முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

லிங்கா திரை விமர்சனம்

Image Unavailable
வகை:
Action Comedy
இயக்க நேரம்:
170 minutes
வெளியுட்டு நாள்:
12 Dec 2014

அந்த கிராமத்திற்கு பெயர் சோலையூர். பிரிட்டிஷ் காலத்து இந்திய கிராமமான சோலையூருக்கு பெயர் தான் அப்படி. ஆனால் பாதி நாட்கள் வறட்சி மீதி நாட்கள் வெள்ளமும் தான் என்று ஒட்டுமொத்த தேசத்தையும் அந்த சோலையூர் எடுத்துக்காட்டுகிறது. அந்த கிராமத்தில் பிறந்த ராஜவம்ச கலெக்டர் லிங்கேஸ்வரனான ரஜினி, மக்கள் தண்ணீரில்லாமல் தவித்து தற்கொலைக்கு ஆளாகும் கொடுமைக்கு விடை கொடுக்க புதிய முடிவு எடுக்கிறார். முல்லை பெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கை நினைவுப்படுத்துவது போல கிராமத்து மக்களை காப்பாற்ற அணை கட்ட திட்டமிடுகிறார். இதற்கு பிரிட்டிஷ் அரசு முட்டுக்கட்டை போடுகிறது. இதனால் .லிங்கேஸ்வரன் கலெக்டர் பதவி தூக்கியெறிந்து விட்டு, கிராமத்து மக்களுடன் அணை கட்டத்தொடங்குகிறார். அதில் வெற்றியும் பெறுகிறார். ஆனால் திறப்பு விழாவில் கிராம மக்கள் பிரிட்டிஷ் அதிகாரிகள் சூழ்ச்சிக்கு பலியாகின்றனர். விளைவு ., லிங்கேஸ்வரனை அவமானப் படுத்தி விரட்டியடிப்பதுடன், அணை அருகே அவர் கட்டிய கோவிலையும் மூடி விடுகிறார்கள்.

ஒரு கட்டத்தில் கிராமம் உண்மையை உணர்கிறது. தன் சொத்துக்களையெல்லாம் இழந்து அணை கட்டிய தியாக தீபம் லிங்கேஸ்வரன் என்பது மக்களுக்கு தெரியவருகிறது, சோலையூரே ஒன்று சேர்ந்து லிங்கேஸ்வரனிடம் மன்னிப்பு கேட்டு, கிராமத்திற்கு அழைக்கிறது. ஆனால் . ரஜினி மறுக்கிறார்.. இதனால் அந்த கிராம கோவில் திறக்கப்பட்டால் லிங்கேஸ்வரனாலாயோ அல்லது அவருடைய வாரிசு கையினாலோயோ மட்டுமே திறக்கப்படும், இல்லையெனில் அந்த கோவில் மூடியே இருக்கட்டும் என்று நாட்டாமை விஜயகுமார் சத்தியம் செய்துவிட்டு இறந்து போகிறார். இந்த பிளாஸ்பேக்கோடு ,இப்போது தான் களத்திற்கு வருகிறார். லிங்கேஸ்வரனின் பேரனான இன்னொரு ரஜினி. அவரை அழைத்து வரும் முயற்சியில் ஈடுபடுகிறார் தொலைக்காட்சி நிருபர் அனுஷ்கா. ஆனால் கலெக்டர் லிங்கேஸ்வரன் பேரன் ரஜினியோ . திருடன் , போலீஸின் பிடியில் இருந்து தப்பிக்க சோலையூருக்கு வருகிறார். தாத்தா கட்டிய சிவன் கோவிலில் விலை உயர்ந்த மரகத லிங்கம் களவாட பிளான் போடுகிறார்.. அப்போது தான் கோவிலையும் அணையையும் கட்ட தனது தாத்தா லிங்கேஸ்வரன் சொத்துக்களை இழந்த கதை தெரிகிறது., அந்த கோவிலை திறந்தால் தான் அணையையும் ஊர் மக்களையும் காப்பாற்ற முடியும் என்ற விஷயத்தையும் அறிந்த ரஜினி, மரகத லிங்கத்தை திருடிச்சென்றாரா அல்லது அந்த கோவில் ரகசியத்தை அறிந்து அந்த அணையையும், கிராமத்தையும் காப்பாற்றினாரா என்பது தான் க்ளைமாக்ஸ்.

 

திருடன் ரஜினிகாந்துக்கு ஜோடியாக வரும் தொலைக்காட்சி நிருபர் அனுஷ்கா, நடிக்கவும் செய்தியிருக்கிறார். கவர்ச்சியும் காட்டியிருக்கிறார். கலெக்டர் ரஜினியின் மற்றொரு ஜோடிப்புறா சோனாக்சி சின்காவும் அசத்துகிறார்.. பின்னணி இசையில் ஏ.ஆர். ரகுமான் சில இடங்களில் பின்னியிருக்கிறார். ரத்னவேலுவின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகளிலும் கலை இயக்குனர் சாபு சிரில் காட்சியமைப்பிலும் பிரம்மாண்டம் தெரிகிறது. சண்டைக்காட்சிகள் கிராபிக்ஸ் ஆதிக்கம் அதிகம்.. ரஜினி காந்தின் மின்னல் வேக பாடல் காட்சிகளை லிங்காவில் காணமுடியாமல் ரசிகர்கள் திணறுகிறார்கள். அறிமுகக்காட்சியில் ரஜினி அதிர வைக்கிறார்., வைர நகை கண்காட்சியில், விலை உயர்ந்த நெக்லஸ் திருடும் காட்சியில் திருடன் ரஜினி குருப் காமெடி செய்து நம் உள்ளங்களை திருடிக்கொள்கிறது. நான் ஒரு காரியத்தை தொடங்கினா முடிக்காம விட மாட்டேன்.இல்லன்னா தொடங்கவே மாட்டேன்.என்று ரஜினி படங்களில் வரும் பஞ்ச் டயலாக் லிங்காவிலும் கைத்தட்ட வைக்கிறது. டூயட் பாடவும் பைட் பண்ணவும் 60 வயதிலும் ரஜினி முடிகிறது என்றால் ஆச்சர்யம் தான்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago