முக்கிய செய்திகள்

400 ஆண்டுகளாக செதுக்கப்பட்ட சிலைகள்

முகப்பு

400 ஆண்டுகளாக செதுக்கப்பட்ட சிலைகள்

Statues 2021 10 09

பொதுவாகவே ஒரு சிலையை வடிக்கவே பல மாதங்கள் ஏன் வருடங்கள் கூட ஆகலாம். ஆனால் மலையின் மீது மிக பிரமாண்டமான சிற்பங்களை வடிப்பது என்றால்... எத்தனை ஆண்டுகள் பிடிக்கும்... சீனாவின் ஹெனான் மாகாணத்தில் லுவோயாங்கிற்கு தெற்கே 13 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு புத்த குகை வளாகமான லாங்மென் க்ரோட்டோஸ் பண்டைய சீன சிற்ப கலையின் நேர்த்தியான பிரதிநிதித்துவத்தை எடுத்து சொல்கிறது. இங்கு மிகப் பெரிய புத்தர் சிலை 57 அடி உயரத்தில் உள்ளது. இப்பகுதியில் எழுத்துக்கள், சிற்பங்கள் பொறிக்கப்பட்ட கற்கள் 2,500 (ஸ்டெலாக்கள்), ஸ்தூபி வடிவிலான 60 பகோடாக்களும் உள்ளன.  அவற்றில் பழமையானதும் மிகப்பெரியதும் குயங்டாங் ஆகும்.  இவற்றின் கட்டுமானம் 5 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பேரரசர் சியாவோன் ஆட்சியில் தொடங்கியது. ​​வெய் வம்சம் இந்த சிற்பங்களை உருவாக்கியுள்ளது. . பேரரசர் சியாவோன் புத்த மதத்தை தீவிரமாக பின்பற்றியுள்ளார். வெய் வம்சத்திற்குப் பிறகு, டாங் மற்றும் சாங் உள்பட தொடர்ச்சியாக ஆறு வம்சங்கள் மூலம் 400 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த குகைகளில் சிற்பங்கள் செதுக்குவது தொடர்ந்துள்ளது. கேட்கவே ஆச்சரியமாக உள்ளதல்லவா...  இதை 2000 ஆவது ஆண்டில்  உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்: