எய்ட்ஸை நோயை மறைத்து திருமணம் செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      தமிழகம்

 

மதுரை,பிப்.19

எய்ட்ஸை நோயை மறைத்து திருமணம் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு.

விருதுநகர் மாவட்டம் ஆலம்பட்டியை சேர்ந்த ராஜாக்கனி மகள் நிர்மலா (31) இவருக்கும் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கருங்காலக்குடியை சேர்ந்த சிவக்குமார் (42) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது 30 பவுன் நகை, 30 ஆயிரம் பணம் கொடுக்கப்பட்டது. திருமணத்திற்கு பின்னர் சிவக்குமாருக்கு எய்ட்ஸ் நோய் இருப்பது நிர்மலாவுக்கு தெரியவந்தது. ஏற்கனவே திருமணம்ஆனவர் என்பதும் தெரியவந்தது. அவருடன் சேர்ந்து வாழ நிர்மலாவுக்கு விருப்பம் இல்லை.

   ஆனால் சிவக்குமார் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து வாழும் படி நிர்மலாவை சித்ரவதை செய்து வந்தனர். இது குறித்து விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நிர்மலா  புகார் செய்தார். இந்த புகார் மனு மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் இது குறித்து 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்: