முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உண்மைகளை மறைக்கிறார் ராசா - சி.பி.ஐ.

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      அரசியல்

புது டெல்லி,பிப்.19

ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக உண்மைகளை மறைக்கிறார் ராசா - கோர்ட்டில் சி.பி.ஐ. தகவல்.

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான உண்மையான தகவல்களை எல்லாம் ராசா மறைக்கிறார் என்று நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.

ரூ. 1.76லட்சம் கோடி இழப்பை நாட்டுக்கு ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டது தெரிந்ததே. அவருடன் சேர்த்து 2 தொலைத் தொடர்பு அதிகாரிகளும் கைது செய்யப்பட்டார்கள். இவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிகாரி ஷாஹித் உஸ்மான் பல்வாவும் கைது செய்யப்பட்டார். ராசா கைது செய்யப்பட்ட பிறகு அவரிடம் சி.பி.ஐ. தன் காவலில் எடுத்து பல நாட்கள் விசாரணை நடத்தியது. பல்வாவிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. கிட்டத்தட்ட 14 நாட்கள் சி.பி.ஐ. காவலுக்கு பிறகு நேற்று முன்தினம் ஆண்டிமுத்து ராசா திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று உஸ்மான் பல்வாவும் அதே திஹார் சிறைக்கு அனுப்பப்பட்டார். சி.பி.ஐ. காவல் முடிந்ததும் இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை மார்ச் 3 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி உத்தரவிட்டதை அடுத்து பல்வாவும் நேற்று திஹார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இருப்பினும் விசாரணை இன்னும் முடியவில்லை என்று சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. மீண்டும் இவர்களிடம் விசாரணை நடத்தப்படலாம் என தெரிகிறது. இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான பல உண்மையான தகவல்களை ராசாவும், பல்வாவும் மறைக்கிறார்கள். இவர்களிடம் விசாரணை நடத்திய போது பல உண்மைகளை அவர்கள் மறைப்பது தெரிந்தது என்று டெல்லி சிறப்பு கோர்ட்டில் சி.பி.ஐ. நேற்று தெரிவித்தது. கேள்விகள் கேட்ட போது அவர்கள் தப்பிக்கவே பார்க்கிறார்கள். பல உண்மைகளை மறைக்கிறார்கள். பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட தகவல்களை அவர்கள் சொல்லவில்லை என்று நீதிபதி ஷைனியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்தனர். மீண்டும் இவர்களிடம் விசாரணை நடக்கும் போது அந்த உண்மைகள் வெளிக்கொணரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்