முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று டாக்காவில் துவக்கம்

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      தமிழகம்

 

டாக்கா, பிப். 19 - 

14 நாடுகள் பங்கேற்கும்  உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று டாக்காவில் துவக்கம் .

14 நாடுகள் பங்கேற்கும் 10 -வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவில் இன்று துவங்குகிறது. இதில் களம் இறங்க வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர். 

1975 -ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அறிமுகப்படுத் தப்பட்டது. இங்கிலாந்தில் நடந்த முதல் உலகக் கோப்பையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதைத் தொடர்ந்து 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகக் கோப்பை போட்டி நடைபெ ற்று வருகிறது. 

கடைசியாக 2007 -ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி மேற்கு இந்தி யத் தீவில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. இதுவரை 9 உலகக் கோப்பை போட்டி நடந்துள்ளது. 

இதில் ஆஸ்திரேலியா 4 முறையும், மேற்கு இந்தியத் தீவுகள் அணி 2 தடவையும், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் தலா 1 முறையும் உலகக் கோப்பையை வென்று உள்ளன. 

தற்போது 10 -வது உலகக் கோப்பை நடத்தப்படுகிறது. இந்தியா, இல ங்கை, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகள் இணைந்து இந்தப் போட் டி யை நடத்துகின்றன. 

உலகக் கோப்பை போட்டியின் தொடக்க விழா வங்காளதேச தலை நகரான டாக்காவில் நேற்று முன் தினம் கோலாகலமாக நடந்தது. இன்று முதல் போட்டிகள் துவங்குகின்றன. ஏப்ரல் மாதம் 2 -ம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடக்கின்றன. 

43 நாட்கள் நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் மொத்தம் 14 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, கென்யா, கனடா ஆகிய அணிகளும் பி பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், வங்காளதேசம், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. 

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில், இரண்டு பிரிவிலும், முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் கால் இறுதியில் நுழையும். 

லீக் ஆட்டம் மார்ச் 20 -ம் தேதி முடிகிறது. கால் இறுதி ஆட்டம் மார்ச் 23 -ம் தேதி தொடங்குகிறது. அரை இறுதி ஆட்டங்கள் 29 மற்றும் 30 -ம் தேதிககளிலும், இறுதிப் போட்டி ஏப்ரல் மாதம் 2 -ம் தேதியும் நடக்கிறது. 

சொந்த மண்ணில் நடைபெறுவதால் இந்தியா, 2 -வது முறையாக உல கக் கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக எழுந்துள்ளது. 

ஏற்கனவே கோப்பையை வென்ற அணி தான் கோப்பையை வெல்லு மா? சாம்பியன் பட்டம் பெறாத அணி முதல் முறையாக கோப்பை யை கைப்பற்றுமா? என்ற ஆவல் ரசிகர்களிடம் உள்ளது. ஒவ்வொரு அணியும் உலகக் கோப்பையை வெல்ல கடுமையாக போராடும். இதனால் ரசிகர்களுக்கு இந்த கிரிக்கெட் திருவிழா நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்