முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
சினிமாவில் முதல் ஃபிளாஸ் பேக்

'ஃபிளாஷ் பேக்' என்பதை சினிமாவின் புரட்சி என்கிறார்கள். இதை சினிமாவில் முதன் முதலாக பயன்படுத்தியவர் அகிரா குரோசோவா என்ற இயக்குனர். அவர் இயக்கிய 'ரோஷோமான்' படத்தில் இந்த நுட்பத்தை பயன்படுத்தினார். இந்தக் கதையை அடிப்படையாக வைத்துதான் தமிழில் சிவாஜி கணேசன் நடிக்க 'அந்த நாள்' என்ற படம் வந்தது. முதன் முதலில் ஃபிளாஷ் பேக்கை பயன்படுத்திய தமிழ் படம் அதுதான்.

விவசாயம் செய்யும் எறும்புகள்

உலகில் மனிதனுக்கு பிறகு தனக்கு தேவையான உணவை தானே விவசாயம் செய்யும் உயிரினம் எது தெரியுமா..அது எறும்புதான்..இந்த எறும்புகள் இலைகளை சின்ன சின்னதாக கத்தரித்து எடுத்து வந்து தனது கூட்டுக்குள் வைத்துவிடும். சில நாட்கள் கழித்து அந்த இலைகளில் ஒருவைகையான பூஞ்சைகள் வளரும். அவற்றை எறும்புகள் உணவாக உண்ணும். இது தான் எறும்புகள் செய்யும் விவசாயம். அந்த இலைகள் காய்ந்த பின் அவற்றை வேலைக்கார எறும்புகள் வெளியே எடுத்து போட்டுவிடும். பிறகு புதிதாக இலைகளை வெட்டி வந்து வைக்கும். அதில் வளரும் பூஞ்சைகளை தான் உண்ணும். இப்படி தனக்கு தேவையான உணவை. தானே விவசாயம் செய்து உண்ணும் உயிரினம் தான் எறும்புகள்.

வினோத பெயர் கொண்ட சிறுவன்

நம்மூர் பெயர்களை வெளிநாடுகளில் கேட்டால் அவர்களால் உச்சரிக்க முடியாது. அதே போலவே ஆங்கில, ரஷ்ய, போலந்து, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் வசிப்பவர்கள் பெயரை கேட்டால் நமது வாயில் கூட நுழையாது. எவ்வாறு இருந்தாலும் அவை அந்தந்த பிராந்தியங்களில் வழக்கமான பெயர்களாக அறியப்படுவதால் வித்தியாசமாக கருதப்படுவதில்லை. அதே நேரத்தில் பெயர் வித்தியாசமாக இருந்தால்.. நம்மூரில் யாராவது அஆஇஈ என பெயர் வைப்பார்களா.. வைப்பார்கள் என்கின்றனர் இந்தோனேஷியர்கள். அங்குள்ள தெற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள ஒரு சிறுவன் தனது விநோத பெயரால் பிரபலமாகியுள்ளான். அவன் பெயர் என்ன என்கிறீர்களா..ABCDEFGHIJK  என்ற ZUZU என்பதுதான் அந்த பெயர். கொரோனா தடுப்பூசி போட வந்ததன் மூலம் அவன் பெயர்  வெளியில் பரவி நெட்டில் வைரலாகியுள்ளான் அந்த சிறுவன்.

கதிர்வீச்சு தன்மை கொண்டவை வாழைப்பழங்கள்

அறிவியல் எப்போதும் ஆச்சரியம் மிக்கவையே. அதிலும் நாம் உண்ணும் உணவுப் பொருள்களின் பல்வேறு அறிவியல் அதிசயங்களை தெரியாமலேயே நாம் அவற்றை பயன்படுத்தி வருகிறோம். அவற்றில் ஒன்றுதான் நீங்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் வாழைப்பழங்கள். அதில் என்ன அதிசயம் என்கிறீர்களா.. வாழைப்பழங்களுக்கு கதிர்வீசும் தன்மை கொண்டவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக நீங்கள் கவலைப்பட தேவையில்லை. அதன் அளவு மிகமிகமிக குறைவுதான். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரே சமயத்தில் உங்களால் 10 மில்லியன் வாழைப்பழங்களை சாப்பிட முடிந்தால் மட்டுமே அதன் கதிர்வீச்சு உங்களை பாதிக்கும் என்கிறார் மெக்ஹில் பல்கலை கழக ஆய்வாளர் ஜோ ஸ்வார்க்ஸ்.

வேப்ப மரத்தில் பால் வடிவது ஏன்

சில வேப்பமரங்களில் திடீரென்று பால்போன்ற நீர் சுரக்கும். பொதுவாக (இயல்பாக) வேப்பமரத்தில் உள்ள மாவுச் சத்தை (ஸ்டார்ச்சை) வேப்பமர இலைகள் சர்க்கரையாக மாற்றும். வேப்பமரத்திற்கு அருகில் நீர்நிலைகள் அதிகம் இருப்பின், மரத்திலுள்ள தண்ணீரின் அளவு அதிகமாகி வேப்பமரப்பட்டையின் அடியிலுள்ள திசு (புளோயம்) பாதிக்கப்பட்டு, மரத்திலுள்ள மாவுச்சத்தை பட்டை வழியே (அதைப் பிளந்து கொண்டு) பால் போல வடிய செய்யும்.இதைத்தான் வேப்ப மரத்தில் பால் வடிகிறது என்கின்றனர். மரத்திலுள்ள தண்ணீரின் அளவு குறையும்போது, பாதிக்கப்பட்ட திசு வளர்ந்து ஓட்டை அடைபட்டு, பால் வடிவது நின்று போகும். இப்படி பால்வடிகின்ற மரங்கள் பெரும்பாலும் நீர்நிலைகளின் அருகில்தான் இருக்கும். அதனால்தான் எல்லா வேப்ப மரங்களிலும் பால் வடிவதில்லை, வறண்ட நிலத்திலுள்ள வேப்ப மரத்தில் பால் வடிவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

திசை காட்டும் தாவரம்

தென் ஆப்பிரிக்க பாலைவனங்களில் காணப்படும் ஒரு வகை தாவர இனம் பாட்சிபோடியம் நாமகுவானம் (Pachypodium Namaquanum). இந்த செடியில் நீளமான ஒரு கிளை மட்டுமே காணப்படுகிறது.மேலும் தண்டு எப்போதும் வடக்கு திசை நோக்கியே சாய்ந்து நிற்க்கும் இயல்புடையது. பாலைவனங்களில் பயணம் மேற்கொள்பவர்கள் இந்த செடியை திசைகாட்டும் கருவியாக பயன்படுத்துகின்றனர்.