ராசாவின் நண்பருக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      இந்தியா
CBI-India 0

 

புது டெல்லி,பிப்.21  - 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக முன்னாள் மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ. ராசாவுக்கு நெருக்கமானவரும், கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவன தலைவருமான சாதிக்பாட்சாவுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பி உள்ளது. 

அதில் வரும் 23 ம் தேதி சி.பி.ஐ. விசாரணைக்கு பாட்சா ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மூலமாக பெறப்பட்ட பணம் பாட்சாவின் கிரீன்ஹவுஸ் நிறுவனத்துக்கு திருப்பி விடப்பட்டது என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் கடந்த டிசம்பரில் பாட்சாவின் வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ .சோதனை நடத்தியது. பின்னர் அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்: