எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த வார ராசிபலன்
இதை ஷேர் செய்திடுங்கள்:
தேதி: Sunday, December 7, 2025 to Saturday, December 13, 2025
மேஷம்
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)
அஸ்வினி -- இந்த வாரம் விருந்துகளிலும், கேளிக்கை நிகழ்ச்சிகள் மூலமும் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும். புதிய தொழில் தொடர்புகள் மூலம், அரசு வகை ஆதாயங்களும் தொழில் மேன்மை அடையும். இதுவரை எட்டாதிருந்த கனிகளெல்லாம் எட்டும். அதாவது நீங்கள் விரும்பிய பொருட்களெல்லாம் கிடைத்துவிடும். நண்பர்கள், மற்றும் உறவுகளிடம் சுமூகமாக நடந்து கொண்டால் கருத்து பேதங்கள் தவிர்க்கலாம். பெண்களால் சந்தோஷம் இருக்கும். வாகனங்களில் செல்லும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செல்லவும். நல்ல நண்பர்களுடன் பழகுவது நல்லது. தீய குணமுள்ள நண்பர்களைத் தவிர்த்தால், உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களை கொண்டதாக அமையும்.
பரணி -- இந்த வாரம் நற்காரியங்களில் ஈடுபடுவீர்கள். நேர்த்தியாக உடையணிந்து, விருந்தினர்களுடன் கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். மனமகிழ்ச்சி, பகையை வெல்லும் திறன் ஆகியவை ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும். அதற்குத் தக்க வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் வீண்வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மகான்களின் சந்திப்பால் மனம் மகிழும். முயற்சிகள் அனைத்திலும் முன்னேற்றம் அடைவீர்கள். சிலருக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படலாம். நல்ல நண்பர்களின் சேர்க்கை ஏற்படும். அரசு ஆதாயங்களால் தொழில் வழியில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்குத் தோல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டு சரியாகும்.
கார்த்திகை 1 ஆம் பாதம்.— இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றங்களையும், சுகானுபவங்கள் மற்றும் கௌரவத்தையும் அடைவீர்கள். இன்பப் பயணங்களால் சந்தோஷம் பெருகும். சிலர் பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் வாங்க நேரும். தீயோர் தொடர்பு வீண் பிரச்சனைகள் எழலாம். எனவே, எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு அரசால் கெடுபிடிகள் ஏற்படலாம். புதுப்புது தொழில் தொடர்புகள் ஏற்படலாம். அதன் காரணமாகத் தொழிலில் இலாபங்கள் அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் அவமானங்களும், தொல்லைகள் ஏற்படலாம். கல்வியில் வெற்றி பெறக் கவனமாகப் படிக்க வேண்டும்.
ரிஷபம்
( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )
கார்த்திகை 2,3,4 பாதங்கள் – இந்த வாரம் வராத விருந்தினர் வருகையால் வீட்டில் கும்மாளமும், குஷியும் இருக்கும். செலவுக்கும் குறைவிருக்காது. உறவுகளின் ஒற்றுமை ஓங்கும். மிகவும் அன்பு காட்டும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும். குழந்தைகளின் சுட்டித்தனம் மற்றும் சேட்டைகளை கண்டு மனம் மகிழ்ச்சி அடையும். அரசுவகையில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைத்து ஏற்றம் உண்டாகும். தம்பதிகளுக்கு இடையே கோபம் மறைந்து சமாதானமாகி, இணைந்து பேரின்பம் அடைவது உறுதி. தொழிலில் எதிர்பார்த்த அளவுக்கு இலாபம் அடைய புதிய யுக்திகளை கடைப்பிடிப்பீர்கள். மேடைப் பேச்சாளர்கள் தங்கள் பேச்சின் மூலம் வருமானம் ஈட்டுவீர்கள். கொடுத்த கடனை திரும்பப் பெறுவதில் சிக்கல்கள் ஏற்படலாம்.
ரோகிணி – இந்த வாரம் எதிர்பாராத தன வரவுகள் ஏற்படும். பக்திப் பிரசங்கங்கள் கேட்பதில் ஆர்வம் ஏற்படும். புதிய வியாபார தொடர்புகள் மூலம் இலாபம் அதிகரிக்கும். பிறரிடம் கோபத்தால், துர் வார்த்தைகள் பேசாதிருப்பது நல்லது, சகோதர்களிடம் விரோதம் ஏற்படாதிருக்க அனுசரித்துச் செல்லுங்கள். இக்கட்டான சூழ்நிலைகளில் பிறரிடம் கடன் வாங்கும் நிலை ஏற்படும். வேலை விஷயமாக அரசிடம் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வந்து சேரும். வியாபாரத்தில் திட்டமிட்டபடி விரிவாக்கங்கள் செய்து முடிப்பீர்கள். அதன் காரணமாக வருவாய் ஓரளவு அதிகரிக்கும். மாணவர்கள் போட்டி பந்தயங்களில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்ப்பர்.
மிருகசீரிஷம் – 1 , 2 பாதங்கள் – இந்த வாரம் புண்ணிய ஸ்தல யாத்திரைகள் சென்று மகிழ்வீர்கள். சிலருக்குப் பாசம் மிக்க உறவுகளைப் பிரிந்து வாழ நேரிடலாம். பெண்களால் ஆதாயம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். தந்தைவழி உறவுகளால் வீண் தொல்லைகள் ஏற்படலாம். நல்ல நண்பர்களுடன் பழகுவது நன்மை அளிக்கும். இடைவிடாத வேலை காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். மது, மாமிசம் அருந்துபவர்களுக்கு அஜீரண தொல்லைகள் எழலாம். மேடைப் பேச்சாளர் களுக்கு தங்கள் வாக்குவன்மையால் வருமானம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டு பதவி உயர்வின் மூலம் பணப் பலன்களை அடைவார்கள்.
மிதுனம்
(மிருகசீரிஷம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)
மிருகசீரிஷம் – 3 , 4 பாதங்கள். – இந்த வாரம் குடும்பத்தினர் உல்லாசப் பொழுதுபோக்குகளும் விருந்தினர் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். உங்கள் திறமை மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். தொழிலில் ஏற்படும் முழு ஈடுபாடு காரணமாக தாராளமான பணவரவு இருக்கும். சிலருக்குப் பருவ மாற்றம் காரணமாக சளி, தலைவலி, காய்ச்சல் என சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். வீட்டில் ஏற்படும் குழப்பங்கள் காரணமாக உணவின் மீது வெறுப்பு ஏற்படும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் வந்து சேரும். பாசம் மிக்க பெண்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். பயணங்களால் சுகம் ஏற்படும். நீங்கள் ஈடுபடும் காரியங்களில் வெற்றி கிட்டும் என எதிர்பார்க்க முடியாது.
திருவாதிரை --- இந்த வாரம் எதிர்பாராத தனவரவு உண்டு. சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவி கள் கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். தாய் மூலம் நன்மைகள் ஏற்படும். தொழிலில் எடுக்கப்படும் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலம் வருமான வாய்ப்புகள் பெருகும். தேவையற்ற சினத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்கள் குறையும். தந்தைவழி உறவுகளால் வீண் தொல்லைகள் ஏற்படலாம். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, அத்தகையோரை விட்டு விலகுவது உத்தமம். புதிய தொழிலாளர் சேர்க்கை காரணமாக தொழிலில் உற்பத்தி பெருகும்.
புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள். இந்த வாரம் நல்லோர் சேர்க்கையால், பந்துக்கள் வருகையாலும் உற்சாகம் பொங்கும். புண்ணிய கதைகள் கேட்டல், சாதுக்கள் தரிசனத்தால் மனம் அமைதி பெறும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். வாக்கு வன்மை ஓங்கும். சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும். பூரண சயன சுகம் ஏற்படும். பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். காணாமல் போன பொருட்கள் கைக்கு வந்து சேரும். சிலருக்குக் காரியத் தடைகள் ஏற்படலாம். அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும். தொழில் விஷயமாக தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த நடவடிக்கைகள் வெற்றி பெறும்.
கன்னி
( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், அஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)
உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள். இந்த வாரம் உங்களுக்கு சிறப்பான பலன்கள் ஏற்படும். கல்வியில் தேர்ச்சியும், தெய்வ சிந்தனை மற்றும் தர்ம சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர் ரக வாகனங்கள் கிடைக்கும். பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும். சிலருக்கு பணம் சம்பந்தமான சிந்தனைகள் தலைதூக்கும். ஆரோக்கிய பாதிப்பு, காவல்துறையினர் மூலம் அச்சம் ஆகியவை ஏற்படலாம். திட்டமிடப்பட்ட பயணங்களில் தடைகள் ஏற்படலாம். பிறரைக் கண்டு ஏற்படும் பொறாமை மற்றும் கோபங்களை தவிர்ப்பது நல்லது. திடீர்ப் பயணங்கள் மூலம் ஆதாயங்கள் ஏற்படும். பழைய கடன்களை அடைத்து விடுவார்கள். இடைவிடாத பணி காரணமாக நேரத்திற்கு உணவு உண்ண இயலாமல் போகும்.
அஸ்தம் – இந்த வாரம் புதிய தொடர்புகள் நன்மை தரும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். உங்கள் அபரிமிதமான அறிவுத் திறனால் கௌரவப் பட்டங்கள், புதிய பதவிகள் ஆகியவை கிடைக்கும். குடும்பத்தில் பாசப் போராட்டங்கள் ஏற்படலாம். அரசு அதிகாரிகளை அனுசரித்துச் சென்றால் தொழில் அல்லது வியாபாரத்தில் ஏற்படும் சிக்கல்களை சமாளிக்கலாம். கடன்களை அடைக்க தக்க சமயத்தில் பணவரவு ஏற்படும். சிலருக்குப் புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றி பெறும். அரசு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். சில நேரங்களில் சுறுசுறுப்பான நிலையும், மனோபயம் நிலவும்.
சித்திரை – 1,2 பாதங்கள் – இந்த வாரம் பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். ஆடை, ஆபரண இலாபங்கள் பெற்று உற்சாகமாகத் திகழ்வீர்கள். பிள்ளைப் பேறு, தொழிலில் புதிய வாய்ப்புகள் மற்றும் லாட்டரி யோகம் ஆகியவை ஏற்படலாம். சிலருக்கு அக்னி பயம், திடீர் விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் உங்கள் செயல்திறன் கூடும். அதன் காரணம் உங்கள் பணி இலக்கை அடைவீர்கள். சிலருக்கு மற்றவர்களை ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும் புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும். விற்பனைப் பிரதிநிதிகளின் வருமானம் அவர்களின் பேச்சுத் திறனால் அதிகரிக்கும்.
மகரம்
( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )
உத்திராடம்- 2,3,4- பாதங்கள் --- இந்த வாரம் ஆக்கமும், ஊக்கமும் பெருக சுயமாக சம்பாதிக்கும் வழிமுறைகள் கண்டறிவீர்கள். இக்கட்டான சூழ்நிலைகளில் இல்லத்தரசியின் உதவிகள் கை கொடுக்கும். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும். பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். பெண்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு, அதன் காரணமாக குடும்ப முன்னேற்றம் ஏற்படும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். பணிபுரியும் பெண்கள் தங்கள் உயர் அதிகாரிகளின் சொல் கேட்டு நடந்தால் உன்னத நிலை அடைவர். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். பருவநிலை காரணமாக சோம்பேறித்தனம் அதிகரிக்கும்.
திருவோணம்- இந்த வாரம் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். மனதில் தெய்வ பக்தி கூடும். நல் ஆரோக்கியமும், புதுத் தெம்பும், புத்தொளியும் ஏற்படும். பணக்கார மனைவியும் அமைவாள். அழகான, எழில் நிறைந்த வீடு கிடைக்கும். எதையும் சாதிக்கும் திறன் அதிகரிக்கும். பணிபுரியும் இடங்களில் தங்களின் தனித்திறன் அனைவராலும் பாராட்டு பெறும். மதிப்பு மற்றும் அதிகாரம் மிக்க பதவிகளை அலங்கரிக்கும் நிலைக்கு நீங்கள் உயர்வீர்கள். தொழில் புரிபவர்கள் புதிய எந்திரங்களை வரவழைத்து உற்பத்தியை பெருக்கி ஆதாயம் காண்பர். கடன் கொடுத்தவர்கள் கண்டிப்புடன் நடந்து கொள்வர்.
அவிட்டம் 1,2 பாதங்கள் – இந்த வாரம் நல்லதொரு வாகனம் வாங்க முயற்சிப்பீர்கள். மிகக் கடினமான வேலைகளையும் நம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் அசாத்தியத் திறமையால் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். அரசு வேலைகளுக்கு மனுச் செய்தவர்கள் சாதகமான பதில்களை எதிர்பார்க்கலாம். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்தபடி வங்கிக் கடன்கள் சிரமமின்றிக் கிடைக்கும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரின் ஒத்துழைப்பால் அகம் மகிழும். தொழில் விஷயமாக எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய அதிக முயற்சிகள் தேவைப்படும். பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையை காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும்.
கடகம்
(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)
புனர்பூசம் – 4 ஆம் பாதம்.- இந்த வாரம் ஈடுபடும் வேலைகளில் புதிய சாதனைகளை படைப்பீர்கள். நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மீக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், பெண்கள் சல்லாபம், முயற்சிகளில் வெற்றி போன்றவற்றால் மனம் மகிழும். பெரியவர்கள் ஆசியும், மேலதிகாரிகளின் ஆதரவு ஆகியவை கிடைக்கும் புதிய நண்பர்களால் நன்மையும் ஏற்படும். மாணவர்களின் கவனச் சிதறல்கள் காரணமாக படிப்பில் ஆர்வம் குறையும். எனவே, ஆழ்ந்து கவனமாக படித்தால் அதிக மதிப்பெண்கள் பெறலாம். சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படலாம். மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த படி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். சிலருக்கு
பூசம் -- இந்த வாரம் எதிர்பார்த்தபடி தனவரவுகள் கைக்கு வந்து சேரும். வந்த பணத்தை தரும காரியங்களுக்கு தாராளமாகச் செலவு செய்து மகிழ்வார்கள். கேளிக்கை, பிறந்த நாள் விருந்துகள் என மகிழ்ச்சி பொங்கும். தூரதேசத்தில் இருந்து வரும் நல்ல தகவல்களால் மனமகிழ்ச்சி ஏற்படும். அதே நேரம் நண்பர்கள் பகையால் மனக் கலக்கம் ஏற்படும். ஆயினும், நல்லோர் சேர்க்கையால் மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் பெறுவதில் எவ்விதச் சிக்கல்களும் ஏற்படாது. வியாபாரிகள் தங்கள் வாக்கால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தைப் பெருக்குவர். சிலருக்கு உழைப்பு அதிகமாகி அதற்கேற்றார் போல் ஆதாயமும் அதிகரிக்கும்.
ஆயில்யம் – இந்த வாரம் வீட்டுக்கு வரும் விருந்தினருடன் சினிமா, டிராமா என செல்வதால் மனம் மகிழும். ஞானிகளின் அருளால் நல்லதே நடக்கும். புதிய வாகன யோகம் ஏற்படலாம். யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும். உங்களுக்குத் தொழிலில் புதிய கொள்முதல் மூலம் அதிகமான வருவாய் பெருக்கம் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால், எதிர்பார்க்கும் பணி உயர்வுகள் எளிதாக கிடைக்கும். சிலருக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படலாம். மாணவர்கள் தங்கள் கடின உழைப்பால் கல்வியில் நல்ல தேர்ச்சி அடைவர். பணிபுரியும் பெண்களுக்கு இட மாற்றங்கள் ஏற்படலாம்.
சிம்மம்
( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)
மகம் – இந்த வாரம் புதிய முயற்சிகள் மூலம் பண வருமானம் அதிகரிக்கும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். சுபகாரியங்களுக்கு வீடே விழாக்கோலம் காணும். திடீரென ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். வாடிக்கையாளரிடம் நட்புப் பாராட்டும் வியாபாரிகளுக்கு அதிக இலாபம் கிடைக்கும். அதிகாரிகள் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி தலைமைப் பதவிகள் தேடி வரும். வீரம் பொங்கும். தங்கள் சேவைகள் அனைவராலும் அங்கீகரிக்கப்படும். இசை ஆர்வத்தால் சங்கீத சபா களுக்குச் சென்று இசை மழையில் நனை வார்கள்.
பூரம் – இந்த வாரத் ஈடுபடும் புதிய முயற்சிகளால் வாழ்க்கையில் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இருக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். ஸ்த்ரீ சுகம், கேளிக்கை ஈடுபாட்டால் மகிழ்ச்சி, பந்துகள் வரவால் உற்சாகம், மகான்களின் தரிசனம் ஆகியவை ஏற்படலாம். பணியில் இருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த அல்லது விரும்பிய இடத்திற்கு இடமாற்றங்கள் ஏற்படலாம். குழந்தைச் செல்வங்கள் மூலம் மனக்கலக்கம் மற்றும் அவமானம் ஏற்படலாம். பின்னர், தெய்வ தரிசனத்தில் மனம் மகிழ்வதோடு, மனதில் அமைதியும் நிலவும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.
உத்திரம்- 1 பாதம் – இந்த வாரம் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். நீங்கள் விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். சுகமும், ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பண வரவுகள் ஆகியவை ஏற்படும். குடும்பத்தினரிடையே ஓரளவே ஒற்றுமை நிலவும். பயணம், அரசு சம்பந்தமான வேலைகள் மற்றும் தந்தை வகை உறவுகளால் தொல்லைகள் ஏற்படலாம். பின்னர், புதிய தொழில் முயற்சிகளுக்காக எதிர்பார்க்கப்படும் வங்கிக் கடன் உதவிகள் சிரமத்திற்குப் பின் கிடைக்கும். அரசு உதவியுடன் பணவரவு இருக்கும். ஆறுவது சினம் என சினத்தை அடக்கினால் சிரமங்கள் குறையும். உடன் பிறந்தவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
துலாம்
( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)
சித்திரை-3,4 பாதங்கள் – இந்த வாரம் பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வரும் இன்பம் நிலைத்திருக்கும். வீட்டில் அமைதியை நிலைநாட்ட வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற செலவுகளை குறைத்து சிக்கனமாக இருந்தால், பணமுடைகளைத் தவிர்க்கலாம். ஆயினும், எதிர்பாராத இடத்தில் இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும். தங்கள் சகோதரனின் நடவடிக்கைகள் உங்களுக்கு எரிச்சலூட்டும். ஏமாற்றத்தை தவிர்க்க கூட்டாளிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனைவியின் கருத்துத்துக்களுக்கு உரிய மரியாதை அளித்தால் இல்லத்தில் இன்பம் பொங்கும். போட்டி தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும்.
சுவாதி – இந்த வாரம் எதிர்பாராத தனவரவு உண்டு. சுற்றத்தார் மூலமாகவும் பணவுதவி கள் கிடைக்கும். தொழிலில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலம் வருமான வாய்ப்புகள் பெருகும். பின்வரும் நாட்களில் கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தில் குழப்பங்கள் குறையும். தந்தைவழி உறவுகளால் வீண் தொல்லைகள் ஏற்படலாம். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. வீட்டில் சுப காரியங்கள் அனைத்தும் சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். புதிய நண்பர்கள் சேர்க்கை, தொழில் இலாபம் ஆகியவை ஏற்படும். தாய் மூலம் நன்மைகள் ஏற்படும். பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் நல்ல வருமானத்தை அடைவார்கள். கல்வியில் தேர்ச்சி ஏற்படும்.
விசாகம்- 1,2,3 பாதங்கள் – இந்த வாரம் சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். பெரியோர் வாக்குகளைக் கேட்பதால் ஞானத்தன்மை அடைவீர்கள். நல்லதையே நினையுங்கள் நல்லதே நடக்கும். வண்டி, வாகனங்களில் அபராதம் செலுத்தாமல் இருக்க அனைத்து ஆவணங்களையும் மறவாமல் எடுத்துச் செல்லுங்கள். பொருளாதார நிலையை பொறுத்தவரை சிரமமான காலம். அதன் காரணமாக சேமிப்புகளில் இருக்கும் பணத்தில் கை வைக்க வேண்டிய நிலை ஏற்படும். பங்குச் சந்தையில் ஆலோசித்து இறங்குவது நல்லது. புத்திர பாக்கியம், விரிவாக்கங்கள் செய்வதால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். பணிவுடன் நடக்கும் பணியாளர்களுக்கு, அதிகாரிகள் உதவியால் உயர் பதவிகள் கிடைக்கும்.
மீனம்
( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)
பூரட்டாதி – 4 ஆம் பாதம் – இந்த வாரம் எதிர்பார்த்த இனங்களில் இருந்து ஏற்படும் பணவரவால், இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். இறைவழிபாட்டால் இன்பமும் அமைதியும் சேரும். ஆயினும், மனதில் ஏதோவொரு வித பயம் நிலவும். மதிப்பு மிக்க பெரியவர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தரும். தாயார் வகையில் இலாபமும், கற்பனை வளமும் பெருகும். சிலருக்குச் சுறுசுறுப்பற்ற நிலையாலும், மந்த புத்தியாலும் காரியத் தடைகள் ஏற்படலாம். மேலதிகாரிகளின் ஆதரவு மூலம் மேன்மை அடைவீர்கள். மகான்களின் ஆசியும் தொழில் நிலையில் முன்னேற்றங்கள் ஏற்படும். பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு இடமாற்றம் பெற முயற்சிப்பர். அந்த முயற்சிகளில் அவர்கள் வெற்றியும் பெறுவார்கள். விவசாயிகளுக்கு ஆதாயம் கிட்டும்.
உத்திரட்டாதி- இந்த வாரம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சி அனுபவிப்பீர்கள். உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி கரமான கொண்டாட்டங்கள் தூள் பரத்தும். ஆடம்பரச் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு. நேர்மையும் கடின உழைப்பும் மட்டும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும். மாணவர்கள் தங்கள் பொன்னான நேரத்தை முகநூல் மற்றும் இணையதளங்களைப் பார்ப்பதில் வீணடிக்காமல், கருத்தோடு படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெறலாம். . பணிபுரியும் பெண்களுக்கு தற்போது இருக்கும் வேலையை காட்டிலும் நல்ல வேலைக்குப் போகும் வாய்ப்புகள் அமையும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும்.
ரேவதி- இந்த வாரம் பணவரவு அதிகரிக்கும். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். கீர்த்தி பெருகும். புனித காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சில காலம் ஒத்திப் போடுவது நல்லது. சிலருக்கு விஐபி களின் நட்பு உருவாகும். அவர்கள் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும்.. பணிபுரிபவர்களுக்கு உதவியாளர்கள் அமைவர். அரசுப் பணிக்கு முயல்பவர்களுக்கு அனுகூலமான காலமாகும். கால்நடைச் செல்வம், பால் வளம் பெருகும். மனதில் நினைத்ததை நினைத்தபடியே நடத்தி முடிப்பீர்கள். அதிகாரம் பண்ணும் தலை பதவி கிடைக்கும். பலவகைப் பயணங்களும் அதனால் இலாபமும் ஏற்படும். அரசுப் பணியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் தயவால் பயன் பெறுவர்.
தனுசு
( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)
மூலம் – இந்த வாரம் கணவன், மனைவி இடையே மிகுந்த ஒற்றுமை ஏற்பட்டு சந்தோஷம் நிலவும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அலங்காரப் பொருட்கள் மற்றும் வாசனை திரவிய வியாபாரங்களில் அதிக இலாபம் காணலாம். நன்கு ஆராய்ந்து பங்குச் சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதால் இழப்பைத் தவிர்க்கலாம். தேவையற்ற அலைச்சல் தரும் பயணங்களால் தேக சுகம் குறையும். கடமை உணர்வு மிக்க அரசு ஊழியர்களுக்குக் கட்டளைகளை இடும் அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் விஷயத்தில் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம்.
பூராடம் – இந்த வாரம் பெண்களின் வாழ்க்கையில் துன்பங்கள் மறைந்து, முன்னேற்றம் ஏற்படும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்ச்சிகள் மூலம் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். கட்டுப்படுத்தி சேமிப்பை உயர்த்துவது நல்லது. சிலருக்குப் பணி அல்லது வீடு ஆகிய இடமாற்றங்கள் ஏற்படலாம். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் தன லாபம் அதிகரிக்கும். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படும். வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க கடினமாக உழைக்க வேண்டியது வரும். வாடிக்கையாளர்களை கவர புதிய பரிசுத் திட்டங்களை அறிவிப்பீர்கள். விவசாயிகளுக்கு அதிக மகசூல் ஏற்பட்டு, இலாபத்தால் வசதிகள் பெருகும்.
உத்திராடம் –1 ஆம் பாதம் – இந்த வாரம் இனிய பயணங்கள் மற்றும் புண்ணியத் தல யாத்திரைகள் நல்ல பலன் அளிக்கும். பல திசைகளில் இருந்தும் பணம் கூடுதலாக வரும். பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தின் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றி அவர்களை மகிழ வைப்பீர்கள். சிலருக்கு உறவுகளிடையே ஒற்றுமை குறைவால் விரிசல்கள் ஏற்படும். பதட்டப்படாமல் சம்பந்தப்பட்டவர்களிடம் சமாதானமாகப் போவது நல்லது. விற்பனைப் பிரதிநிதிகளுக்கு அலைச்சலுக்கு தக்க ஆதாயம் ஏற்படும். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தொழிலில் புதிய திட்டங்களைத் தீட்டி முன்னேற முயல்வீர்கள். உறவுகள் வருகையால் சந்தோஷம் பெருகுவது போல், செலவுகளும் அதிகரிக்கும்.
விருச்சிகம்
( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )
விசாகம்- 4 ஆம் பாதம் – இந்த வாரம் தன வருமானம் அதிகரித்தால் அனைத்துக் காரியங்களும் அனுகூலமாக இருக்கும். உறவுகள் வருகையால் உள்ளம் மகிழும். அனைத்து வசதிகளும் இன்பமும் ஏற்படும். நல்ல உயர்ந்த மனிதர்களின், பண்பு மிக்கவர்களின் நட்பால் உயர்வு ஏற்படும். அனைவரையும் கவரும் வண்ணம் சிறப்பான உடை அணிந்து மிடுக்காக உலா வருவீர்கள். தொழிலில் மிகப் பெரிய சாதனைகள் புரிவார்கள். அதிகாரிகளுடன் மோதல்களைத் தவிர்த்தால் பணியில் எதிர்பார்த்த உயர்வுகள் இருக்கும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலம் உதவிகள் தடைப்படாது. எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடைய கடின உழைப்பு தேவைப்படும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும்.
அனுஷம் – இந்த வாரம் குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பெரியவர்கள் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். தாயாரின் அனுகூலமான வார்த்தைகள் உற்சாகம் அளிக்கும். பூஜை, புனஸ்காரங்கள் ஆர்வம் ஏற்பட்டு மனைவியின் ஒத்துழைப்பு கிடைக்கும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூரண சுகம் கிடைக்கும். அரசுப் பதவியில் உள்ளவர்கள் தயவால் அனுகூலமான பலன்களை அடைவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும். மேல்மட்ட அதிகாரிகள் ஆதரவால் பதவி உயர்வுகளை அடையும் வாய்ப்பு பிரகாசமாக அமையும்.
கேட்டை – இந்த வாரம் சுபச் செய்திகள் வந்து காதுகளில் தேனைப் பாய்ச்சும். தனலாபம் தாராளமாக இருக்கும். புத்தி தெளிவு மற்றும் செயல்திறன் அதிகரிக்கும். சிலருக்கு, புது தெம்பும், உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும். அந்தஸ்து உயரும். உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர். புதிய கொள்முதல் களால் வியாபாரம் பெருகி இலாபம் அதிகரிக்கும். தொட்டது துலங்கும். பொழுது போக்குச் செலவுகள் அதிகமாகும், ஆதலால் பணமுடையும் இருக்கும். பணியாளர்களின் கடின உழைப்பால் அவர்கள் எதிர்பார்த்த ஆதாயம் இருக்காது. எழுத்துத் தொழிலில் வேலையில் காட்டப்படும் சிரத்தை மற்றும் கடின உழைப்பால் கல்லாக் கட்டுவீர்கள். தங்களுக்கு கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர்.
கும்பம்
( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)
அவிட்டம் – 3,4 பாதங்கள்— இந்த வாரம் தாராளமான தன வரவு வரும். இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். குழந்தைகளின் நடவடிக்கைகள் சந்தோஷத்தைத் தரும். மண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். மனதில் ஏற்பட்ட விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். குறித்த நேரத்திற்கு தரமான உணவுண்ணும் பாக்கியம் பெறுவீர்கள். பால்ய நண்பர் வரவால் உள்ளம் மகிழ்வீர்கள். அரசு துறையில் பணிபுரிபவர்கள் நீங்கள் விரும்பிய இடத்திற்கு மாற்றங்களை எதிர்பார்க்கலாம். சிலருக்கு மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். நெருங்கிய நண்பர்களின் உதவியால் கூட்டாளிகளிடையே ஏற்பட இருந்த குழப்பங்கள் சரியாகும்.
சதயம்- இந்த வாரம் வாக்கின் மூலம் நல்ல வருமானம் பார்ப்பீர்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான முன்னேற்பாடுகள் நடக்கும். பணிபுரியும் பெண்களுக்குத் தங்கள் துறையில் எதிர்பார்த்த பணி உயர்வு கிடைக்கும். போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காவிட்டால் அபராதம் செலுத்த வேண்டிய நேரம். நவீன காலத்துக்கு ஏற்றபடி புதுப்புது சாமான்களை அறிமுகப்படுத்தி வியாபாரத்தில் அதிக இலாபம் பெறுவீர்கள். அரசுப் பணியாளர்கள் அக்கறையுடன் பணிபுரிந்து, அதிகாரிகள் பாராட்டுதல்களை பெறுவார்கள். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் தீரும், புதிய கடன்களை வாங்க வேண்டிய சூழ்நிலை எழும். தீய குணம் உள்ள நபர்களிடம் இருந்து விலகி இருப்பதே நல்லது. புதிய முதலீடுகளால் தொழில் ஏற்றம் காணும்.
பூரட்டாதி-1,2,3 பாதங்கள் – இந்த வாரம் ஞானம் மேலிடும். பலவழிகளிலும் பணவரவு ஏற்படும். . இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். உங்கள் பேரும் புகழும் கூடும். குடும்ப உறவுகளின் ஒத்துழைப்பால் குடும்ப முன்னேற்றம் சாத்தியப்படும். அரசுப் பணி புரிபவர்களுக்கு அனுகூலமான வாரம். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். ஆரோக்கியமான சூழ்நிலை உருவாகும். அரசு உதவிகள் தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். உங்கள் திறமை மிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும்
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 2 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம்: சென்னையில் இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
11 Dec 2025சென்னை, தமிழகத்தில் விடுப்பட்ட மகளிருக்கு 2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை சென்னையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
-
தமிழ்நாட்டில் மக்களின் வாக்குரிமையை பறிக்க வாய்ப்பு உள்ளது: திருமாவளவன்
11 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் மக்களின் வாக்குரிமையை பறிக்கிற வாய்ப்பு உள்ளது நாடாளுமன்றத்தில் திருமாவளவன் தெரிவித்தார்.
-
தமிழ் கவிஞர் பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
11 Dec 2025சென்னை, தமிழ்ச் சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 11-12-2025
11 Dec 2025 -
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ஐ.நா. ரூ.316 கோடி நிதியுதவி
11 Dec 2025கொழும்பு, டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ.316 கோடி நிதியுதவி அளிக்க உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
செங்கோட்டையன் - நாஞ்சில் சம்பத் சந்திப்பு
11 Dec 2025சென்னை, சென்னையில் த.வெ.க.மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் செங்கோட்டையன் - நாஞ்சில் சம்பத் சந்தித்து பேசி கொண்டனர்.
-
காசா அமைதி திட்டத்திற்கு ஆதரவை அளித்த இந்தியா பிரதமர் மோடி அலுவலகம் அறிக்கை
11 Dec 2025புதுடெல்லி, காசா மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போரால் 69 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
-
கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: மக்களவையில் தி.மு.க. கோரிக்கை
11 Dec 2025புதுடெல்லி, கலைஞர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மக்களவையில் தி.மு.க. எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை விடுத்தார்.
-
திபெத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிலநடுக்கம்
11 Dec 2025பீஜிங், திபெத்தில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 4, 5 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
எஸ்.ஐ.ஆர். தொடர்பான வழக்கில் ஜனவரி மாதம் இறுதியில் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
11 Dec 2025புதுடெல்லி, எஸ்.ஐ.ஆர் தொடர்பான வழக்கில் ஜனவரி மாதம் இறுதியில் தீர்ப்பு வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
-
ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பில் பிணையப் பத்திரங்கள் ஏலம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
11 Dec 2025சென்னை, ரூ.5000 கோடி மதிப்பிலான பிணைய பத்திரங்கள் ஏலம் விடுவதா தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 11-12-2025
11 Dec 2025 -
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நாளை உண்ணாவிரதம்: நிபந்தனைகளுடன் ஐகோர்ட் கிளை அனுமதி
11 Dec 2025மதுரை, திருப்பரங்குன்றம் விவகாரத்தை தொடர்ந்து வருகிற 13-ம் தேதி நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்கு மதுரை கிளை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
-
கூட்டணி விவகாரத்தில் விஜய்க்கு முழு அதிகாரம்: த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள்
11 Dec 2025சென்னை, த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
வெண்கலம் வென்றது இந்தியா
11 Dec 2025சென்னை, 14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஆக்கி தொடரில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை தட்டி சென்றது.
-
தி.மு.க.வில் இணைந்தது ஏன்? பி.டி.செல்வகுமார் விளக்கம்
11 Dec 2025சென்னை, நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு 27 ஆண்டுகளாக மேலாளராக பணியாற்றியவர் பி.டி.செல்வக்குமார்.
-
பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தால் உக்ரைனில் விரைவில் தேர்தல் நடத்தப்படும்: அதிபர் ட்ரம்புக்கு ஜெலன்ஸ்கி பதிலடி
11 Dec 2025கீவ், உக்ரைனில் தேர்தலை நடத்தாமல் இருக்க போரை நடத்துகிறார் ஜெலன்ஸ்கி என்று அதிபர் ட்ரம்ப் கடுமையாக தாக்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளித்தா
-
டிசம்பர் 14 முதல் பா.ம.க.வில் விருப்ப மனுக்கள் விநியோகம்: அன்புமணி அறிவிப்பு
11 Dec 2025சென்னை, வருகிற 14-ம் தேதி முதல் பா.ம.க.வில் விருப்ப மனுவை தாக்கல் செய்யலாம் என்று அன்புமணி தெரிவித்தார்.
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்
11 Dec 2025சென்னை, திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை திரும்ப வழங்க 3 நாட்கள் கால அவகாசம்: வரும் 14-ம் தேதி வரை வழங்கலாம் - தேர்தல் ஆணையம்
11 Dec 2025சென்னை, தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். படிவங்களை திரும்ப வழங்க காலஅவகாசத்தை நீட்டித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
டி-20 கிரிக்கெட் போட்டி: 100 விக்கெட்களை எடுத்து ஹர்திக் புதிய மைல்கல்
11 Dec 2025நியூ சண்டிகர், டி-20 கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட்களை எடுத்து ஹர்திக் பாண்ட்யா புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
அபார வெற்றி...
-
தமிழ்நாடு முழுவதும் 1.50 லட்சம் ஈ.வி.எம். சரிபார்ப்பு பணி துவக்கம்
11 Dec 2025புதுடெல்லி, தமிழகத்தில் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்படும் 1.50 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்ப்பு பணி நேற்று முதல் தொடங்கியது.
-
சுப்ரியா சாகுவுக்கு ஐ.நா. விருது: தமிழ்நாடு பெருமை கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
11 Dec 2025சென்னை, சுப்ரியா சாகுவின் பணிகள் தொடர ஐ.நா. விருது பெரும் ஊக்கமாக அமையும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
எஸ்.ஐ.ஆருக்கு எதிராக போராட பெண்களுக்கு மம்தா அழைப்பு
11 Dec 2025கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) குறித்து கடுமையாக விமர்சித்த திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் - 11-12-2025
11 Dec 2025



