புன்னகைக் பூ கீதா தயாரிக்கும் `நர்த்தகி'

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      சினிமா

 

சென்னை, பிப்,20

அறிந்ததும் அறியாமாலும், பட்டியல், குண்டக்க மண்டக்க போன்ற பாடங்களை.....

தொடர்ந்து புன்னகைப் பூ கீதா எஸ்.ஜி. பிலிம்ஸ் பி லிட் சார்பில் தயாரிக்கும் வித்தியாசமான படம் `நர்த்தகி'.

இந்த படத்தின் கல்கி கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் கிரிஷ் கர்நாட் மற்றும் வி.கே.ஆர்.ரகுநாத், வெங்கடேசன், அழகு, அஸ்வின், சூசன், லீமா, மாஸ்டர் அபிஷாக், ஸ்வாதி, பேபி ரூபினா, பேபி ரேஷ்மா, விவின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - எம்.கேசவன், இசை - ஜி.வி.பிரகாஷ்குமார், பாடல்கள் - நா.முத்துக்குமார், கலை - ஜனா, நடனம் - ரகுராம், சிவசங்கர், எஸ்.எல்.பாலாஜி, ஸ்டண்ட் - ஜாக்குவார் தங்கம், எடிட்டிங் - தங்கவேல் குமார், தயாரிப்பு நிர்வாகம் - சக்தி ஜெகதீஷ், அலுவலக நிர்வாகம் - சிவா, தயாரிப்பு - புன்னகைப் பூ கீதா, கதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் - விஜய் பத்மா.

இந்த படத்தில் நடிக்கும் கல்கி உலகம் முழுக்க அறிந்த திருநங்கை ஆவார். இவர் அமெரிக்காவின் சிறப்பு அழைப்பின் பேரில் இந்தியாவிலிருந்து அழைத்து கெளரவிக்கப்பட்ட ஒருவர். இவர் இந்த படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு இளம் வயது ஆண் மகன் மன உணர்வின் பாதிப்பில் கொஞ்சம், கொஞ்சமாக தான் பெண்ணாக மாறிக் கொண்டிருப்பது அறிந்து படும் வேதனை என்ன என்பதை உணர்வு பூர்வமாக கையாளப்பட்டிருக்கும் கதை தான் நர்த்தகி.

அவனுக்காகவே வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பெண் தான், அவனால் நிராகரிக்கப்படுகிறோம் என்பதை அறிந்து படும் வேதனையின் மையக் கரு நர்த்தகி.

முடிவில் யார் ஜெயிருக்கிறார்கள் என்பதை சுவைப்பட உருவாக்கியுள்ளதாக டைரக்டர் விஜய் பத்மா கூறினார். விரைவில் உலக முழுக்க வெளிவர உள்ள இப்படம் வித்தியாசமான கதை படமாக மக்கள் மனதில் பதியும் என்பது நிச்சயம்.

இதை ஷேர் செய்திடுங்கள்: