முக்கிய செய்திகள்

சிறு குச்சியே படகு...

முகப்பு

சிறு குச்சியே படகு...

Parn 2021 10 09

அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவை தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது. கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு அக்டோபரில் புறப்பட்டு மீண்டும் 8300 கி.மீ., பறந்து அர்ஜென்டினாவுக்குச் செல்கின்றன. இது பறவைகளுக்கு இயல்பான விஷயம். இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது என்கிறீர்களா? ஆச்சரியம் உண்டு! அப்பறவை, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைகளோ கிடையாது! கடலின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுக்கும்? அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன. எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் கொள்கின்றன; ஓய்வெடுத்துக் கொள்கின்றன. ஒரு சிறிய பறவைக்கு  16,600 கி.மீ., பறப்பதற்கு ஒரு சிறுகுச்சி ஆதாரமாக இருக்கிறது என்றால் ஆச்சரியம் தானே..

இதை ஷேர் செய்திடுங்கள்: