முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இந்த வார ராசிபலன்

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: Monday, April 22, 2024 to Sunday, April 28, 2024
மேஷம்
aries-mesham

 (அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)

அஸ்வினி --       இந்த வாரம் எதிர்பாராத விதமாக வீட்டுக்கு செலவுகள் அதிகரிக்கும். பின்னர், திருமகளின் கருணையால் ஓரளவுக்குப்  பொருளாதார முன்னேற்றங்கள் சிறப்பாக அமைந்து மனமகிழ்ச்சி தரும். நவீன வசதிகளுடன் கூடிய புதிய இருசக்கர வாகனம் வாங்க முயற்சி எடுப்பீர்கள். பல வழிகளில் உங்களை நீங்கள் அழகுபடுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்குத் உங்கள் குடும்பத்தையும், பணியையும் ஒரு சேர பார்ப்பதில் இடைச்சல்கள் ஏற்படும். ஓய்வின்றி, அடிக்கடி ஏற்படும் வெளியூர்ப் பயணங்களால் அசதி ஏற்படும். மிகப் பிரபலமான நபர் சந்திப்பால், நீங்கள் விரும்பிய இடத்திற்கு, இடமாற்றம் பெறுவீர்கள்.

பரணி  --      இந்த வாரம்  அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் அனுகூலமாக இருக்கும். உறவுகள் மற்றும் நண்பர்கள், தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவார்கள். மேடைப்பேச்சு, பட்டிமன்றப் பேச்சாளர்களின் முன்னேற்றம் சிறப்பானதாக இருக்கும். அன்னையின் அரவணைப்பில் அகம் மகிழும். தட்டிக் கொடுத்து வேலை வாங்கினால் உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் வேலையில் கை கொடுப்பர். அதன் காரணமாக உற்பத்தி பெருகி, இலாபமும் அதிகரிக்கும். தங்கம், வெள்ளி, துணி, ஆயத்த ஆடைகள், புத்தகங்கள், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் ஆகிய வியாபாரத்தில் நல்ல ஆதாயத்தை எதிர்பார்க்கலாம். பெற்றோர்களின் உடல்நிலை சீராக இருக்காது. இல்லத்தில் இனிய சுபகாரியங்கள் நடைபெறும்.

கார்த்திகை  1 ஆம் பாதம்.—       இந்த வாரம் வீட்டில் திருமணம் போன்ற மகிழ்ச்சி கரமான சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். விருந்தினர் வருகை ஆனந்தம் அளித்தாலும், செலவுகள் அதிகரிக்கும். கல்வியில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். மிகவும் கஷ்டப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதால் மகிழ்ச்சியடைவீர்கள். உங்கள் சுறுசுறுப்பு மிக்க செயல்பாடுகளால் அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள். செல்வாக்கு மிக்கவர்கள் புதிய நட்பால் உங்கள் எதிர்காலம் ஒளிமிகுந்த தாகும். சிலருக்குப் பதவி உயர்வுடன் கூடிய பணி மாற்றங்கள் ஏற்படலாம். அதன் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரியும் நிலை ஏற்படலாம். பெற்றோர்கள் தங்களின் உயர்வு கண்டு உள்ளம் மகிழ்வர்.

ரிஷபம்
taurus-rishibum

( கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )

கார்த்திகை 2,3,4 பாதங்கள் –      இந்த வாரம் உங்கள் உற்றார் உறவினர் ஆகியோர், உங்கள் அசாத்திய முன்னேற்றம் கண்டு பெருமிதம் கொள்வர்.  எல்லாக் காரியங்களும்  சிறப்புற, வெற்றிகரமாக நடக்கும். அரசு மூலம் வரவேண்டிய அனைத்து பண நிலுவைகள் அதிகாரிகள் பலத்த சிபாரிசின் மூலம் கிடைத்துவிடும். வியாபாரத்தில் அதிக இலாபங்கள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரவு தாராளமாக இருக்கும். அரசாங்கத்திடமிருந்து அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் வந்து சேரும். கேளிக்கை விடுதிகளில், ஆரவாரம் மிக்க சூழலில், மகிழ்ச்சி பொங்க, விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் சூழ்நிலை உருவாகும்.

ரோகிணி  –       இந்த வாரம் பூமி, வீடு மூலம் இலாபம் ஏற்படும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நிறைவேறி மகிழ்வு தரும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். குழந்தைகளின் பிடிவாத குணத்தால் தொல்லை ஏற்படும்.  வீடு மாற்றம், தொழில் மாற்றம் என வாழ்க்கையில் ஏதேனும் ஒரு மாற்றம் ஏற்படும். வியாபாரிகள் புதிய யுக்திகளை பயன்படுத்தி, வாடிக்கையாளர்களை கவர்ந்து, அதிக இலாபம்  பெற முயற்சி செய்வீர்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி நடப்பதும், அவர்கள் சொல்லுக்கு மறுபேச்சு பேசாமல் பணிந்து நடப்பது பணியில் முன்னேற்றங்களைத் தரும். தாய்வழி உறவுகளால் சுகங்களும், சந்தோஷங்களும் ஏற்படும்.

மிருகசீரிஷம் – 1 , 2 பாதங்கள் –       இந்த வாரம் மனதில் நினைத்தது நினைத்தபடி நடக்கும். வீட்டு விசேஷங்களுக்கு வெளியில் அலைந்து திரியும் நிலை ஏற்படும். உடன் பிறப்புக்களின் நடவடிக்கைகள் வெறுப்பை ஏற்படுத்தும். தம்பதிகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து, ஒற்றுமை நிலவும். பணிபுரியும் இடங்களில் வேலைப்பளு அதிகமானாலும், அதற்கேற்ற ஆதாயம் இருக்கும். ஒரு சிலருக்கு உழைப்பின் காரணமாக, அசதியும், உடல் பாதிப்பும் ஏற்படலாம். தொழில் வகையில் ஏற்ற, இறக்கங்கள் இருந்தாலும் ஒரளவு சமாளித்து விடுவார்கள். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த தனவரவு இல்லாமல் வங்கியில் ஓவர் டிராப்ட் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

மிதுனம்
gemini-mithunum

(மிருகசீரிஷம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

மிருகசீரிஷம் – 3 , 4 பாதங்கள். –       இந்த வாரம் பிறர் உங்களை புகழ வேண்டும் என்பதற்காக, கடினமான காரியங்களையும் இழுத்துப் போட்டுச் செய்வார்கள். அதேபோல் பணியிடத்தில் அதிகாரிகள் பாராட்டைப் பெறுவார்கள். காவல்துறை, இராணுவம் போன்ற சீருடைப் பணியாளர்கள் சீரிய சேவைக்கான பதக்கங்கள், பாராட்டுக்கள் கிடைக்கும்.  விபத்துக்களை தவிர்க்க வாகனங்களை இயக்கும் போது அதிக கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இயக்கவும். மாணவர்கள் புதிய கல்லூரிகளில் சேர்ந்து, கல்வியில் சிறப்புற்று, உயர்ந்த நிலையை அடைவார்கள். (ஹை ரேங்க்). குடும்பத்தில் குழப்பங்கள் தீர்ந்து குதூகலம் உண்டாகும். மனைவி, குழந்தைகளின் மன விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

திருவாதிரை ---       இந்த வாரம் இளைஞர்கள் நண்பர்களுடன் பார்ட்டி களுக்குச் சென்று மகிழ்வீர்கள். புது மாடல் இருசக்கர வாகனத்தை வாங்க முயற்சி செய்வீர்கள். நெடுநாட்களாக பெண் தேடி அலைந்தவர் களுக்கு திருமணம் உறுதியாகி, அதன் காரணமாக ஆகாயத்தில் மிதப்பார்கள். உங்கள் அன்பு மிக்க செயல்களால், உறவுகள் மகிழ்ச்சி கொள்வார். புத்திர பாக்கியத் தால் ஒரு நபரை ரேஷன் கார்டில் சேர்க்கும் பாக்கியம் ஏற்படும்.பணிபுரியும் பெண்கள் தங்கள் பணியிடத்தில் ஏற்படும் பிரச்சனைகளை தாங்களே சமாளித்துக் கொள்வர். என்ன சமாதான முயற்சிகள் மேற்கொண்டாலும், வீட்டில் எதிர்பாராத விதமாக ஏற்படும் சச்சரவுகள் சமாளிக்க முடியாமல் போகலாம்.

புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்.       இந்த வாரம் வாக்குவன்மை ஓங்கும்.  சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும்.  பூரண சயன சுகம் ஏற்படும்.  பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும். உங்கள் அழகும் பொலிவும் கூடும். பெயரும், புகழும் ஓங்கும். அறிவுத்திறனும் கூடும். சிலர் பண விஷயங்களில் ஏமாற நேரலாம். எச்சரிக்கை தேவை. நல்லவர்களுடன் பழகுவது நல்லது. அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். வாகன வசதியும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும்.  தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேறக் காலதாமதம் ஆகலாம். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. வியாபாரிகளுக்கு வங்கிக் கடன்கள் கிடைக்கத் தாமதம் ஆகலாம்.

கன்னி
virgo-kanni

( உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், அஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)

உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்.      இந்த வாரம் கேளிக்கை, பிறந்த நாள் விருந்துகள் எனச் செலவுகளோடு, மகிழ்ச்சி பொங்கும் வாரமாக அமையும்.  அரசு மரியாதை கிட்டும். உயர் பதவிகள் கிடைக்கும்.  பல புண்ணியத் தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு உயர் பதவிகளும் அதனால் வருவாய் பெருக்கமும் ஏற்படும். வியாபார சம்பந்தமான  வெளிநாட்டு பயணங்களும், அதனால் ஆதாயங்களும் ஏற்பட்டு, எதிர்பாராத தன வரவுகள் கைக்கு வந்து சேரும். பணம் வந்தால் செலவுகளும் வரும் தானே ? வியாபாரிகளுக்கு வாக்கால் வருமானம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கம் மூலம் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும், அதிகாரிகள் அனுசரணையால் வெற்றிகரமாக முடியும்.

அஸ்தம் –       இந்த வாரம் மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகள் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். சிலருக்குப் பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமாகக் கிடைக்கும். திடீர் பயணங்களால் ஆதாயம் ஏற்படலாம்.  பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் வாங்க நேரலாம். இடைவிடாத பணி காரணமாக நேரத்திற்கு உணவு உண்ண இயலாமல் போகும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பிரபலமானவர்களின் நட்பால் உங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்வீர்கள். வியாபாரிகளுக்கு வங்கி மூலம் கடன் உதவிகள் சிறிது தாமதத்திற்கு பிறகு கிடைக்கும்.  சுற்றுலாத்  தலங்களுக்கு குடும்பத்துடன் பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும்.

சித்திரை – 1,2 பாதங்கள் –       இந்த வாரம் வங்கிக் கணக்குகளில் கையிருப்பு கூடும். சிலருக்கு மனை வாங்கும் யோகம் ஏற்படும். மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும்.  சிலர் நடக்கும் போது கீழே விழுந்து எழ நேரும். எனவே, எச்சரிக்கை தேவை. படிப்பைப் பொறுத்தவரை, உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அன்றாட வருமானத்தில் சீரான வளர்ச்சி இருக்கும். அரசு அதிகாரிகளுக்கு துணைபுரிய அநேக கீழ்நிலை உதவியாளர்கள் அமைவர். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அதற்கான அனுகூலமான பதில்கள் அரசிடமிருந்து  கிடைக்கும். எழுத்தாளர்களுக்கு  தங்கள் தொழிலில் ஏற்றம் ஏற்படும். ஆரோக்கியம் மேம்படும். வீண் சச்சரவுகளை விலைக்கு வாங்காதீர்கள்.

மகரம்
capricorn-magaram

( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )

உத்திராடம்- 2,3,4- பாதங்கள் ---       இந்த வாரம் தொலை தூரத்திலிருந்து நற்செய்திகள் வந்து மகிழ்ச்சி அளிக்கும். உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர். அனைத்துக் காரியங்களிலும் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். புதுத்தெம்பு, உற்சாகமும் கூடும். வாகன வசதிகள் மேம்படும். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்குக் கௌரவப் பட்டங்கள் கிடைக்கும். தூரப் பயணங்கள் போகும் போது எச்சரிக்கை தேவை. உங்களுக்கு  உழைப்பு அதிகமாகி. அதற்கேற்ற இலாபமோ, பலனோ கிடைக்காது. ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம். புத்தி தெளிவு மற்றும் செயல்திறன் அதிகரிக்கும். மதிப்பும், அந்தஸ்து உயரும். சிலருக்கு அதிகாரப் பதவியும், அமைச்சர் போன்ற பதவிகளும் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.

திருவோணம்-       இந்த வாரம் பல வகையான உயர்ந்த வாகன வசதிகள் அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூரண சுகம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டாகும். சொற்பொழிவுத் திறன் அதிகரிக்கும். சிலருக்குப் புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். அரசு பதவியில் உள்ளவர்கள் வேண்டியவர்களாக அவர்களால் பயன் பெறுவர். நல்ல புத்திர பாக்கியம் ஏற்படும்.  பண விஷயத்தைப் பொறுத்தவரை வரவுகள் அதிகமாக திருப்திகரமான வாரமாக இருக்கும். நீண்ட நாளாக வராத கடன் பாக்கிகள் வசூலாகும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலம் உபகாரங்கள் தடைப்படாது. எடுத்த  புதிய முயற்சிகள் யாவும் வெற்றி அடைய கடின உழைப்பு தேவைப்படும்.

அவிட்டம் 1,2 பாதங்கள் –       இந்த வாரம் குடும்பத்தில் நல்ல உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். இல்லத்தில் மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்கள் நடக்கும். திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்துக்கு முயற்சிகள் பெற்றோர்களால் மேற்கொள்ளப்படும். சுற்றமும், நட்பும் சூழ சுபகாரியப் பேச்சுக்கள் நடைபெறும். அதன், காரணமாகத் தாராளமான  பணச் செலவுகள் ஏற்படும். இனிய தகவல்கள் இல்லம் தேடி வரும். நல்ல விஷயங்களுக்காக அலைச்சல்கள் ஏற்படும்.  நெடுந்தூர பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசு ஊழியர்களுக்கு அவர்கள் இடும் கட்டளைகளை ஏற்று நடக்கும்படியான அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ சங்கல்பத்தால் புத்திர பாக்கியம் ஏற்படும் வழி பிறக்கும்.

கடகம்
cancer-kadagam

(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

புனர்பூசம் – 4 ஆம் பாதம்.       இந்த வாரம் மனதில் புதிய வீடு, மனை ஆகியவை வாங்கும் எண்ணம் மேலோங்கும்.  மனோதைரியம் ஓங்கும். பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும், சிலருக்கு நல்ல குரு வாய்க்கப்பெற்று ஆன்மீக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும். தாய்வழி உறவுகளால் எதிர்பார்த்த ஆதாயம்  இருக்கும். பெரியவர்கள் ஆசியும், மேலதிகாரிகளின் ஆதரவு, புதிய தொடர்புகள் ஆகியவை மூலம் நன்மையும் ஏற்படும். மாணவர்களுக்கு கல்லூரிச் சூழல்கள் புதிய அனுபவங்களைத் தரும். சிலருக்குப் புதிய இட மாற்றங்கள் ஏற்படலாம். சிலருக்கு அவர்களின் சீரிய உழைப்புக்காக அரசாங்க விருதுகள் கிடைக்கும். வியாபாரிகள் தங்கள் வாக்குவன்மையால் வியாபாரத்தில் அதிக இலாபம் ஈட்டுவர்.  

பூசம் --        இந்த வாரம் ஆன்மிகப் பெரியவர்கள் தரிசனம் கிடைத்து, வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்களும் கிடைக்கும். வீட்டில் தெய்வ வழிபாடு மற்றும் தெய்வீக கருத்துக்களைக் கேட்டல் என தெய்வீக வாரமாக அமையும். அதன் காரணமாக சங்கடங்கள் தீர்ந்து, மனதில் ஓர் ஏகாந்தமான அமைதி நிலவும். தனவரவு, கூட்டாளிகள் ஒத்துழைப்பு, எதிர்பாலர் சந்தோஷம், புகழ், கௌரவம், திருமணம் மற்றும் பெரியவர்கள் ஆசி ஆகியவை ஏற்படும். பணியில் முன்னேற்றம், கீழே பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு ஆகியவை கிடைக்கும், வெளிநாட்டு வாசம் ஏற்படலாம்.  பெண்களால் இலாபம் உண்டு. தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்க, உறவுகள் மத்தியில் வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது. 

ஆயில்யம் –     இந்த வாரம் தங்கு தடையின்றி தனவரவு ஏற்பட்டு, மனதில் மகிழ்ச்சி பொங்கும். பேரின்பம் பெறும் விதமாக மனைவி முழுகாம இருக்கும் சேதி கேட்டு ஆகாயத்தில் மிதப்பது போல் ஆனந்தம் அதிகரிக்கும். மாபெரும் சபைகளில் மாலைகள் விழும் அளவுக்கு உங்கள் புகழ் ஓங்கும். பக்தி மேலீட்டால் பல திருப்பணிகள் செய்ய மனதில் நாட்டம் ஏற்படும். தெய்வ அருள் மூலம் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்கள் ஏற்படும். சுற்றமும் நட்பும் சூழ சொகுசு வாகனத்தில் உல்லாச சுற்றுலா பயணங்கள் செல்வதன் காரணமாக உள்ளம் மகிழும்.  தொழிலைப் பொறுத்தவரை சிறு சிறு தடைகள் ஏற்படலாம். இடைவிடாத உழைப்பின் காரணமாக வேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும்.

சிம்மம்
leo-simmam

( மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

மகம் –       இந்த வாரம் சொத்துக்கள் சேரும், தான தர்மத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் கஷ்டமும், சுகமும் மாறி மாறி வரும்.  கலைத் துறையில் உள்ளவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும்.  உயர்ரக வாகனங்கள் வாங்கும் யோகம் அமையும். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டு. புத்தக வெளியீட்டாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோருக்கு முன்னேற்றம் இருக்கும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு இருப்பதால் சமயம் பார்த்துத் தங்களுக்கு தேவையான வேலைகளை சாதித்துக் கொள்ளலாம்.  புதிய தொழில் முயற்சிகள் அரசுக் கடன் உதவியுடன் வெற்றி பெறும். குடும்பத்தில் பிரிந்த தம்பதிகள் இணைந்து பேரின்பம் அடைவர்.

பூரம் –       இந்த வாரம் திருமணம், சந்ததி விருத்தி ஆகியவை ஏற்படலாம்.  உடன்பிறப்புகள் மூலம் நன்மைகள் உண்டு. சுபகாரியச் செலவுகள் ஏற்படும். பயணங்களால் ஆதாயமும், மகிழ்ச்சியும் ஏற்படும். கௌரவப் பட்டங்கள் பதவிகள் கிடைக்கும். உங்கள் சேவைகள் உயர் அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும். உங்கள் உயர்வைக் கண்டு பிறர் பொறாமை கொள்வர். சிலருக்கு உஷ்ண சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம்.  தலைமைப் பதவிகள் தேடிவரும். வியாபாரிகளுக்கு முதலீடுகள் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். உங்கள் மீது மிகவும் அன்பு செலுத்தும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும்.

உத்திரம்- 1 பாதம் –       இந்த வாரம் குடும்பத்தார்  விரும்பிய பொருட்களை எல்லாம் உடனே வாங்கித் தருவீர்கள்.. சுகமும் ஆரோக்கியமும் பெருகும்.  கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தர்ம சிந்தனையும் ஏற்படும். சிலருக்குத் உங்கள் விருப்பம் போல் உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். குழந்தைகளின்  சுட்டித்தனம், சேட்டைகள் கண்டு மனமகிழ்ச்சி ஏற்படும்.   சிலருக்கு புத்திர பாக்கியம்  ஏற்படும். மாணவர்களின் கல்லூரிக் கனவுகள் நிறைவேறும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்த்த அளவுக்கு பண வருமானம் இருக்கும். உறவினர் வருகை, விருந்தால் மகிழ்ச்சி, கேளிக்கைகளில் சந்தோஷம் ஆகியவை ஏற்படும். பிரபலமானவர்களின் ஆறுதலும், அன்பும் கிடைக்கும். தந்தைக்கு நன்மைகள் ஏற்படும்.

துலாம்
libra-thulam

( சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

சித்திரை-3,4 பாதங்கள் –      இந்த வாரம் மணவாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். புதிய தொடர்புகள் மூலம் நன்மைகள் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். கல்வியில் தேர்ச்சி ஏற்பட கடின உழைப்பு தேவை. விரிவாக்கங்கள் செய்வதால் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். மாணவர்கள் தங்கள் கிரகிப்புத் தன்மையால் தங்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். தீயவர்கள் தொடர்பால் சஞ்சலம் ஏற்பட வாய்ப்புண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளை புகுத்தி, இலாபம் எனும் வெற்றிக் கனியைப் பறிப்பார்கள். அரசு பணிபுரியும் பெண்களுக்கு அலுவலகப் பணிகளில்  தாமதங்கள் ஏற்படும். பணிச்சுமை கூடும்.

சுவாதி –       இந்த வாரம் பணவரவு மற்றும் இலாபங்கள் பெருகும்.  தொலைதூர செய்திகள் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். சுபகாரியச் செலவுகள் ஏற்படும்.  பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத்  தானதர்மங்கள் செய்வார்கள். உங்கள் குழந்தைகளைக் கருணை உள்ளத்தோடு அணுகுங்கள். அவர்களுக்குத் தேவையானவற்றை மறுக்காமல் வாங்கிக் கொடுங்கள். அடிக்கடி வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரும். புதிய தோழமைகள் கிடைக்கும். சிலருக்கு  பிரிவும், பகையும் ஏற்படலாம். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டு. உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். வியாபாரத்தில் மேற்கொள்ள நினைத்த முக்கியத் திட்டங்கள் நிறைவேறக் காலதாமதம் ஆகலாம்.

விசாகம்- 1,2,3 பாதங்கள் –       இந்த வாரம் பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேற்றுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும். பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும்.  புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும்.  இனிப்பான நல்ல செய்திகள் வரும். எதிர்பாராத பணவரவு அதிகரிக்கும். பக்தி சொற்பொழிவுகள், பாடல்கள் கேட்பதில் ஆர்வம் எழும். புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவை ஏற்படும். தொழிலில் விரிவாக்கங்கள் செய்வதால் எதிர்பாராத அளவுக்கு அசாத்திய வளர்ச்சி ஏற்படும். உங்கள் சாமர்த்தியத்தால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இலாபத்தை அதிகரித்துக் கொள்வீர்கள்.

மீனம்
pisces-meenam

( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

பூரட்டாதி – 4 ஆம் பாதம் –      இந்த வாரம் மனைவிமார்கள் தங்கள் கணவரிடம் இருந்து உண்மைக் காதலையும், உன்னத அன்பையும் பெறுவர்.  சிலருக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். அரசுப் பணியாளர்களுக்கு அனுகூலமான வாரம். அவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருப்பதால், புதிய பதவிகள் தேடிவரும். பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு இடமாற்றம் பெற முயற்சிப்பர். பங்குச் சந்தையில் ஆலோசித்து முதலீடு செய்வது இழப்பைக் குறைக்கும். தொழிலில் உங்கள் கூட்டாளிகளின் கடின உழைப்பு மெச்சத் தக்கதாகவும், திருப்தி கரமாகவும் இருக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு வங்கிக் கடன்கள் சிரமமின்றி கிடைக்கும்.

உத்திரட்டாதி-      இந்த வாரம் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு அதிகரித்து, உங்கள் மனம் உயர்ந்த எண்ணங்களை கொண்டதாக அமையும். பணவரவு அதிகரிப்பது போல் இருந்தாலும், அதற்கேற்ற செலவுகளும் வாசல் வந்து நிற்கும்.. மனக்கவலைகள் மனைவியின் அரவணைப்பால் குறையும். . பெண்களால் முழுமையாக சந்தோஷம் இருக்கும். அன்னையின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளவும். உங்கள் திறமை மிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். தங்கள் வாழ்க்கையில் வளர்ச்சி மற்றும் நல்ல முன்னேற்றத்துக்கான காலம் இது.  சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படலாம்.  உறவுகளிடம் கருத்து முரண்பாடுகளை தவிர்த்தால் நிம்மதி பிறக்கும் வாகனங்களில் எச்சரிக்கையுடன் செல்லவும்.

ரேவதி-       இந்த வாரம் தனச்சேர்க்கை உண்டு. பெண்களால் மன மகிழ்ச்சி ஏற்படும். குடும்ப உறவுகளின் பரிபூர்ண ஒத்துழைப்புக் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல ஆதாயம் பெற, புதிய திட்டங்களில் உங்கள் பணத்தை முதலீடு செய்வார்கள்.  வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். வங்கிக் கணக்கில் ரொக்க இருப்பு கூடும். இதுவரை கடினமாக இருந்த காரியங்கள் எளிதில் கைகூடும். பயிர் விளைச்சல்கள் அதிகரிக்கும் சூழ்நிலைகள் உருவாகும். பழைய நண்பர் ஒருவரின் வரவு அந்த நாள் ஞாபகங்கள் நினைவுறுத்தி மகிழ்விக்கும். மனம் எப்போதும் மகிழ்ச்சியாக நிரம்பி வழியும். பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் குறி காட்டப்படுகிறது. வீட்டில் நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு
sagittarius-thanusu

( மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)

மூலம் –       இந்த வாரம் மனதில் தெய்வ பக்தி கூடும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும். நல் ஆரோக்கியமும், புது தெம்பும், புத்தொளியும் ஏற்படும்.  பணக்கார மனைவியும் அமைவாள். அழகான, எழில் நிறைந்த வீடு கிடைக்கும். புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும். கௌரவம், பட்டம், பதவி ஆகியவை தேடிவரும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்களால் வருமானம் அதிகரிப்பதால் உள்ளம் மகிழும். விரிவாக்கங்கள் செய்வதால் தொழிலில் அசாத்திய வளர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகளின் அனுகூல தால் உயர் பதவிக்கான சிபாரிசுகள் மேற்கொள்ளப்படும். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். தாயின்  ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. 

பூராடம் –      இந்த வாரம் எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை விதவிதமான மாடலில் வாங்குவீர்கள். ஆரவாரம் மிக்க சூழலில், கேளிக்கை விருந்து கள் மற்றும் பெண்களின் அருகாமை ஆனந்தமளிக்கும். நல்ல பண்பாளர்களின் தொடர்புகள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை அடைவீர்கள். மனதில் ஏற்படும் தெய்வ சிந்தனையால் மனநிம்மதி கூடும். சோதனைகள் அனைத்தையும் சாதனைகள் ஆக்குவார்கள். பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள்.  பங்களா போன்ற பெரிய வீடு கிடைக்கும். சிலருக்கு குடும்ப வாழ்க்கையில் குழப்பம் வரலாம். கடன் கொடுத்தவர்கள் கண்டிப்புடன் நடந்து கொள்வர்.

உத்திராடம் –1 ஆம் பாதம் –      இந்த வாரம் பெண்களின் வாழ்க்கையில் சுயமான முன்னேற்றம் நிலவும். பக்தி மார்க்கத்தில்  தீவிர ஈடுபாடு உண்டாகும். சுபகாரிய நிகழ்ச்சிகள் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதிய வசதி வாய்ப்புகள் உருவாகும். சிலருக்கு வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் அதிக இலாபம் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளிடம் எச்சரிக்கை தேவை. இந்த வாரம் காரியத் தடைகள், வழக்கு வியாஜ்ஜியங்கள் ஏற்படலாம். அவற்றை சில காலம் ஒத்தி போடுவது நல்லது  மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படும். வீண் ஆசைகளை விலக்கி வைப்பது நல்லது. விவசாயிகளுக்கு வளம் கொளிக்கும் வயல்களில் வசதிகள் பெருகும்.

விருச்சிகம்
scorpio-viruchagam

( விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

விசாகம்- 4 ஆம் பாதம் –      இந்த வாரம் தன வருவாய் திருப்திகரமாக இருக்கும். செல்வத்திற்கு அதிபதியான அலைமகளே உங்களைப் பார்த்துச் சிரித்தால் நீங்கள் மகிழ மாட்டீர்களா ? விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரித்து, இலாபமும் அதிகரிக்கும். அரசு சிபாரிசால் பல நாட்கள் தள்ளிப் போன, அதிகாரம் மிக்க பதவிக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் சிறந்த பணிக்காக மேலதிகாரிகளால் மெச்சப் படுவீர்கள். சிலருக்கு தலைவலி/கண்ணில் பிரச்சனைகள் வந்து சீராகிவிடும். கவலை வேண்டாம். பெண்கள் உங்கள் சேமிப்பை வைத்து புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பங்குச் சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபடாதிருப்பது இழப்பை தவிர்க்கும்.

.அனுஷம் –       இந்த வாரம் பெண்களுக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு, அதன் காரணமாக குடும்ப முன்னேற்றமும் ஏற்படும். மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும். சோம்பேறித்தனம் அதிகரிக்கும். உல்லாசமாய்ப் பொழுது போக்கும் விதமாக நமக்கு  எல்லா நாட்களும் ஞாயிறாக இருப்பதில்லை. அதேபோல் இன்பமும் துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. இந்த வாரம் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்படும். கடன் வாங்கும் நிலை ஏற்படலாம்.  நேர்மையும் கடின உழைப்பும் மட்டும் நல்ல ஊதியம் அளிக்கும்.  வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள்.

கேட்டை –     இந்த வாரம் திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நடக்கும். பெண்களால் இலாபம், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்., தனசேர்க்கை உண்டு இன்பத்துக்கு அளவே இருக்காது.. சிலர் பலவகையிலும் பிறரால் குற்றம் சாட்டப்பட்டு அவதிப்பட நேரலாம். பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். உங்கள் எண்ணமெல்லாம் பணத்தை பற்றியதாக இருக்கும். அரசு தொடர்பான விவகாரங்களில் தொல்லை ஏற்படும். தீயோர் தொடர்பு சஞ்சலம் தரும்.. புதிய திட்டங்களால் தொழிலில்  இலாபம் அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும் போது வேகத்தை குறைத்து, எச்சரிக்கையுடன் இருந்தால் விபத்தினைத் தவிர்க்கலாம்.

கும்பம்
aquarius-kumbam

( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

அவிட்டம் – 3,4 பாதங்கள்—       இந்த வாரம் எதிர்பாராத விதமாக பல திசைகளில் இருந்தும் பணம் வரலாம். உங்கள் வாக்கு வன்மை மற்றும் சிறந்த பொதுசனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். தானிய உற்பத்தி பெருகி விவசாயிகளுக்குத் தனவரவு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வீணான வாக்குவாதத்தில் ஈடுபடாதிருப்பது நல்லது. அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகி இருப்பது நல்லது. உங்கள் நற்குணங்கள் அனைவரின் பாராட்டையும் பெறும். அரசுப் பணியாளர்களுக்கு தாமதமான பதவி உயர்வுகள் துறை அதிகாரிகள் ஆதரவால் விரைவில் கிடைக்கும். நோட்டுப் புத்தக, ஜெனரல் ஸ்டோர் வியாபாரிகளுக்கு பொன்னான காலம் ஆகும்.

சதயம்-       இந்த வாரம் உங்கள் திறமை மிக்க செயல்களால் வெற்றிகளும், பாராட்டுதல்களும் குவியும். உங்கள் வாழ்க்கையில் மனைவி மூலமாக முன்னேற்றத்துக்கான நல்ல ஆலோசனைகள் கிடைக்கும். வெளியூர்ப் பயணங்கள், வெற்றிகரமாகவும், இலாபகரமாகவும் அமையும்.  இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பெரியவர்கள் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்கள் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். உங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்படும்.

பூரட்டாதி-1,2,3 பாதங்கள் –       இந்த வார இல்லத்தில் மகிழ்ச்சி பொங்க, மங்கல காரியங்கள் ஈடேறும். குடும்ப விழாக்கள், சந்தோஷத் தருணங்களாக அமையும். மனைவியுடன் உறவு சீராக, மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். முன்னர் சேமித்த சேமிப்பு களின் பலனைத் தற்போது அறுவடை செய்வீர்கள். அரசு வகை  ஆதாயம் ஏற்படும். வங்கிகள் மூலம் கிடைக்கும்  உதவிகளால் புதிதாக தொழில் தொடங்கி ஆதாயம் காணும் நிலை ஏற்படலாம். பெண்கள் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பார்கள். அரசு வேலைக்கு மனு செய்தவர்கள் அனுகூலமான செய்தி எதிர்பார்க்கலாம். வியாபாரிகளுக்கு வியாபாரம் ஏற்ற இறக்கமின்றி ஒரே சீராக இருக்கும்.

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்