இதன்மூலம் அமெரிக்காவுக்கு பெருமை சேர்த்தவர்.

வெயிலை சேமிக்கும் கருவி

குளிர்காலத்திற்குத் தேவையான வெயிலை (சூட்டை) கோடையிலேயே பிடித்து இனி நாம் சேமித்து வைக்க முடியும். உண்மைதான். சுவிச்சர்லாந்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதற்கான தொழில்நுட்ப சாதனத்தை உருவாக்கி இருக்கிறார்கள். எளிமையாகவும், எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தும் வகையில் இந்த சாதனம் உள்ளது. இதற்குள் இருக்கும் சோடியம் ஹைட்ராக்சைடு ஊடகம், வெப்பத்தை சேமிக்கும் கருவியாக பயன்படுத்தப்படுகிறது. இந்த கருவியை வெயில்படும் இடங்களில் வைத்துவிட்டால் தேவையான அளவு வெப்பத்தை சேமித்து வைக்கும். குளிர்காலத்தின்போது ஒரு பொத்தானை அழுத்தினால் அதில் உள்ள வெப்பம் விடுவிக்கப்பட்டு சுற்றிலும் பரவும்.

கொம்புக்காக வேட்டை

காண்டா மிருகம் வேகமாக அழிந்துவரும் விலங்கினங்கள் பட்டியலில் இருக்கிறது. அதன் கொம்புகள்தான். சீனாவிலும்,  வியட்நாமிலும் காண்டா மிருகத்தின் கொம்புக்கு ஏகப்பட்ட கிராக்கி. ஒரு கிலோ காண்டா மிருக கொம்பின் விலை ஒரு கிலோ தங்கத்தின் விலையை விட  அதிகம். இந்த கொம்பு ஆண்மையை அதிகரிப்பதாகவும், புற்றுநோயை தடுப்பதாக கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் தான் அது அதிகம் கொல்லப்படுகிறது.உண்மையில் இதன் கொம்பில் ஆண்மைக்கான சமாச்சாரம் எதுவும் இருக்கிறதா என்றால் ஒரு சதவீதம் கூட இல்லை என்பதுதான் உண்மை. நமது நகத்திலும், காண்டா மிருக கொம்பிலும் ஒரே வகையான மூலப்பொருட்கள் தான் உள்ளன.

16-ம் நூற்றாண்டிலேயே....

எமோஜிக்கள் எனப்படும் முகபாவனைகளை ஜப்பான் பொறியாளர்கள் கடந்த 1999ம் ஆண்டு உருவாக்கினர். இந்தநிலையில், கடந்த 1635ம் ஆண்டிலேயே எமோஜிக்களின் பயன்பாடு இருந்தது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஸ்லோவாகியா நாட்டில் உள்ள ஸ்ட்ராசோவ் மவுண்டெயின்ஸ் எனும் கிராமத்தில் சுமார் நானூறு ஆண்டுகள் பழமையான எமொஜி பயன்பாடு கண்டறியப்பட்டுள்ளது.