முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள சட்டசபையிலிருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

சனிக்கிழமை, 19 பெப்ரவரி 2011      இந்தியா

 

திருவனந்தபுரம்,பிப்.19

கேரள சட்டசபையில் இருந்து காங்கிரஸ் தலைமயிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியினர் நேற்று வெளிநடப்பு செய்தனர். 

மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் படித்து வரும் மாணவிகளில் ஒருவர் மாணவர் யூனியன் அமைப்பில் சேர்ந்து செயல்பட்டு வந்துள்ளார். பின்னர் அதை நிறுத்திக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினார். இதற்கு உடன் பயிலும் சில மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு மீண்டும் கல்லூரி யூனியனில் தீவிரமாக செயல்படும்படி வலியுறுத்தியுள்ளனர். இதற்கு அந்த மாணவி மறுத்துவிடவே சில மாணவர்கள் சேர்ந்து அந்த மாணவியை கிண்டல், கேலி செய்வது,சில நேரங்களில் டூ வீலரில் போகும்போது வழிமறித்து அவமானப்படுத்துவது கொடுமைப்படுத்துவது போன்ற அநாகரீக செயல்களில் அந்த மாணவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இது குறித்து அந்த மாணவி புகார் மனு கொடுத்தும் அரசு சார்பாக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இதை கண்டித்தும் மாணவிக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமை குறித்தும் உடனடியாக விவாதிக்கக்கோரியும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பாக உறுப்பினர் பி.சி.விஷ்ணுநாத் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு சபாநாயகர் அனுமதிக்காததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பெண்கள் கமிஷனிடமும் அந்த மாணவி புகார் மனு அளித்துள்ளார். மாணவியை துன்புறுத்திய மாணவர்களில் ஒருவர், அந்த மாநில அமைச்சராக இருக்கும் ஒருவரின் மகன் என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்