தர்மபுரியில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      அரசியல்

 

சென்னை, பிப்.19-

ஜெயலலிதா பேரவை சார்பில் தர்மபுரி மாவட்ட சாலைகளை சீரமைக்காத தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வழியாகச் செல்லும் சேலம் ​ திருப்பத்தூர் ​ வாணியம்பாடி சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்காத, பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து பொம்மிடி வழியாக தருமபுரி செல்லும் சாலையை சீரமைக்காத மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்து, தருமபுரி மாவட்ட  ஜெயலலிதா பேரவையின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (19.2.2011 ​ சனிக் கிழமை) நடைபெறுகிறது என்று ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும், வாகன போக்குவரத்தை அதிகரிப்பதிலும் இன்றியமையாததாக விளங்குவது சாலைகள் என்று சொன்னால் அது மிகையாகாது.  இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த சாலைகள் தமிழ் நாட்டில் சீரழிந்து கிடக்கின்றன. எனது ஆட்சிக் காலத்தில், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி வழியாக செல்லும் 120 கிலோ மீட்டர் nullநீளம் கொண்ட சேலம் ​ திருப்பத்தூர் ​ வாணியம்பாடி சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.   

இது மட்டுமல்லாமல், மிகவும் பழுதடைந்திருந்த 34 கிலோ மீட்டர் nullநீளச் சாலை, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 17 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்டது.  மைனாரிட்டி தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை திமுக​வின் வசமிருந்தும் மேற்படி சாலையை தேசிய நெடுஞ்சாலையாக அறிவிக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  

தற்போது, எனது ஆட்சிக் காலத்தில் மேம்படுத்தப்பட்ட 34 கிலோ மீட்டர் nullளச் சாலையைத் தவிர, சாலையின் மற்ற இடங்கள் அனைத்தும் குண்டும் குழியுமாகக் காட்சி அளிப்பதாகவும், இதன் காரணமாக, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, செல்ல வேண்டிய இடத்திற்கு உரிய நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை வாகனங்களில் பயணம் செய்யும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

இதே போன்று, பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து பொம்மிடி வழியாக தருமபுரி செல்லும் மாவட்ட சாலை nullநீண்ட நாட்களாக சீரமைக்கப்படாததன் காரணமாகவும், அண்மையில் ஏற்பட்ட கனமழை காரணமாகவும் சேதம் அடைந்துள்ளது என்றும், இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. மேற்படி சாலைகள் சீரமைக்கப்படுவது குறித்து தொடர்புடைய அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும், இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் புலம்புகின்றனர். எனவே, தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வழியாக செல்லும் சேலம் ​ திருப்பத்தூர் ​ வாணியம்பாடி சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்காத, பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து பொம்மிடி வழியாக தருமபுரி செல்லும் சாலையை சீரமைக்காத மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்தும், மேற்படி சாலைகளை உடனடியாக சீர் செய்ய வலியுறுத்தியும், சேலம் ​ திருப்பத்தூர் ​ வாணியம்பாடி சாலையை தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவையின் சார்பில், 19.2.2011  சனிக் கிழமை அன்று காலை 10 மணியளவில், பாப்பிரெட்டிப்பட்டி பஸ் நிலையத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகில் மாபெரும் கண்டனப் போராட்டம்  நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், ஜெயலலிதா பேரவைச் செயலாளர்  நயினார் நாகேந்திரன்  தலைமையிலும், தருமபுரி மாவட்ட செயலாளர்  கே.பி. அன்பழகன், எம்.எல்.ஏ., மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர் பி.பழனியப்பன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், தருமபுரி மாவட்ட நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை உட்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும்,  உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.

தோழமைக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: