கலெக்டரை கொல்லப்போவதாக மாவோயிஸ்ட்டுகள் மிரட்டல்

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      இந்தியா

 

புவனேஸ்வர், பிப்.21-தங்களது நிபந்தனைகளை ஏற்காவிட்டால் கடத்தப்பட்ட மாவட்ட கலெக்டரை கொன்றுவிடப் போவதாக மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். 

ஒரிஸா மாநிலம் மல்கான்கிரி மாவட்ட கலெக்டர் ஆர்.பி.கிருஷ்ணாவையும், அவருடன் ஒரு என்ஜினீயரையும் கடந்த புதன்கிழமையன்று மாவோயிஸ்ட் நக்ஸலைட்டு தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். மாவட்ட கலெக்டரை விடுதலை செய்ய வேண்டும் என்றால் தங்களது 7 நிபந்தனைகளை ஒரிஸா அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மாவோயிஸ்ட்டுகள் நிபந்தனை விதித்தனர். இதையடுத்து மாவட்ட கலெக்டரை பத்திரமாக விடுவிக்க மாவோயிஸ்ட் குழு தலைவர்களுடன் ஒரிஸா அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதில் எந்த பலனும் ஏற்படாததால் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் ஹரிகோபால், சோமேஸ்வரராவ் ஆகியோரை தூதர்களாக அனுப்ப ஒரிஸா அரசு முடிவு செய்துள்ளது. இந்த இரு பேராசிரியர்களும் நேற்று புவனேஸ்வரம் வந்தனர். இந்த பேச்சுவார்த்தையில் ஒரிஸா மாநில அரசு சார்பில் உள்துறை செயலாளர் பெஹ்ரா, பஞ்சாயத்து ராஜ் செயலாளர் எஸ்.என்.திரிபாதி ஆகியோரும் பங்கேற்கிறார்கள். இந்த சமரச பேச்சுவார்த்தையில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் தங்களது முக்கிய நிபந்தனைகளை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துவார்கள் என தெரிகிறது. இந்த நிலையில் தங்களது கோரிக்கைகளை ஒரிஸா அரசு ஏற்காவிட்டால் மாவட்ட கலெக்டரை கொலை செய்துவிடப் போவதாக மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக கடைசியாக கிடைத்த  தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்: