ஆண்டிபட்டி தொகுதியில் ஜெயலலிதா மீண்டும் போட்டியிடக்கோரி விருப்பமனு

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      அரசியல்

 

சென்னை,பிப்.19

ஆண்டிபட்டி தொகுதியில் ஜெயலலிதா மீண்டும் போட்டியிடக்கோரி விருப்பமனு.

தமிழக சட்டசபை தேர்தல் மே மாத வாக்கில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினர் விருப்பமனு தாக்கல் செய்யலாம் என கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். 

மேலும் கட்சியினர் வரும் 23 ம் தேதி வரை விருப்ப மனுக்களை கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதியில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து முன்னாள் எம்.பி.யும், அண்ணா தொழிற்சங்க பேரவையின் முன்னாள் செயலாளருமான எஸ். முத்துமணி நேற்று கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: