முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
கிழக்கையும் மேற்கையும் இணைத்த வர்த்தக நகரம்

மத்திய கிழக்கின் தொல்லியல் பெருமைகளில் பல்மைரா நகரம் தனித்துவமானதாக பார்க்கப்படுகிறது மத்திய கிழக்கில் உள்ள அதி முக்கியத்துவம் வாய்ந்த தொல்பொருள் இடங்களில் பல்மைரா நகரமும் ஒன்று. பாலைவனச் சோலை என கருதப்படும் சிரியாவில் இந்த நகரம் அமைந்துள்ளது. பண்டைய காலங்களில் கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளின் வணிக வழி தொடர்புகளை இணைக்கும் மிகவும் முக்கியமான நகரமாக பல்மைரா விளங்கியது. இந்நகரில் உள்ள பல்வேறு இடங்களையும் ஐநா பாரம்பரிய பட்டியலில் இணைத்துள்ளது.

வரலாற்றில் முதன் முதலாக சட்டம் எங்கு இயற்றப்பட்டது

மெசபடோமியா நாகரிகம் நாம் அனைவரும் நன்கு அறிந்த பண்டைய கால நாகரிகங்களில் ஒன்றாகும். அங்குதான் பழங்கால பாபிலோன் என்ற நகரம் சுமார் கிமு 2300களில் நிறுவப்பட்டது. இந்நகரை மிகவும் புகழ் பெற்ற அரசனான கிங் ஹம்முராபி என்பவன் ஆட்சி செய்து வந்தான். இவன்தான் மனித குல வரலாற்றிலேயே முதன்முறையாக சட்டங்களை வகுத்தான் என்று சொல்லப்படுகிறது. மேலும் இந்த பாபிலோன் நகரம் தொங்கும் தோட்டங்களுக்காக மிகவும் புகழ் பெற்றது. அது உலகின் 7 அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

கிரேக்கர்களால் கட்டப்பட்ட ஆப்கன் நகரம்

கான்ஸ்டிநோபில் என்ற நகரம் எது தெரியுமா.. இன்றைக்கு ஆப்கானிஸ்தானில் நவீன நகரமாக அறிப்படும் இஸ்தான்புல்தான் அது. இந்த இஸ்தான்புல் பல்வேறு சிக்கலான வரலாறுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. கிமு 657 இல் இந்த நகரம் கிரேக்கர்களால் நிறுவப்பட்டது. அப்போது அது பைசான்டியம் என அழைக்கப்பட்டது. பின்னர் பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு ரோமானிய பேரரசன் கான்ஸ்டன்டைன் தனது பேரரசின் தலைநகராக இதை மாற்றினான். அதன் பின்னர் அது ஐரோப்பாவின் முக்கிய நகராக மாறியது. அவர் இறந்த பிறகு அந்த நகருக்கு கான்ஸ்டான்டி நோபில் என பெயரிடப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டில் அந்த நகரம் இஸ்தான்புல் என அழைக்கப்படும் வரை அது அந்த பெயராலேயே விளங்கியது என்றால் ஆச்சரியம் தானே...

தேபெஸ் என்ற பழங்கால நகரம் எங்குள்ளது

தேபெஸ் என்ற கிரேக்க பெயருடன் குழப்பிக் கொள்ள வேண்டாம். இப்படி பெயருள்ள ஒரு பழங்கால நகரம் எகிப்தில் காணப்பட்டது. அதில் கிமு 3200 முதல் மக்கள் வசித்து வந்தனர். உலகிலேயே மக்கள் வசித்து வந்த பழமையான நகரங்களில் இதுதான் முதன்மையானது என்கின்றனர். தற்போது இந்த நகரம் லக்சார் என அறியப்படுகிறது.இங்குள்ள கர்நாக் என்ற பழமையான கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அதில் இன்றும் வரலாற்று சின்னங்கள் உள்ளன. பண்டைய காலத்தில் எகிப்தியர்களின் வாடிகனை போல தேபெஸ் விளங்கியது என்றால் ஆச்சரியம் தானே...

பண்டைய காலத்தில் கண்ணாடி எவ்வாறு தயாரிக்கப்பட்டது தெரியுமா?

பண்டைய காலத்தில் எகிப்தில் கண்ணாடி பயன்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர்கள் குவார்ட்ஸ் எனும் தனிமத்தை மணலிலிருந்து பிரித்தெடுத்து அதை மரச் சாம்பலுடன் கலந்துள்ளனர். பின்னர் அதை களிமண் கலனின் வைத்து சுமார் 750 டிகிரி செல்சியஸ் வரை சூடாக்கப்பட்டது. அந்த கலவை உருகி ஒரு பந்து வடிவை அடையும் வரை இந்த செயல்பாடு தொடரும். பின்னர் குளிர்விக்கப்பட்டு, வண்ணம் சேர்க்கப்படும். மீண்டும் மற்றொரு கலனில் அது செலுத்தப்பட்டு இரண்டாவது முறையாக அதிக வெப்பநிலையில் சூடாக்கப்பட்டு குளிர்விக்கப்பட்டதும் கண்ணாடி பெறப்படும்.

முதல் தலைமுறை கண்ணாடிகள் எதனால் செய்யப்பட்டவை தெரியுமா?

முதல் தலைமுறை கண்ணாடிகள் எதனால் செய்யப்பட்டவை தெரியுமா... முதலில் கலனில் நிரப்பிய நீரால் முகம் பார்த்த மனிதன் பின்னர் கிமு 6 ஆயிரம் வாக்கில் நன்றாக பளபளப்பூட்டப்பட்ட எரிமலை குழம்பு உறைந்த கற்களையே முகம் பார்க்கும் கண்ணாடியாக பயன்படுத்தி வந்தான். இது பயன்பாட்டுக்கு வந்ததும் நீர் கண்ணாடி விடை பெற்றது. கல் கண்ணாடி ஆட்சி புரிந்தது. அதன் பின்னர் மெசபடோமியா பகுதிகளில் பாலீஸ் செய்யப்பட்ட செப்பு தகடுகள் கண்ணாடிகளாக பயன்படுத்திய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.