கள்ளச் சாராயத்திற்கு பீகாரில் 5 பேர் பலி

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      இந்தியா

 

சமஸ்திபூர்,பிப்.21 - பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 4 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். 

உடல் நிலை பாதிக்கப்பட்டு போராடி வரும் 12 க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காஷிபூர் கிராமத்தில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கல்ளச்சாராயம் குடித்த உடனே விஷம் தலைக்கேறி அங்கேயே 4பேர் சுருண்டு விழுந்தனர். மற்றொருவர் மருத்துவமனையில் இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: