முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கசாப் மிகவும் பலவீனமாக இருக்கிறான்

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை. பிப். 21-மும்பை தாக்குதல் வழக்கில் தூக்கு  தண்டனை பெற்றுள்ள தீவிரவாதி அஜ்மல் கசாப் பலவீனமாகவும் சோர்வடைந்தும் காணப்படுவதாக  அவனது வக்கீல்பர்ஹானா ஷா கூறியுள்ளார்.

கடந்த 2008 நவம்பர் 26ம் தேதி நடந்த மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியான அஜ்மல் கசாப்புக்கு மரண தண்டனை விதித்து மும்பை தனிக்கோர்ட்டு ஏற்கனவே தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து கசாப் மும்பை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் கசாப்பை சிறையில் சந்தித்த அவனது வக்கீல் பர்ஹானா ஷா, கசாப் மிகவும் பலவீனமாகவும் சோர்வாகவும் இருப்பதாக தெரிவித்தார். 

கசாப் உடல் நிலை நன்றாக இல்லை. அவன் யாருடனும் பேசுவதில்லை. அவனது நடவடிக்கைகள் எல்லாம் மாறி விட்டன என்றும் அவர்  சொன்னார்.

மும்பை ஐகோர்ட்டில் இன்று மேல் முறையீட்டு தீர்ப்புக்காக வீடியோ கான்பரன்சிங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு கசாப் எப்படி ஆயத்தமாக இருக்கிறான் என்பதை பார்ப்பதற்காக ஆர்த்தூர் ரோட்டில் உள்ள மத்திய சிறைச்சாலைக்கு  சென்று கசாப்பை பர்ஹானா ஷா  பார்த்தார்.

கசாப் வெறுப்படைந்து இருக்கிறான். அவன் தனக்கு ஒரு செய்தித்தாள் வேண்டும் என்று கேட்டான் . ஆனால் நான் செய்தித்தாள் எதையும் கொண்டு போகவில்லை. அவனிடம்  வழக்கமாக இருக்கும் ஆணவம் இல்லை. வீடியோ கான்பரன்சிங்கிற்கு தயாராக இருக்க வேண்டும் என்ற எனது வேண்டுகோளை  அவன் மவுனமாக ஏற்றுக்கொண்டான். முன்பிருந்த ஆக்ரோஷ குணம் இப்போது இல்லை என்றும் அந்த வக்கீல் தெரிவித்தார்.

இன்று தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு மும்பை ஐகோர்ட்டிலும் ஆர்த்தூர் சிறையிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன.

இந்த வீடியோ கான்பரன்சிங் தீர்ப்பின் போது கசாப்பின் 3 வக்கீல்களும் ஆஜர் ஆவார்கள்.

இந்த மிக முக்கியமான தீர்ப்பை அறிந்து கொள்ள வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் ஏராளமானோர் மும்பையில் முகாமிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்