முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

daily horoscopes

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: வியாழக்கிழமை, 25 ஏப்ரல் 2024
மேஷம்
aries-mesham
பல வழிகளிலும் பணவரவு ஏற்படும். எல்லா வகையிலும் ஏற்றம் கிடைக்கும். நண்பர்கள் சந்திப்பு, திருமணம் மற்றும் நல முன்னேற்றம் ஆகியவை ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
நல் ஆரோக்கியம் ஏற்படும். சந்ததி விருத்தி உண்டாகும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வாக்கு வன்மையால் வருமானம் பெருகும்.
மிதுனம்
gemini-mithunum
மனைவி, மக்களின் உடல் நிலையில் அக்கறை தேவை. மேலதிகாரிகள் மற்றும் பெரியவர்களிடம் வாக்குவாதம் செய்யாதிருப்பது நல்லது. செலவுகள் கட்டுக்கடங்காமல் இருக்கும்.
கன்னி
virgo-kanni
தனலாபம், குடும்ப சுகம் ஆகியவை குறையும். புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. வார்த்தைகளை அளந்து பேசுவது வம்புகளை தவிர்க்க உதவும்.
மகரம்
capricorn-magaram
புத்தாடை அணிகலன்கள் புதிதாகச் சேரும். பெயரும், புகழும் உண்டாகும். பதவி உயர்வு, மனத் திருப்தி, தொழில், வியாபாரத்தில் பணவரவு என யோகங்கள் தரும் நாள்.
கடகம்
cancer-kadagam
இன்றைய நாள் கழிவது யுகங்கழிவது போன்றிருக்கும். தாயின் உடல் நிலையில் அதிக அக்கறை தேவை. நீர் நிலைகளில் எச்சரிக்கையோடு இருத்தல் அவசியம்.
சிம்மம்
leo-simmam
அரசு அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். கல்வியில் தேர்ச்சி உண்டு. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். அதிகாரம் மிக்க பதவி உயர்வு ஏற்படலாம்.
துலாம்
libra-thulam
இனிய பயணங்கள் ஏற்படும். புத்திர பாக்கியம் ஏற்படும். தெய்வீக காரிய ஈடுபாடு, தான தரும சிந்தனை ஏற்படும். தொழிலில் புதிய நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
மீனம்
pisces-meenam
வழக்கு விவகாரங்களை தள்ளிப் போடுவது நல்லது. அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்து கொள்வது நல்லது. நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கும்.
தனுசு
sagittarius-thanusu
பணவரவு திருப்திகரமாக இருக்கும். பெண்களால் இலாபம் ஏற்படும். கல்வியில் வெற்றி உண்டு. பிறருக்கு உதவும் நல்லெண்ணம் ஏற்படும். மதிப்பு, மரியாதை, அந்தஸ்து உயரும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
இட மாற்றங்களை எதிர்பார்க்கலாம். முறையற்ற வழிகளில் பணம் வரலாம். உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம். கோபத்தைக் குறைத்தால் நன்மை ஏற்படும்.
கும்பம்
aquarius-kumbam
அரசியல்வாதிகள் ஆதரவால் நன்மைகள் நடக்கும். தன்னம்பிக்கை கூடும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். தெய்வ தரிசனப் பயணங்கள் திருப்தி தரும்.
நாள்: Thursday, April 25, 2024
  • திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
  • திருவையாறு சப்தஸ்தானம்.
  • மதுரை கள்ளழகர் காலை மோகனா வதாரம், இரவு  மைசூர் மண்டபத்தில் புஷ்ப பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலம்.
  • சென்னை கேசவப்பெருமாள் காலை கருட வாகனம்,இரவு சந்திரபிரபையில் புறப்பாடு.
  • மன்னார்குடி ராஜகோபாலசுவாமி நவநீத சேவை,தெப்போற்சவம்.
  • வீரபாண்டி கெமரியம்மன் திருவீதி.
  • திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள்காலை கருட வாகனம்,இரவு அம்ச வாகனம்.
  • ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
  • சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்