தமிழக தேர்தல் ஏற்பாடு 10 மத்திய தேர்தல் அதிகரிகள் - அடுத்தவாரம் வருகை

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      இந்தியா

 

தமிழக தேர்தல் ஏற்பாடு 10 மத்திய தேர்தல் அதிகரிகள் - அடுத்தவாரம் வருகை

தமிழ்நாட்டிற்கு 10 தேர்தல் அதிகாரிகளை அடுத்தவாரம் தேர்தல் ஆணையம் அனுப்பி வைக்கிறது. இவர்கள் ஓட்டுக்கு பணம் தருவதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவர்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம்ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் வருகிற மே மாதம் நடக்கவுள்ளது. அதற்கான அறிவிப்பு வருகிற மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. 

இப்போதைய தேர்தல்களில் தேர்தல் ஆணையத்திற்கு சவாலாக இருப்பது ஓட்டுக்கு பணம் அளிக்கும் விவகாரம் தான். அதை தடுக்க தேர்தல் ஆணையம் சமீபத்தில் நடந்த பீகார் தேர்தலில் சில யுக்திகளை கையாண்டது. அது ஓரளவு வெற்றியை தந்துள்ளது. எனவே இந்த முறையை வருகின்ற தேர்தல்களிலும் கடைப்பிடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு 10 அதிகாரிகளை தேர்தல் ஆணையம் அடுத்தவாரம் அனுப்பி வைக்கிறது. இவர்கள் அனைவரும் வருமானவரித்துறையின் மத்திய ஆணைய உறுப்பினர்கள் ஆவார்கள். முதற்கட்டமாக இவர்கள் தமிழகத்திலுள்ள வங்கிக்கணக்குகளை ஆய்வு செய்வார்கள். பொதுநிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் அதிக அளவில் பணம் எடுத்தால் அது குறித்து ஆராயப்படும். தேர்தல் காலத்தின்போது ரூ.5 லட்சத்திற்கு மேல் எவர் பணம் எடுத்தாலும் அது பற்றி விசாரிக்கப்படும். வங்கிகளுக்கும் பணம் பட்டுவாடா குறித்து இந்த அதிகாரிகளிடம் வாரம் ஒரு முறை ஆவணங்களை சமர்பிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: