முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

daily horoscopes

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2024
மேஷம்
aries-mesham
எதிலும் ஆராய்ந்து செயல்களில் இறங்க வேண்டிய நாள். சிரத்தையற்ற செயலால் திறமை இருந்தும் நல்ல பெயர் கிடைக்காது. தொழில் ஆர்வம் கூடுவதால், ஆதாயம் பெருகும். வியாபாரிகளுக்கு ஓரளவு இலாபம் கிடைக்கும்.
ரிஷபம்
taurus-rishibum
அன்னையின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. தடைபட்ட காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள். முயற்சி திருவினையாக்கும் என முயற்சியைக் கைவிடாது, முன்னேற முயலுங்கள் வெற்றி உங்கள் பக்கம்.
மிதுனம்
gemini-mithunum
தன்னம்பிக்கை, தைரியம் எல்லாம் ஓங்கும் நாள். அனைத்து செயல்பாடுகளும் அனுகூலமாய் அமையும். திருப்திகரமான தீர்த்த யாத்திரைகள் மகிழ்வு தரும். வேண்டுதல்கள் நிறைவேறும்.
கன்னி
virgo-kanni
கல்வியில் வெற்றி பெற கடின உழைப்பு தேவை. கௌரவக் குறைவு ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்வது சிறப்பு. மனைவி, மக்களின் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை தேவை.
மகரம்
capricorn-magaram
எல்லோருக்கும் நல்லதே நினையுங்கள். வழக்குகளில் வாய்தா வாங்கிக் கொள்வது நல்லது. மனைவியின் மனம் அறிந்து செயல்பட்டால் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கலாம்.
கடகம்
cancer-kadagam
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது. எடுத்த காரியங்களில் ஆதாயம் பெற எச்சரிக்கையுடன் நடத்தல் அவசியம். தீய வழிகளில் தேவையற்ற செலவுகளை செய்ய வேண்டியது வரும். சிலருக்கு இடமாற்றம், பணமுடையும் ஏற்படலாம்.
சிம்மம்
leo-simmam
குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும். புத்தாடை அணிகலன்கள் ஆகியவற்றை அணிவார், சாத்திரங்களில் ஆராய்ச்சியும், தேர்ச்சியும் ஏற்படும். பெரியோர் பால் நேசம் ஏற்படும்.
துலாம்
libra-thulam
அன்பு சகோதரர்கள் மூலம் அதிக உதவி உண்டு. எடுத்த காரியங்கள் யாவற்றிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். மனைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். வியாபாரிகளுக்கு தன்னம்பிக்கை கூடும்.
மீனம்
pisces-meenam
எல்லா வளமும் பெறும் இனிய நாள். உல்லாசப் பயணங்களால் உள்ளம் மகிழும். புதுப்பெண்கள் சிநேகமும், தனக்கென ஒரு தனி வீடு அமையும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிறைவேறும். எதிரிகள் பணிவர். ஏற்றம் ஏற்படும்.
தனுசு
sagittarius-thanusu
மனதிற்கினிய நல்ல மனைவி அமைவாள். புனிதப் பயணங்களால் புண்ணியம் சேரும். தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். அன்னதானம் போன்ற நற் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
விருச்சிகம்
scorpio-viruchagam
பெண்களால் தன லாபம் அடைவீர்கள். பிறருக்கு விருந்து உபசாரம் செய்து மகிழ்வார்கள். பிரிந்தவர் கூடிப் பேரின்பம் அடைவர். மாணவர்களுக்கு கல்வியில், வியாபாரிகளுக்கு தொழிலில் வெற்றி கிட்டும்.
கும்பம்
aquarius-kumbam
பல முகாந்திரங்களிலும் பணவரவு கூடும். எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும். காளைகள் காதல் வயப்பட்டு களிப்பு எய்துவர். புதிய தொழில் முயற்சிகள் எளிதாக ஈடேறும்.
நாள்: Saturday, April 20, 2024
  • மதுரை மீனாட்சி திக் விஜயம்.
  • தூத்துக்குடி நடராஜர் பச்சை சாற்றி புறப்பாடு,பகல் நடன சேவை இரவு சுவாமி குதிரை வாகனம்,அம்பாள் கிளி வாகனம்.
  • மன்னார்குடி ராஜகோபாலசுவாமி விடாயாற்று.
  • சங்கரன் கோவில் பிரம்மாசருத்திராச விஸ்ணு வாம்ச தரிசனம்.
  • திருப்பணந்தல் சிவபெருமான் திருக்கல்யாணம்.
  • திருத்தணி சிவபெருமான் ரதம்.
  • திருவள்ளூர் வீரராகவர் வேணுகோபாலன் திருக்கோலம்.
  • திருவையாறு சிவபெருமான் மின்விளக்கு அலங்கார கோ ரதத்தில் பவனி.
  • திருஉத்திரகோசமங்கை மங்களேசுவரி தபசு,சுவாமி விருசப சேவை.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்