முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - வங்காள தேச அணிகள் துவக்க ஆட்டத்தில் இன்று மோதல்

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      தமிழகம்

 

மிர்பூர், பிப். 19 - 

உலகக் கோப்பை கிரிக்கெட்  - இந்தியா - வங்காள தேச அணிகள்  துவக்க ஆட்டத்தில் இன்று மோதல்.

உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் மிர்பூரில் இன்று நட க்கும் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் பலப்ப ரிட்சை நடத்த இருக்கின்றன. இதில் இந்திய அணி வங்கதேசத் திற்கு பதிலடி கொடுக்க ஆயத்தமாக  உள்ளது. 

2011 -ம் ஆண்டிற்கான 10 -வது உலகக் கோப்பை கிரிக்கெட் மெகா திருவிழாவின் துவக்க விழா  வங்கதேசத்தின் தலைநகரான டாக்கா வில் நேற்று முன் தினம் கோலாகலமாக துவங்கியது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் லீக் ஆட்டம் மிர்பூரி ல் உள்ள ஷெரே பங்க்ளா மைதானத்தில் இன்று பகலிரவு ஆட்டமாக நடக்க இருக்கிறது. இந்தப் போட்டி மதியம் 2.00 மணிக்கு துவங்குகிறது. 

இந்த முதல் ஆட்டத்தில் கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணியும், கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்காள தேச அணியும் மோத ஆயத்தமாக உள்ளன. 

மேற்கு இந்தியத் தீவில் கடந்த முறை உலகக் கோப்பை போட்டி நடந்தது. இதில் இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் வங்காள தே சத்திடம் தோற்றது. இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை அளி த்தது. இறுதியில் இந்திய அணி முதல் லீக்கிலேயே போட்டியில் இருந்து வெளியேறியது. 

எனவே இந்த உலகக் கோப்பை போட்டியில் வங்கதேச அணிக்கு பா டம் புகட்ட தயாராக இருக்கிறது. ஆனால் இந்தப் போட்டி உள் நாட்டில் நடைபெறுவதால் வங்கதேச அணிக்கு உள்ளூர் ரசிகர்களின் ஆத ரவு இருக்கும். எனவே ஆட்டத்தில் கடும் சவால் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. 

கேப்டன் தோனி தலைமையிலான இந்திய அணியின் பேட்டிங் வலு வாக உள்ளது. இந்திய அணியில் 7 பேட்ஸ்மேன்கள் உள்ளனர். நட்சத் திர வீரர் டெண்டுல்கரும், சேவாக்கும் இணைந்து இந்தியாவின் இன் னிங்சைத் துவக்க உள்ளனர். 

அடுத்ததாக, காம்பீர், விராட் கோக்லி, யுவராஜ் சிங், தோனி மற்றும் யூசுப் பதான் ஆகியோர் களம் இறங்க காத்திருக்கின்றனர். உலகக் கோப்பைக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளை தோற்கடித்தது. 

கடந்த 6 மாத காலத்திற்கு மேலாக இந்திய வீரர்கள் ஒரு நாள் தொடரி ல் நன்கு ஆடி வெற்றி பெற்று வருகின்றனர். இதனால் இந்திய அணிவீரர்களுக்கு நல்ல தன்னம்பிக்கையுடன் களம் இறங்குகின்றனர். 

நியூசிலாந்திற்கு எதிரான 2 - வது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 360 ரன்னைக் குவித்தது. கேப்டன் தோனி அதிரடியாக ஆடி சதம் அடித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். 

மேலும், விராட் கோக்லி இந்த ஆட்டத்தில் 89 ரன் எடுத்தது குறிப்பிட த்தக்கது. தவிர, சுரேஷ் ரெய்னாவும் இதில் அரை சதம் அடித்தார். இந் திய அணியன் மிடில் ஆர்டரும் வலுவாக உள்ளது. 

சுரேஷ் ரெய்னாவை விட கோக்லி சமீப காலத்தில் தொடர்ந்து சிறப் பாக ஆடி வருவதால் 11 பேர் கொண்ட அணியில் அவருக்கு இடம் அளிக்கப்பட்டதாக கேப்டன் தோனி தெரிவித்தார். 

பஞ்சாப் வீரரான யுவராஜ் சிங் சிறந்த அதிரடி வீரராவார். இருந்த போதிலும் சமீப காலத்தில் அவரது பார்ம் திருப்தி அளிக்கவில்லை. ஆனால் பகுதி நேர பந்து வீச்சாளரான அவர் சுழற் பந்து வீச்சில் நன்கு முன்னேறி இருக்கிறார். இது அணிக்கு கூடுதல் பலமாகும். 

கடந்த 2 பயிற்சி ஆட்டத்தில் ஹர்பஜன் சிங் மற்றும் பையூஸ் சாவ்லா இருவரும் சிறப்பாக பந்து வீசினர். அணியின் வெற்றிக்கு இது முக்கிய காரணமாகும். தவிர, அஸ்வின் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் அவ ர்களுக்கு பக்கபலமாக பந்து வீசினர். 

ஆனால் வேகப் பந்து வீச்சாளர்கள் ஆஷிஸ் நெக்ரா, ஸ்ரீசாந்த் ஆகி யோர் மேற்படி இரண்டு ஆட்டத்தில் சோபிக்க வில்லை. முனாப் படேலுக்கு விக்கெட்டே கிடைக்கவில்லை. ஜாஹிர்கான் இரண்டு ஆட்டத்தில் காயம் காரணமாக பங்கு கொள்ளவில்லை. 

வங்கதேச அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரை துவக்க வீரர் தமீ ம் இக்பால் மற்றும் மொகமது அஸ்ரப்புல், கீப்பர் முஸ்பிகர் ரகீம்  ஆகியோர் தற்போது நல்ல பார்மில் உள்ளனர். கேப்டன் மற்றும் ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசனும் சமீப காலத்தில் நன்கு ஆடி வருகிறார். 

பந்து வீச்சைப் பொறுத்தவரை மொர்டஜா,  மற்றும் 21 வயதான ரூபெல் ஹொசைன் ஆகியோர் உள்ளனர். மொர்டஜா சமீபத்தில் சோபி க்கவில்லை. ஆனால் ரூபெல் பயிற்சி ஆட்டத்தில் 5 விக்கெட் எடுத்தா ர். தவிர, அப்துர் ரசாக் மற்றும் கேப்டன் ஷாகிப் ஆகியோர் சுழற் பந் து வீச்சை கவனிப்பார்கள். 

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இந்தப் போ  ட்டி டாக்கா அருகே உள்ள ஷெரே பங்க்ளா மைதானத்தில் மதியம் 2.00 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் கிரிக்கெட், இ.எஸ்.பி.என். சேனல்கள் நேரடியாக ஒளிபர ப்பு செய்கின்றன. 

இந்திய அணி : - தோனி, (கேப்டன்) டெண்டுல்கர், சேவாக், காம்பீர், விராட் கோக்லி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், யூசுப் பதான், ஜா ஹிர்கான், முனாப் படேல், ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், பையூஸ் சாவ் லா, அஸ்வின் மற்றும் ஆஷிஸ் நெக்ரா ஆகியோர். 

வங்கதேசம் : - ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), தமீம் இக்பால், இம்ரு ல் கெய்ஸ், ஜூனைட் சித்திக், சக்ரியார் நபீஸ், ரகிபுல் ஹசன், மொக மது அஸ்ரப்புல், முஸ்பிகர் ரகீம், நயீம் இஸ்லாம், மக்மதுல்லா, அப்து ர் ரசாக், ரூபெல் ஹொசைன், ஷபியுல் இஸ்லாம், நஜ்மல் ஹொசைன் மற்றும் சுரவாடி சுவோ ஆகியோர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்